வெள்ளி, 30 அக்டோபர், 2009

இயற்க்கை உறவுமுறைகளை மாற்றுவது பெரும்பாவம்

மனிதர்களில் பலர் மனைவிகளைப் பார்த்து தாய்க்கு ஒப்பாக நினைத்து அழைப்பது. அல்லது தாயை போல் மனைவி இருக்கின்றார் என்று சொல்வது கூட இறைவனிடம் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் பாவம் ஆகும்.

அதே போல் வளர்ப்பு பிள்ளையையும் பெற்ற மகனுக்கு ஒப்பிட்டு மகனே ! என்று அழைப்பதும் தவறாகிவிடுகிறது. காரணம் எது எந்த அடிப்படையில் இருக்கின்றதோ ! அதை தழுவி தான் நாம் அழைத்துக் கொள்ளவேண்டும் அல்லாமல் நாமலாக உறவு முறைகளை உருவாக்கி கொள்ளக் கூடாது என்பது தான் இறைவனின் கட்டளை.

உதாரணத்திற்கு பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சின்னப்பா, இப்படி இயற்கையாக உள்ள உறவு முறைகள் நாம் ஏற்படுத்திக் கொண்டது கிடையாது. நமக்கு இறைவனால் கிடைக்கப் பெற்றவை அது போலவே சகோதரி கணவன் மச்சான் என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு. தம் சகோதரிக்கு கணவனை நாம் தேர்ந்தெடுக்கின்ற காரணத்தால் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு என்கிறோம். இதில் மச்சான் உறவு முறை அற்றுப் போய்விடவும் சாத்தியக் கூறு உள்ளது. அல்லது வேறொரு மச்சான் உறவை கூட நாம் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

ஆனால் பெரியம்மா பெரியப்பா முறைகளை நாம் நிர்ணயிக்கமுடியாது. இதை போலவே மகன், அல்லது, மகள் உறவையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டது இல்லை. இறைவனால் நமக்கு கிடைக்கப் பெற்றவை. இந்த இயற்க்கை முறையை தான் அல்லாஹ் நமக்கு கீழ் கானும் அழகான வசனத்தின் மூலம் தெரியப் படுத்தும் செய்தி

33:4 எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான் இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

மற்றொன்று முக்கியமான விஷயமும் இதில் அடங்கியுள்ளது. யாரை தன் பிள்ளை என்கின்றோமோ ! அன்றிலிருந்தே அந்த வளர்ப்பு மகனின் உண்மையான தாயின் கற்புக்கு அவதூறாக அமைந்துவிடுகின்றது வளர்ப்பவரின் வார்த்தை. இன்னும் அவரே வளர்ப்பு மகனின் தாயிடம் உறவு கொண்டதாக அபாண்ட வார்த்தையை தனக்குள்ளேயே பழி போட்டுக் கொண்டுவிடுகிறார்.

அதனால் வளர்ப்பு மகனை தன் பிள்ளை என்று அழைக்காமல். நண்பர்களாக அல்லது சகோதரர்களாக அழைக்கலாம். அதுவே அழகானது.
33:5 (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

புதன், 14 அக்டோபர், 2009

இரண்டு தடவை பூமியில் இருந்து வெளிப்படும் ஆதமின் சந்ததி

அல்லாஹுத் தஆலா முதல் மனிதர் ஆதாம் ( அலை ) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்ததை முன்னிறுத்தி. அந்தக் களிமன்னானது பூமியிலிருந்து எடுத்து படைக்கப் பட்டவர்தான் ஆதாம்.

அதனால் தான் பூமியில் விளையும் விளைச்சல்களையும், அதிலிருந்து பெறப் படும் நீரையும் நாம் உட்கொள்ளவேண்டியிருக்கின்றது.

பூமியில் கிடைக்கும் தாதுப் பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு இன்றியமையாதது.உதாரணத்திற்கு ஜின்க்- துத்தநாகம்,காப்பர்- தாமிரம், அயன்- இரும்பு, பைபெர்- இழை,நார் சத்து இன்னும் கால்சியம்- என்ற சுண்ணாம்பு சத்து இன்னும் அதிகதிமான மனிதர்களின் உடலுக்கு இவைகளின் அளவுகள் குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் மூலம் எடுத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாதுப் பொருட்கள் சிறுகச் சிறுக நம் உடலுக்கு மாத்திரைகளின் வழியாகவும் காப்சூல்களில் நிரப்பப் பட்டுள்ள சத்துகளின் உதவிக் கொண்டு நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

ஆகையால் மனிதர்களும் மற்றும் இதரப் படைப்புகளும் பூமியின் ஒரு பங்கு அல்லாமல் வேறில்லை.

20:55 இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம் அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

புதன், 7 அக்டோபர், 2009

நரகத்தில் இறை மறுப்பாளர்களும், இணை வைப்பாளர்களும்.

இறை மறுப்பாளர்கள் மரணத்திற்கு பின் தண்டிக்கப் படுவார்கள். என்பது திண்ணம் அவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் நிராகரிக்கப் படும். எந்த நர்ச் செயல்கள் இவ்வுலகத்தில் செய்து வைத்திருந்தாலும். அது கண்டுக் கொள்ளப்படமாட்டாது. தானமாக இருக்கட்டும், உயிர்த் தியாகமாக இருக்கட்டும், எதுவும் பலனளிக்காது. ஏன் ? இறைவன் இப்படி ஒரு புறக்கணிப்பை கொடுக்கின்றான்.

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

இப்படி எச்சரித்ததோடு அல்லாமல் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்திருக்கின்றான். அந்த அறிவு விலங்கினத்திற்கு இருப்பது போல் அல்ல.

தனி விசேஷ தன்மைகள் கொண்டது. அழைக்காத விருந்துபசரிப்புக்கு போக மாட்டார். கவ்ரவமான வாழ்க்கை வாழ்வார். காரணம் பகுத்தறிவு ஆடு,மாடுகள் போல் கண்ட மேனிக்கு உலாவமாட்டார். வரைமுறைகள் நிர்ணயித்துக் கொள்வார்.

தன் மனைவியை தனக்கு வேண்டியே ! திருமணம் செய்திருப்பார். தன் மனைவி தன்னை மட்டும் கணவன் என்று சொல்லணும் என்று எதிர் பார்பார்.அன்றியும் தனக்கு மட்டுமே அவள் மனைவியாக இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பு மாற்றமாக வேற யாரையாவது தன்னுடைய கணவன் என்று சொன்னால் ! எப்படி நமக்கு கோபம் வருமோ ! அந்த அளவுக்கு நம்மை கற்பிலிருந்து பரிபாலித்து வளர்த்து இன்றைக்கு வரை நம்மை பாது காத்து வைத்து இருக்கும் ஏக இறைவனுக்கு வேற ஒருவரை இணை கற்பிப்பது. கோபமூட்டக் கூடிய செயலாகும் அது மன்னிக்க முடியாத மா பாதக குற்றமாகும்.

இப்படி சிந்திக்கும் பகுத்தறிவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கொடுத்த பின்பே ,நல்லது மற்றும் தீயதை இனங்காட்டி அறியக்கூடிய சக்தி அனைவருக்கும் இருப்பதாலேயே ! மனிதர்களுக்கு மட்டும் நரகம் என்றும் சுவனம் என்றும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.

35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்).