சனி, 18 ஜூலை, 2009

வஹி அறிவிக்கப்பட்ட தாய் !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அன்பிர்க் குரிய சகோதரர்களே ! நாம் பலவாறாக இறைச் செய்தியை வல்ல ரஹ்மான் ஜிப்ரீல் ( அலை ) மூலம் மாந்தர்களுக்கு நேர்வழி காட்டும் முகமாக ஆதாம் நபி முதற்கொண்டு இறுதி நபியாகிய முஹம்மது ( ஸல் ) அவர்கள் வரை ஆண் பாலரிலிருந்தே நபியை அனுப்பியுள்ளான்.

திருக் குர்ஆனின் போதனையும் இந்த வரைமுறைக்கு உட்பட்டதே ! அதாவது நபியோ அல்லது. ரசூலோ அனைவரும் ஆண் இனமே அல்லாமல் பெண் இனத்தில் எந்த தூதரும் கிடையாது. அது. அல்லாஹ்வின் நியதி. அது மனிதர்களுக்குண்டான நியதி.

ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். தனக்கென்று எந்த நியதியும் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுளோம். ( வஹி ) என்ற இறைச்செய்தியை ஜிப்ரீல் ( அலை ) மூலமும் நபி மூஸா ( அலை ) இடம் அருளியுள்ளான். வானவர் ஜிப்ரீல் அல்லாமலும் திரைக்கு அப்பாளிலிருந்தும் மூசாவிடம் பேசியுள்ளான் என்பதும் யாவரும் அறிந்ததே !

அந்த வஹி என்ற இறைச்செய்தியை தனிப்பட்ட முறையில் வேத வெளிப்பாடு அல்லாமல் நம்பிக்கையாளர் ஒழுக்கச் சீலர் என்ற முறைப்படி மற்ற பாலருடனும் அல்லாஹ் பேசியுள்ளான். என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அது தான் உலகத்தின் உயர்ந்தப் பெண்மணி மரியம் ( அலை ) அவர்கள். அனைவரும் அறிந்ததே.

மற்றொரு தாய். அவர் தான் நபி மூஸா ( அலை ) அவர்களின் தாய் அவரிடமும் ஏக இறைவன் வஹி மூலம் பேசியுள்ளான். அதைப் பாருங்கள்

28:7 நாம் மூஸாவின் தாயாருக்கு: 'அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம் நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்' என்று வஹீ அறிவித்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக