கொலை செய்யப்பட்ட நபிமார்கள் பலர் என்று அல்லாஹ்வின் இறுதி வேதமான திருக் குர் ஆன் நமக்கு விவரிக்கின்றது. அல்லாஹ் விதித்த விதியின் அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் அமைந்தாலும் இந்த இரு சாராருக்கும் ஒரு சுய அறிவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமைத்திருக்கின்றான் ஒருவன் அவனுடைய்ய விதியின் அடிப்படையில் தீயவனாக இருந்தாலும் அந்த மனிதன் திருடும் போதோ, கொலை செய்யும் போதோ அவனுக்கு ஒரு உதிப்பு தோன்றுகிறது.
அடடா இது சரியில்லாத செயலாச்சே பாவமாச்சே இதை செய்யக்கூடாது என்று அவனுடைய மனம் அவனுக்கு கட்டளை இடுகிறது. ஆனால் அந்த கட்டளை என்னும் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு சைத்தானின் பக்கமே சாய்ந்து அந்த மாபாதக செயலை செய்து விடுகின்றான். அல்லாஹ்வின் கட்டளை என்னும் சிந்தனை இல்லாமல் சைத்தானின் தூண்டுதல் மட்டும் ஒருவனுக்கு இருந்து அந்த காரியத்தில் ஈடுபட்டு தவறுகளை செய்திருந்தால் மறுமையில் நரக வேதனை என்ற தண்டனை பெற்றிருக்கமாட்டான்.
காரணம் சுய சிந்தனையாக ஒரு உதிப்பு பகுத்தறிவு ஒன்றை உனக்கு அமைத்தேனே தெரியுமா? அதை எப்படி மறந்துவிட்டு அந்த தகாத காரியத்தில் ஈடுபட்டாய் என்று கேட்பான் ஆனால் அவனுக்கு பதிலேதும் இருக்காது.இந்த இறக்கம் என்ற சிந்தனை அவனுக்குள் இருந்தும் தொடர்ந்து மனித சமூகம் மிகப் பெரிய குற்றங்கள் இன்னும் சிறிய குற்றங்கள் என பல தரப்பட்ட வகையில் செய்கின்றனர். இப்படி தவறு செய்பவர்களை குறிப்பிட்டு தான் அல்லாஹு தா ஆலா குர் ஆனில் கூறுகின்றான்.அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம் அது உங்கள் கரங்கள் சம்பாதித்ததால் தான், எனினும் பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான் ( குர் ஆன்:42:30 )
இதனால் தான் இந்த பூமியில் எங்காவது எப்பொழுதாவது பெரும் சீற்றங்கள் மூலம் அல்லாஹ்வின் தண்டனை இந்த உலக மக்களுக்கு கொடுக்கின்றான். ஆனால் பெரும்பாலானவற்றை அவன் மன்னிக்கவில்லை என்றால் இந்த உலக மக்கள் என்றோ எப்பொழுதோ அழிக்கப்பட்டிருப்பார்கள். அல்லாஹ் மகத்தானவன்.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News