புதன், 4 மார்ச், 2009

நல்லவர்களுக்கும் தண்டனை வரும்.

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர பெருமக்களே. இன்று நம்மில் பலர் தான் நல்ல காரியம் செய்தால் போதும் நாம் ஏன் ? பிறருக்கு அறிவுரை சொல்லனும். எதற்காக பதிலுக்கு வாங்கிக் கட்டிக்கனும் என்று பயந்து ஒதுங்கி போவதை பார்க்கின்றோம்.

சிலரோ அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார் நோன்பு நோர்ப்பார், ஹஜ் முதற்க் கொண்டு செய்திருப்பார். ஆனால் அவரிடமோ தொழில் வட்டி சம்பந்தப் பட்டதாக இருக்கும் இவர்கள் ஜக்காத் என்னும் கடமையை மறந்துவிடுவார்கள்.மற்றும் தர்மம் என்பது இவர்களின் அகராதியிலேயே இருக்காது.

இன்னும் சிலர் தாய் தந்தையர் வைத்த பெயரைமட்டும் தாங்கிக் கொண்டு. வெறும் கால்நடைகளைப் போல் உண்டுக் கொண்டும், உறங்கிக் கொண்டும், அலைந்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இஸ்லாத்தின் தாக்கம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. இவர்களிடம் எந்த பலனையும் பிற மக்கள் அடைய முடியாது. இவர்களுக்கு நல்லது, தீயது எது ? என்று தெரியாது.

வெகு சிலரே ! தானும் வணக்க வழிப்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு மற்றவர்களையும். ஈடுபட அறிவுறுத்துவார்கள். நல்லதை ஏவுவார்கள் மேலும் தீயதை தடுப்பார்கள். இவர்கள் போல் தான் அணைத்து முஸ்லிம்களும் தங்களை மாற்றிக் கொல்லனும்.

காரணம். வருடா வருடம் புயல் காற்று என்றும். நிலநடுக்கம் என்றும். பெரு வெள்ளம் என்றும் ஏராளமான உயிரிழப்புகளை நம்மில் பார்த்துகொண்டிருக்கிறோம்.இவைகள் எல்லாம் அல்லாஹ்விடத்திலிருந்து நமக்கு வரும் தண்டனையாகும்.

நாம் நினைப்போம் ஏன் ? நான் என்ன பாவம் செய்தேன். நல்லமுறையில் சம்பாரிக்கவில்லையா ? ஐந்து வேலை தொழவில்லையா ? நோன்பு நோர்க்கவில்லையா ? திக்ர் செய்தேனே. பின்ன எதற்காக அல்லாஹ் இப்படியொரு தண்டனை கொடுக்கவேண்டும் சடுதியில் வீடு வாசலை இழந்து நிராயுதபாணியாக ஆகிவிடுகிரோமே

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதற்காக இப்படியொரு தண்டனையை நமக்கு தரனும். என்று கேள்விகள் பலவை கேட்க்க தோன்றும். ஆனால் ஒரு சமுதாயத்தில் நல்லவர்கள் சரிபாதியாக இருந்து தீயவர்கள் பாதியாக இருந்தால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்

ஆனால் நல்லவர்கள் சிறு தொகையாக இருந்து அக்கிரமக்காரர்கள் மிகுதியாக இருந்தால். அவர்களை தாக்கக்கூடிய வேதனை நம்மையும் தாக்கும் குடும்பத்தார்களை இழப்போம், விவசாயத்தில் நஷ்டத்தை பார்போம், ஒரு வினாடியில் நடு வீதிக்கு வந்துவிடுவோம். இது இறைவனின் குற்றம் ஆகாது.

ஏற்க்கனவே ! அல்லாஹ் நமக்கு கொடுத்த வாக்குறுதிப்படி நல்லதை ஏவ தவறிவிடுவதாலும். கெட்டதை பார்த்து கண்டும் காணாமலும் போனதால் தான் இந்த தண்டனை. ஏன் ? இப்படி செய்யக்கூடாது எங்களை மட்டும் தனியாக பொருக்கி எடுத்து அப்புறப்படுத்திய பிறகு அல்லாஹ் தீயவர்களுக்கு தண்டனை கொடுக்கலாமே !

ஆனால் இறைவன் இப்படி நல்லவர்களையும் சேர்த்து பழிவாங்குகிரானே ! இது அநீதி இல்லையா ? என்றும் யோசனை வரும். ஆனால் நமக்கு அல்லாஹ் இறக்கிய குர்ஆன் வசனத்தின் கருத்து மட்டும் யோசனை வராது. அதை அலட்சியமும் செய்துவிடுகிறோம். அந்த வசனம் என்ன என்பதை பாருங்கள்.

8:25 நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

அதனால் நல்லவர்களை அல்லாஹ் தனியாக செலக்ட் செய்து காப்பாற்றியாகவேண்டும். என்ற நிர்ப்பந்தம் அவனுக்கு இல்லை. ஆகையால் நாம் இந்த இறைவசனத்தை மனதில் வைத்துக்கொண்டு.நாம் மட்டும் நல்ல செயலை செய்துக்கொண்டு இருக்காமல் மற்றவர்களையும் அதை செய்யச் சொல்லி தூண்டி தீயவைகளை கடுமையாக எதிர்க்கவேண்டும். அவமானமோ, ரோஷமோ.இதற்க்கு தடைக் கல்லாக இருக்கக் கூடாது. மேலும் இதன் அடிப்படையில் நம்மை இறைவன் ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.

1 கருத்து: