வெள்ளி, 30 அக்டோபர், 2009

இயற்க்கை உறவுமுறைகளை மாற்றுவது பெரும்பாவம்

மனிதர்களில் பலர் மனைவிகளைப் பார்த்து தாய்க்கு ஒப்பாக நினைத்து அழைப்பது. அல்லது தாயை போல் மனைவி இருக்கின்றார் என்று சொல்வது கூட இறைவனிடம் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் பாவம் ஆகும்.

அதே போல் வளர்ப்பு பிள்ளையையும் பெற்ற மகனுக்கு ஒப்பிட்டு மகனே ! என்று அழைப்பதும் தவறாகிவிடுகிறது. காரணம் எது எந்த அடிப்படையில் இருக்கின்றதோ ! அதை தழுவி தான் நாம் அழைத்துக் கொள்ளவேண்டும் அல்லாமல் நாமலாக உறவு முறைகளை உருவாக்கி கொள்ளக் கூடாது என்பது தான் இறைவனின் கட்டளை.

உதாரணத்திற்கு பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சின்னப்பா, இப்படி இயற்கையாக உள்ள உறவு முறைகள் நாம் ஏற்படுத்திக் கொண்டது கிடையாது. நமக்கு இறைவனால் கிடைக்கப் பெற்றவை அது போலவே சகோதரி கணவன் மச்சான் என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு. தம் சகோதரிக்கு கணவனை நாம் தேர்ந்தெடுக்கின்ற காரணத்தால் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு என்கிறோம். இதில் மச்சான் உறவு முறை அற்றுப் போய்விடவும் சாத்தியக் கூறு உள்ளது. அல்லது வேறொரு மச்சான் உறவை கூட நாம் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

ஆனால் பெரியம்மா பெரியப்பா முறைகளை நாம் நிர்ணயிக்கமுடியாது. இதை போலவே மகன், அல்லது, மகள் உறவையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டது இல்லை. இறைவனால் நமக்கு கிடைக்கப் பெற்றவை. இந்த இயற்க்கை முறையை தான் அல்லாஹ் நமக்கு கீழ் கானும் அழகான வசனத்தின் மூலம் தெரியப் படுத்தும் செய்தி

33:4 எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான் இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

மற்றொன்று முக்கியமான விஷயமும் இதில் அடங்கியுள்ளது. யாரை தன் பிள்ளை என்கின்றோமோ ! அன்றிலிருந்தே அந்த வளர்ப்பு மகனின் உண்மையான தாயின் கற்புக்கு அவதூறாக அமைந்துவிடுகின்றது வளர்ப்பவரின் வார்த்தை. இன்னும் அவரே வளர்ப்பு மகனின் தாயிடம் உறவு கொண்டதாக அபாண்ட வார்த்தையை தனக்குள்ளேயே பழி போட்டுக் கொண்டுவிடுகிறார்.

அதனால் வளர்ப்பு மகனை தன் பிள்ளை என்று அழைக்காமல். நண்பர்களாக அல்லது சகோதரர்களாக அழைக்கலாம். அதுவே அழகானது.
33:5 (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

2 கருத்துகள்:

  1. அஸ்லாமு அலைக்கும்(வரஹ்)
    தங்களின் ஆக்கங்களை கண்டு வருகிறேன்.தங்களை மேலும் தொடர்புக்கொள்ள e-mail id தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு