சனி, 31 ஜனவரி, 2009

முஸ்லிம்கள் ஒன்றாக இருப்போமாக

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)

இப்னுமாஜா 11
11 حَدَّثَنَا أَبُو سَعِيْدٍ عَبْدُ اللهِ بْنُ سَعِيْدٍ ثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ قَالَ سَمِعْتُ مُجَالِدًا يَذْكُرُ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِيْنِهِ وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الأَوْسَطِ فَقَالَ هٰذَا سَبِيْلُ اللهِ ثُمَّ تَلاَ هٰذِهِ الآيَةَ ﴿ وَأَنَّ هٰذَا صِرَاطِي مُسْتَقِيْمًا فَاتَّبِعُوهُ وَلاَ تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهِ ﴾ الآية (الاَنْعَام : ۱۵۳)

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு, 'இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!' (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்' என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.(குறிப்பு: அஹ்மத் 4142,4437,15312 தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
விளக்கம்:

அஹ்மத் என்ற ஹதீஸ் நூலில் கீழ்கண்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நேர்கோடு வரைந்தார்கள். 'இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும்' என்றார்கள். அதன் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் கோடுகளை வரைந்தார்கள். 'இவைகள் தான் மற்ற வழிகளாகும், இந்த ஒவ்வொரு வழிகளிலும் சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு இந்த குர்ஆன் வசனத்தை ஓதினார்கள், 'இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!' (அல்குர்ஆன் 6:153) (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: அஹ்மத்)
இந்த ஹதீஸில் 'இவைகள் தான் மற்ற வழிகளாகும், இந்த ஒவ்வொரு வழிகளிலும் சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைக்கிறான்' என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
'இறைவனின் நேரான வழி' என்பது குர்ஆனும் சுன்னாவும் தான் என்பது மிகச் சுருக்கமான விளக்கமாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கீழ்காணும் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் சொல்லும் போது,'இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம், அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்' (அல்குர்ஆன் 6:153)'நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' (அல்குர்ஆன் 42:13)ஜமாத்தில் இணைந்திருக்குமாறு ஈமான் கொண்டவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான், மேலும் ஜமாத்தை விட்டு பிரிவதையும் சண்டையிட்டுக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் மார்க்கத்தில் பிரிவினையை உண்டாக்கியதாலும் சண்டையிட்டுக் கொண்டதாலும் அவர்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் அழிக்கப்பட்டார்கள்' என்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக