சனி, 31 ஜனவரி, 2009

கிறிஸ்தவ பைபிளில் முஹம்மத் (ஸல்)

நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது...? அறிஞர் அஹமத் தீதாத் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த... கணனியாக்கம் முஹை

அன்பின் சகோதரர்களே! சகோதரிகளே!!

இன்று மாலை நான் உங்களிடயே சொற்பொழிவாற்ற எடுத்துக் கொண்ட தலைப்பு 'முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது..? என்பதாகும். நான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் இந்தத் தலைப்பு உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். யூத, கிறிஸ்தவ வேத நூல்களிலிருந்து இறைவனின் முன்னறிவிப்புகளை ஒரு முஸ்லிம் எவ்வாறு எடுத்துக் காட்ட இயலும் என்று கேள்வியும் உங்கள் மனதில் எழலாம்.

1. கிறிஸ்தவ அறிஞர் உரை.

எனது இளவயதில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் (தென் ஆப்பிரிக்காவின்) டர்பன் நகரில் 'தியேட்ட ராயல்' என்ற இடத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு, ரெவரெண்ட ஹைடென் (ர்வைநn) என்ற கிறிஸ்தவ அறிஞரின் உரையைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.
அவர் தனது உரையில் பைபிளில் கூறப்படும் பல முன்னறிவிப்புகளை விவரித்தார். மறுவுலக வாழ்க்கை, பிற்காலத்தில் உலகில் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகள், சோவியத் ரஷியாவின் உதயம் போன்ற அனைத்துச் செய்திகளையும் பைபிள் முன் கூட்டியே இவ்வுலகிற்கு அறிவித்துள்ளது என்று நிரூபித்தார். மேலும் இவரது சொற்பொழிவின் ஒரு கட்டத்தில், போப் பற்றிய செய்தியைக்கூட விட்டு விடாது பைபிள் முன் கூட்டியே விவரித்துள்ளது எனத் திட்டவட்டமாகக் கூறினார். அதற்கு ஆதாரமாக புதிய ஏற்பாட்டிலிருந்து..

'இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக் கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதனுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (வெளிப்பாடு அத்தியாயம் 13, வசனம் 18) என்கிற வசனத்தைக் குறிப்பிட்டார்.

இவ்வசனம் இப்பூமியில் கிறிஸ்துவின் ஏகப் பிரதிநிதியான போப்பைக் குறித்துத்தான் செய்தி அறிவிக்கிறது என்றார். ரோமன் கத்தோலிக் மற்றும் புரோடெஸ்டண்ட் கிறிஸ்தவப் பிரிவுகளுக்கு இடையேயுள்ள கருத்து வேற்றுமைகளில் உட்புகுவது முஸ்லிம்களுக்கு பொருத்தமற்றதாகும். (இந்த வசனம் யாரைக் குறிக்கிறது என்பதில் கிறிஸ்தவ மதத்தின் இருபெரும் அங்கங்களான கத்தோலிக்கர்களுக்கும், புரோடெஸ்டண்ட்டுகளுக்குமிடையே கருத்து வேறுபாடுள்ளது)

கிறிஸ்தவ அறிஞர்கள் தாங்களாகவே சில கொள்கைகளைக் கற்பித்து அவர்களது வாதங்களை நிரூபிக்க முயல்கிறார்கள்.

2. இள நெஞ்சில் எழுந்த வினா?

ஹைடென் அவர்களின் சொற்பொழிவு என்னுள் ஒரு வினாவை எழுப்பியது. போப், இஸ்ரேல், பிற்கால நிகழ்ச்சிகள் பற்றி பைபிள் முன்னரே தெரிவித்துள்ளது என்றால் இறைவனின் இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்கள் குறித்து அது நிச்சயமாக ஏதேனும் கூறியிருக்க வேண்டும்.

எனது இளவயதில் இவ்வினாவிற்கான விடையைத் தேடி அநேக கிறிஸ்தவ அறிஞர்களுடன் விவாதித்தேன். பல கிஸ்தவ சொற்பொழிவுகளில் கலந்து கொண்டேன் பைபிளில் கூறப்படும் முன்னறிவிப்பகள் குறித்து எனது கைக்குக் கிடைத்த செய்திகள், புத்தகங்கள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன்.

3. வராமல் வந்த வான்ஹீர்டென்.

இன்று இரவு உங்களுக்கு டச் ரிஃபார்ம்ட் சர்ச் (னுரவஉh சுநகழஅநன ஊhரசஉh) உடைய கிறிஸ்தவ மத போதகர் ஒருவருடன் நான் நடத்திய பேட்டியினை விவரிக்க விரும்புகிறேன்.
நான் பங்கேற்று உரையாற்ற வேண்டுமென ட்ரான்ஸ்வால் நகரிலிருந்து ஒரு தடவை அழைப்பு வந்தது. தென் ஆப்பிரிக்காவின் இப்பகுதியில் 'ஆப்பிரிக்கன்' மொழியே அனைத்து மக்களாலும் பேசப்படும் பொது மொழி. இம்மொழியில் சிறிது தேர்ச்சி பெற்றால் அங்கு செல்லும் போது இம்மக்களுடன் உடையாடுவதற்கும் பழகுவதற்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணினேன்.
எனவே ஆப்பிக்கன் மொழி பேசும் கிறிஸ்தவ மத போதகர்கள் பலருடனும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்த விரும்புவதாகத் தெரிவித்தேன். ஒவ்வொருவரும் பல காரணங்களைக் கூறி எனது வேண்டுகோளை மறுத்து விட்டனர். மேலும் தொடர்ந்து முயற்சி செய்தபோது தொடர்பு கொண்ட பதிமூன்றாவது இடத்திலிருந்து எனக்கு சம்மதம் கிடைத்தது. எனது விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தவர் மரியாதைக்குரிய 'வான் ஹெர்டீன்' ஏயn ர்நசனநநn என்ற கிறிஸ்தவ போதகர்.
நான் ட்ரான்ஸ்வால் நகருக்குப் புறப்பட இருந்த சனிக்கிழமை பிற்பகல் அவரது வீட்டில் எங்கள் உரையாடலை நடத்தலாம் என்று 'வான்' தெரிவித்தார் அவரது வீட்டிற்குச் சென்ற என்னை நட்புடன் வரவேற்று உபசரித்தார். நான் தவறாக நினைக்கவில்லை என்றால் ஃபிரீ ஸ்டேட்டிலிருந்து வந்திருந்த 70 வயதான தனது மாமனாரையும் எங்கள் உரையாடலில் அனுமதிக்க விரும்பினார். இதற்கு மகிழ்வுடன் என் சம்மதத்தைத் தெரிவித்தேன். நாங்கள் மூவரும் போதகர் வானின் நூல் நிலையத்தில் அமர்ந்து எங்கள் உரையாடலைத் தொடங்கினோம்.

4. விவாதம் தொடங்கியது முஹம்மதை மட்டும் மறக்குமா பைபிள்..?
'இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது? வினாவை எழுப்பி விவாதத்தைத் தொடங்கினேன்.
''ஒன்றும் கூறவில்லை'' சிறிதும் தயக்கமில்லாமல் விடையை உதிர்த்தார் வான்.

'உங்களுடைய விளக்கங்களின்படி உலக இறுதி நாட்கள், சோவியத் ரஷ்யாவின் உதயம், ரோமன் கத்தோலிக்கர்களுடைய போப் போன்ற அனைத்துச் செய்திகளையும் முன்னதாகவே இவ்வுலகிற்கு அறிவித்துள்ள பைபிள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி மட்டும் ஏன் ஒன்றும் அறிவிக்கவில்லை?' கேட்டேன் நான்.

'' அனைத்து செய்திகளையும் முன் கூட்டியே பைபிள் அறிவித்துள்ளது உண்மைதான், ஆனால் அதில் முஹம்மது (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு ஏதுமில்லை'' பதிலளித்தார் வான்.

'ஏன் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி அதில் முன்னறிவிப்பு ஏதுமில்லை? நிச்சயமாக அம்மனிதர் உலக சமுதாயத்தின் கோடிக் கணக்கான இறைநம்பிக்கையாளர்களை உருவாக்கவதற்குக் காரணமாக இருந்தார்கள். மேலும் அம்மனிதரின் கட்டளைப்படி இறை நம்பிக்கையாளர்கள் ஏசு பிறப்பு அதிசயமானதே என்றும் - ஏசு மஸீஹ் இறைவனின் தூதரே என்றும் - ஏசு இறைவனின் அனுமதியின் பேரில் இறந்தவர்களை உயிர்ப்பித்தார், பிறவிக் குருடர்களையும் குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார் என்றும் முழு நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஏசுவைக் குறித்தும் அவரது தாயார் மரியாளைக் குறித்தும் மிக உயர்வாகக் கூறியுள்ள தலைசிறந்த இத்தலைவரைப் பற்றி பைபிள் ஏதேனும் கூறியிருக்க வேண்டுமே?' என்று மீண்டும் வினவினேன்.

ஃபிரீ ஸ்டேட்டிலிருந்து வந்திருந்த பெரியவர் என்னிடம் ''மகனே கடந்த 50 ஆண்டுகளாக பைபிளைப் படித்து வருகின்றேன், முஹம்மது குறித்து பைபிள் ஏதேனும் தெரிவித்திருந்தால் நான் அதனை அறிந்திருப்பேன்'' என்றார்
'கிறிஸ்தவ அறிஞர்களின் விளக்கத்தின்படி பழைய ஏற்பாட்டில் ஏசு கிறிஸ்துவின் வருகை பற்றிய முன்னறிவிப்புகள் நூற்றுக்கணக்கில் காணப்படுவதாகக் கூறுகிறார்களே' என்றேன்.

எனது கேள்வியை இடைமறித்து ''நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் முன்னறிவிப்புகள் வந்திருக்கின்றன'' என்று போதகர் வான் கூறினார்.
நான் கூறினேன் ' பழைய ஏற்பாட்டில் உள்ளதாகக் தாங்கள் கூறும் முன்னறிவிப்புகள் ஆயிரத்து ஒன்று குறித்து நான் ஏதும் முரண்பாடு கொள்ளவில்லை ஏனெனில்.. முஸ்லிம் சமுதாயம் பைபிளின் அத்தாட்சிகள் ஏதும் இல்லாமலேயே ஏசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்டு விட்டது - கிறிஸ்தவர்கள் பைபிளின் முன்னறிவிப்புகளைக் கூறி ஏசுவைப் பற்றி முஸ்லிம்களுக்கு விளக்கம் கூறுவதற்கு முன்னரே முஹம்மது (ஸல்) அவர்கள் ஏசுவைச் சிறப்பித்துக் கூறினார்கள் - அந்த வழி முறையைப் பின்பற்றி இவ்வுலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஏசுவின் மீது அன்பும், மரியாதையும், கண்ணியமும் கொண்டு, அவர்கள் இறைவனின் சிறந்த தூதர் என்று முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் கேட்பதெல்லாம் இதுதான்...

தாங்கள் கூறிய ஆயிரம் முன்னறிவிப்புகளிலிருந்து ஏதேனும் ஒன்றில் ஏசுவின் பெயருடன் கூடிய அறிவிப்பை எனக்குக் காட்ட முடியுமா?
மஸீஹ் என்பவர் ஏசு என்றோ...

மரியாள் ஏசுவினுடைய தாயாராக இருப்பார் என்றோ...
அவரது தந்தையாகக் கருதப்பட்டவர் யோசேப்பு என்ற தச்சராக இருப்பார் என்றோ காணப்படவில்லையே - இவ்வாறிருக்க ஏசு பற்றிய முன்னறிவிப்புகள் ஆயிரக்கணக்கில் காணப்படுவதாக எவ்வாறு உறுதியாகக் கூறுகிறீர்கள்..?

போதகர் வான் பதிலளித்தார் 'பைபிளின் முன்னறிவிப்புகள் என்பது நிகழப்போகும் விஷயங்கள் குறித்து வார்த்தைகளால் வரையப்படும் ஒரு படம் ஆகும், அந்நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்ட பின்னர் இதற்குண்டான பைபிளின் முன்னறிவிப்ப இதுதான் என்று நிர்ணயம் செய்து கொள்கிறோம்''
நான் வாதிட்டேன் 'பைபிள் ஆயிரம் முன்னறிவிப்புகளை இவ்வாறு நிர்ணயம் செய்து ஏசுவைப்பற்றி இம்முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன என்று கூறுவதானால் முஹம்மது (ஸல்) அவர்கள் விஷயத்திலும் ஏன் தங்களுடைய இந்த நிர்ணயக் கொள்கையை நாம் பின்பற்றக் கூடாது?'
எனது வாதத்தை கிறிஸ்தவ போதகர் ஏற்றுக்கொண்டார்.

5. உபாகமம் உரைப்பது என்ன..?

பழைய ஏற்பாட்டிலிருந்து...
''உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்களின் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், (அவர்) நான் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்'' (உபாகமம் அதிகாரம் 18, வசனம்18)
என்ற பைபிளின் வசனத்தை எனது நினைவிலிருந்து ஆப்பிரிக்கான் மொழியில் கூறினேன் 'எனது உச்சரிப்பில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா?' என்று கேட்டேன். நான் நல்ல முறையில் அம்மொழியில் உரையாடுவதாக போதகர் பாராட்டினார்.
'பைபிளின் இவ்வசனம் யாரைக் குறித்து முன்னறிவிப்புக் கூறியுள்ளது?' என்று நான் கேட்டேன்.
போதகர் உடனே ''ஏசுவைப்பற்றி அறிவிக்கின்றது'' என்றார்.
ஏன் ஏசுவைப்பற்றி அறிவிக்கின்றது என்கிறீர்கள் அவரது பெயர் இங்கு காணப்படவில்லையே?' என்று நான் கேட்டேன்.
''பைபிளின் முன்னறிவிப்புகள் என்பது பின்னர் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளைக் குறித்து வார்த்தைகளால் படம் போல் தெரிவிப்பதாகும். என்றும் இவ்வசனம் ஏசுவிற்கு முற்றிலும் பொருந்தியுள்ளது என்றும் மேலும் உன்னைப் போல் (மோசேவை - நபி மூஸா (அலை) போல்) என்னும் பதம் நிச்சயமாக (ஏசு என்பவர் மோசேவைப் போல என்று) ஏசுவைத்தான் குறிக்கின்றது'' என்றும் போதகர் பதில் சொன்னார்.
'எந்த விதத்தில் ஏசு மோசையைப் போன்றவர் என்று கூறுகிறீர்கள்?' என்றேன்
முதலாவதாக ''மோசே ஒரு யூதர், அதுபோல் ஏசுவும் ஒரு யூதர். அடுத்து மோசே இறைவனின் தீர்க்கதரிசி, அதுபோல் ஏசுவும் தீர்க்கதரிசி எனவே உன்னைப் போல் என்ற பதம் ஏசுவிற்கு முற்றிலும் பொருந்தியுள்ளது, இறைவன் மோசேயிடம் முன்னறிவிப்பாகக் கூறியதும் ஏசுவைப் பற்றியே என்பதால் இம்முன்னறிவிப்பும் ஏசுவைக் குறித்தே கூறுகிறது'' என்றார்.
'வேறு ஏதேனும் ஒற்றுமைகள் மோசேவிற்கும் ஏசுவிற்குமிடையே உள்ளதாகத் தங்களுக்கு நினைவுள்ளதா?' என்று நான் கேட்டேன்.
''இவ்விரண்டைத் தவிர ஒற்றுமைகள் ஏதும் இல்லை'' என்று தெரிவித்தார் போதகர்.
(வளரும் இறைவன் நாடட்டும்)

தமிழ் மின் ஊடகத்தின்
றறற.iனாரவாயnளைடயஅ.உழஅ
part 2

நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது...? அறிஞர் அஹமத் தீதாத் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த... கணனியாக்கம் முஹை
(முந்தைய பக்கம்) தொடர் ௨

6 உபாகமம் குறிப்பது ஏசுவையல்ல.!

இரண்டு ஒற்றுமைகளை மட்டுமே அளவுகோலாகக்கொண்டு இவ்வசனத்திற்குப் பொருத்தமானவர் ஏசுதான் என்று நீங்கள் முடிவு செய்தால் மோசேவிற்குப் பின்னால் தோன்றிய, சாலமோன், ஏசாயா எசக்கியேல், தானியேல், லுசியா, யோவல், மல்கியா, யோவான் ஸ்நானன் போன்ற...
பைபிளில் கூறப்படும் பிரமுகர்கள் அனைவரும் யூதர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் உள்ளனரே! எனவே இவ்வசனத்தில் கூறப்படுபவர், இப்பிரமுகர்களில் எவரேனும் ஒருவராக இருக்கக்கூடுமே!
ஏன் ஏசுவை மட்டும் இவ்வசனத்திற்கு ஒப்பிடுகிறீர்கள்..? என்று நான் வினா எழுப்பினேன். போதகர் எனக்கு பதில் ஏதும் கூறவில்லை.
7 மோசேவைப் போன்றவர் முஹம்மதே, ஏசு அல்ல.!
எனது விளக்கத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டும்படி அவரிடம் வேண்டிக்கொண்டு, ஏசு மோசேவிடம் இருந்து பலவிதங்களில் மாறுபடுகிறார் என்கிற எனது முடிவைக் கூறத் தொடங்கினேன். அதற்கான அறிவுப்பூர்வமான காரணங்களை பின் வருமாறு வரிசைப் படுத்திக் கூறலானேன்.
கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி.
ஏசு கடவுள் - ஆனால் மோசே கடவுள் அல்ல.
ஏசு உலகத்தாரின் பாவங்களுக்காக, தன் உயிரை நீத்தார் - ஆனால் மோசே உலகத்தாரின் பாவங்களுக்காக உயிர் துறக்கவில்லை.
ஏசு மூன்று நாட்கள் நரகத்திற்குச் சென்றிருந்தார் - மோசே நரகத்திற்குச் செல்லவில்லை.
எனவே ஏசு மோசேவைப் போன்றவர் என்று ஒப்பீடு செய்வது பொருத்தமானதல்ல, என்ற விளக்கத்தைக் கூறினேன். மேற்கூறிய வேற்றுமைகளைக் கொண்டு மட்டும் எனது வாதத்தை உண்மை என்று தாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்னும் அநேக அம்சங்களில் ஏசுவும் மோசேயும் தங்களுக்குள் வேற்றுமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவை என்னென்ன..?

அ. பெற்றோர் விஷயத்தில்.

1. மோசேயும், முஹம்மதும் தாய் தந்தை உடையவர்களாக இருந்தார்கள், ஆனால் ஏசு தாய் மட்டுமே உடையவராக இருந்தார், எனவே ஏசு மோசேயைப் போன்றவரல்ல, ஆனால் முஹம்மது மோசேயைப் போன்றவர்.

ஆ. பிறப்பு முறையில்.

2. மோசே, முஹம்மத் இவ்விருவரின் பிறப்பும் இயற்கையாகவும்,
சாதாரணமாகவும் இருந்தது ஏசுவின் பிறப்பு அதிசயமானதாக இருந்தது. ஏசுவின் பிறப்பு குறித்து பைபிளின் புதிய ஏற்பாட்டில்...
'ஏசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விபரமாவது, அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.' (மத்தேயு அதிகாரம்-1 வசனம்-18) என்றும்.
மரியாளுக்கு பிறக்க இருந்த குழந்தை புனிதமானதாக இருக்கும் என்பதை பைபிள் கூறும் சமயம்..

'தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக, பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்'. (லூக்கா அதிகாரம்-1 வசனம்-35)

என்றும் புதிய ஏற்பாட்டில் ஏசுவின் அதிசயப் பிறப்பு குறித்து உறுதி கூறுகிறது. இன்னும் திருக்குர்ஆன்...
(அதற்கு மரியம் தன் இறைவனை நோக்கி) 'என் இறைவனே எந்தவொரு மனிதரும் என்னைத் தீண்டாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்'? என்று கூறினாள். (அதற்கு இறைவன்) 'இவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை (ப்படைக்க) நாடினால் அதனை 'ஆகுக' என்றுதான் கூறுவான் உடனே அது ஆகிவிடும்' என்று கூறினான். (திருக்குர்ஆன் - 3:47)

என்று ஏசுவின் பிறப்பின் அதிசயத்தை சிறப்பித்துக் கூறுகிறது, இறைவன் ஒரு மனிதனையோ ஒரு பொருளையோ படைக்க நாடினால், அப்பொழுதே அது உருவாகிவிடுகிறது என்பதுதான் ஏசுவின் பிறப்பைக் குறித்து முஸ்லிம்களுடைய கருத்து. இதன் மூலம் ஏசுவினுடைய பிறப்பு அதிசயமானது என்றும் மோசே, முஹம்மத் இவ்விருவரின் பிறப்பும் இயற்கையானது என்றும் விளங்கும்.
எனவே 'உன்னைப்போல்' என்ற வசனம் (ஏசுவின் பிறப்பு மோசேயின் பிறப்பிலிருந்து மாறுபடுவதால்) முஹம்மத் (ஸல்) அவர்களையே குறிக்கின்றது.
இ. வாழ்க்கை நிலையில்.

3.மோசேயும், முஹம்மதும் திருமணம் செய்து கொண்டவர்களாகவும், சந்ததியுடையவர்களாகவும் இருந்தனர். ஆனால் ஏசு வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்தார். எனவே மோசேயும், முஹம்மதும் தமக்கிடையே ஒற்றுமை உள்ளவர்களாகவும் இருந்தனர்.

ஈ. மக்களின் நம்பிக்கையை பெற்றதில்.

4. மோசே, முஹம்மத் இவ்விருவரும் அவர்களின் ஆயுட்காலத்திலேயே அவர்களது மக்களால் 'இறைவனின் தீர்க்கதரிசிகள் இவர்கள்' என்று ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
மோசேவுக்கு அநேக தொல்லைகளையும் துன்பங்களையும் யூதர்கள் (இஸ்ரவேலர்கள்) இழைத்தார்கள். இருந்தபோதிலும் 'இறைவனால் தங்களுக்கு அனுப்பப் பட்ட தீர்க்கதரிசிதான் இவர்' என்று மோசேயின் ஆயுட்காலத்திலேயே அவரை ஏற்றுக்கொண்டனர்.
இடைவிடாது 13 ஆண்டுகள் உபதேசங்கள் செய்து மக்களை நல்வழிப் படுத்திட முயன்றார் முஹம்மத், அரபியர்கள் அவருக்குப் பல இன்னல்களை இழைத்தனர், இடைஞ்சல்களை ஏற்படுத்தினர், மக்கா நகரைவிட்டு வெளியேற்றவும் செய்தனர். ஆனால் முஹம்மதின் ஆயுட்காலத்திலேயே அவரை 'இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் இவர்' என்று முற்றிலுமாக ஏற்றுக் கொண்டனர்.
இன்று 2000 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இஸரவேலர்கள் (யூதர்கள்) ஏசுவை இறைவனின் தீர்க்கதரிசி என ஏற்றுக் கொள்ளவில்லை. இதை பைபிளின் புதிய ஏற்பாடு தெளிவு படுத்துகின்றது.

அவர் தமக்குச் சொந்தமானதிலேயே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. (யோவான் அதிகாரம்-1 வசனம்-11

உ. ஆட்சியதிகாரம் செலுத்தியதில்.

5. மோசேயும், முஹம்மதும் இறைவனின் தீர்க்கதரிசிகள் மட்டுமல்லாது அவர்களது மக்களுக்கு தலைமையேற்ற அரசர்களாகவும் இருந்தனர். தீர்க்கதரிசி என்பவர் மனிதர்களை நேர்வழியில் நடாத்திட இறைவன் அருளும் புனிதக் கட்டளைகளைப் பெற்று அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் மக்களுக்கு அறிவிப்பவர் ஆவார்.

ஒருமனிதன் அரசன் என மகுடம் சூட்டிக் கொள்ளாவிட்டாலும், அவனது மக்களிடையே சட்டத்தை நிலை நாட்டுபவனாகவும், தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் (மரண தண்டனை விதிக்கும்) அதிகாரம் உடையவனாகவும் இருந்தால் அவன் அரசனாகவே கருதப்படுவான்.
தனது மக்களிடம் மோசே மரண தண்டனை வழங்கும் அதிகாரம் உடையவராக இருந்தார். அவரது தண்டனை விதிக்கும் அதிகாரத்தினால் ஓய்வு நாளில் விறகு சேகரித்த யூதனைக் கல்லெறிந்து கொன்றார்கள் என்பதை பைபிளின் பழைய ஏற்பாடு விவரிக்கிறது.

'அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே அவனைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய்க் கல்லெறிந்தார்கள் அவன் செத்தான்' (எண்ணாகமம் அதிகாரம்-15 வசனம்-36)

இது மட்டுமல்லாது இஸ்ரவேலர்கள் இழைத்த தவறுகளுக்காக, பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மோசேயினால் மரண தண்டனை அளிக்கப்பட்டதை பைபிள் எடுத்துரைக்கிறது.
முஹம்மதும் மோசேயைப் போன்று இறைவன் விதித்த சட்டங்களை நிலை நாட்டவும், மரண தண்டனை வழங்கிடவும் தனது மக்கள் மத்தியில் அதிகாரம் உடையவராக இருந்தார்.

தீர்க்கதரிசிகள் சிலர், இறைவனின் புனிதக் கட்டளை அருளப் பெற்றவர்களாக இருந்தும், மக்களிடையே இக்கட்டளைகளை செயல்படுத்திடவும், அதிகாரம் செய்ய இயலாதிருந்தனர், என்பதை பைபிளில் பல இடங்களில் காணலாம்.
லோத் (லூத்நபி), யோனா (யூனுஸ்நபி), எஸ்றா யோவான் ஸ்நானன் (யஹ்யாநபி) போன்ற தீர்க்கதரிசிகள் அறிவித்த புனிதச் செய்திகள் அவர்களுடைய மக்களால் முழுமையாக மறுக்கப்பட்டு விட்டன. துரதிஷ்ட வசமாக ஏசுவும் மேற்கூறிய பட்டியலில்தான் இடம்பெறுகிறார் என்பதையும் பைபிள் உறுதி செய்கிறது.
ஊ. பைபிளின் சாட்சியம்.

ஏசுவை ராஜா துரோகக் குற்றம் சாட்டி ரோமன் தேசாதிபதி பொந்தியு பிலாத்து (pழவெரைள Pடையவந) முன்பாக விசாரணைக்கு கொண்டு சென்றிருந்தார்கள். இச்சமயம் ஏசு குற்றத்தை மறுத்து, தனது இராஜ்யம் இவ்வுலகுக்குரியதல்ல என்றும், தனது இராஜ்யம் இறைவனது இராஜ்யத்தைக் குறிப்பதாகும் என்றும் தெரிவித்தார்.

'ஏசு பிரதியுத்தரமாக, என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக் கொடுக்காதபடிக்கு என் ஊழியக்காரர்கள் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றார்'. (புதிய ஏற்பாடு: யோவான் அதிகாரம்-18 வசனம்-36)
இந்த பதிலால் முழுத் திருப்தியடைந்த பிலாத்து ஏசுவினால் தனது ராஜ்யத்திற்கு தீங்குகள் ஏதுமில்லை என்றும். இவர் கூறும் ராஜ்யம் இறைவனது ராஜ்யத்தைப் பற்றியது என்றும் சமாதானம் அடைந்தான்.
எனவே ஏசு தம்மக்களிடம் இறைவனால் அருளப்பெற்ற புனிதக் கட்டளைகளை அறிவிக்க மட்டுமே முடிந்தது, அதிகாரம் செய்ய இயலவில்லை என்பதை அறியலாம் ஆகையால் ஏசு மோசேயைப் போல் அல்ல, ஆனால் முஹம்மது மோசேயை ஒத்திருக்கிறார்.
எ. புதிய சட்ட அமைப்புக் கொண்டு வந்ததில் மறு சீரமைப்புப் பணியில்.
6. முஹம்மது அரேபிய மக்களிடையே நிலவி வந்த அறியாமையையும், மூட பழக்க வழக்கங்களையும் அகற்றி அவர்களை நல்வழிப்படுத்தினார். முஹம்மது தனது மக்களின் (அரேபியர்களின்) நடைமுறையாக இருந்து வந்த வழக்கங்களான..
வளர்ப்புத் தாயை திருமணம் செய்து கொள்ளுதல்.
பெண் மகவுகளை உயிருடன் புதைத்தல்.
மது அருந்துதல்.
பிறர் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல்.
சிலை வணக்கம் செய்தல், சூதாடுதல், போன்ற கொடிய செயல்களை விட்டுத் தடுத்து அவர்களை நேர்வழிப்படுத்தினார்.
ஏ. வரலாற்று அறிஞர்களின் மனமார்ந்த சான்றுகள்.
பேராசிரியர் கிப்பன் (புiடிடிழn) என்ற வரலாற்று ஆசிரியர் தனது ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும், (னுநஉடiநெ யனெ குயடட ழக சுழஅயn நுஅpசைந) என்கிற நூலில் முஹம்மதுக்கு முன் உள்ள காலத்தில் வாழ்ந்து வந்த அரேபிய மக்களைப் பற்றித் தெரிவிக்கும்போது பின் வருமாறு கூறுகிறார்...
'இவர்கள் அறிவற்ற காட்டுமிராண்டிகளாக, மனிதர்கள் எனக் கருதக்கூடிய (ஒழுக்க ரீதியான) அடையாளம் ஏதுமில்லாது விலங்குகளாகக் காணப்பட்டனர். மிருகங்களுக்கும் இம்மனிதர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்பது இவர்களது மனித உருவம் மட்டும்தான் என்றிருந்தது'.
இவ்வாறு அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த மக்களை முஹம்மது நேர்வழிப் படுத்திய செய்தியை தாமஸ் கார்லைல் (வுhழஅழள ஊயசடலடந) தனது நூலில் தனது நூலில் (in வழ வுழசஉh டீநயசநசள ழக டுiபாவ யனெ டுநயசniபெ) பின் வருமாறு வர்ணிக்கிறார்...
'அரேபியா தனது இருளில் இருந்து புதிய வெளிச்சத்தைப் பெற்று அறியாமைக் களைந்தது. இவ்வுலகின் ஆரம்ப காலந்தொட்டே பாலைவனங்களில் ஆடு மேய்த்துக் கொண்டு ஒருவராலும் அறியப்படாமலிருந்து வந்த இம்மக்கள் உலக சமுதாயத்தில் தலை சிறந்தவர்களாக ஒளிரத் தொடங்கினர், முஹம்மதின் இந் நல்லொழுக்கம் கிரனாடாவிலிருந்து டெல்லி வரை பரவி, நூறு ஆண்டுகளுக்குள் அரேபியாவை புகழ் பெற்ற நாடாக மாற்றியது'.
இந்த சான்றுகள் பறைசாற்றும் உண்மை என்ன?, இவையெல்லாம் நமக்கு எதைக் காட்டுகின்றன? முஹம்மது (ஸல்) அவர்கள், தனது மக்களுக்கு முன்பு எப்போதுமில்லாத புதிய சட்டங்களையும், சீர் திருத்தங்களையும் கொண்டு வந்தார் என்பதையே இவையனைத்தும் நமக்குக் காட்டுகின்றன.
ஐ. ஏசுவின் அந்தஸ்து - பைபிளின் சான்றுகள்.
ஏசு தங்களது பழைய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் பழக்க நெறிகளைபும் மாற்றுகிறாரோ, என்று சந்தேகம் கொண்ட இஸ்ரவேலர்கள், இது பற்றி வினவியபோது அவர் புதிய வழிமுறைகளையோ, சட்டங்களையோ தாம் நடைமுறைப்படுத்தவில்லை - என்பதைத் தெளிவாகக் கூறுகிறார்.
'நியாயப் பிரமாணத்தையானாலும் அழிக்கிறதுக்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள், அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்' (புதிய ஏற்பாடு மத்தேயு அதிகாரம்-5 வசனம்-17)
'வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்., நியாயப் பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உருப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (புதிய ஏற்பாடு மத்தேயு அதிகாரம்-5 வசனம்-18)
ஆகையால் ஏசு புதிய சட்ட திட்டங்கள் எதையும் தனது மக்களிடம் நடைமுறைப் படுத்தவில்லை, என்றும் பழைய சட்டங்களையே பின்பற்ற வந்தார் என்றும் உணர்ந்து கொள்ளலாம். இவர் மோசேவினுடைய (நபி மூஸா (அலை) அவர்களுடைய) கட்டனைகளைப் பின்பற்றியும் ஓய்வு நாளை (சப்த் - சனிக்கிழமையை) கண்ணியப்படுத்தியும் வந்தார்.
எந்தவொரு யூதரும் ஏசுவிடத்தில் 'தாங்கள் செய்வது புதிய செயல் முறையாக இருக்கின்றனவே?' என்று ஏசுவிடம் வினவியதாகக் காணப்படவில்லை. எனவே ஏசு, மோசேவிடமிருந்து மாறுபடுகிறார், முஹம்மதை ஒத்திருக்கிறார்.
('உன்னைப் போல்' என்பது மோசேயைப் போல், முஹம்மதுதான், என்ற சான்றுகள் இன்னும் வரும்)
நன்றி.
தமிழ் இஸ்லாமிய ஆராய்ச்சி ஊடகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக