வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

அட கடவுளே !

கடவுளை பொறுத்தவரை சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. இதில் நம்பிக்கை உள்ளவர்களே இந்த உலகத்தில் மிகுதியானோர். காரணம் எல்லா மதங்களும் கடவுள் என்ற ஒரு சொல்லை வைத்து தான் இயங்குகின்றன. ஒரு மதம் பல கடவுள் என்று சொல்லும், இன்னொரு மதம் மூன்று என்று சொல்லும், மற்றொரு மதம் ஒன்று என்று சொல்லும் ஆக கடவுள் என்னும் பரம்பொருள் தான் இங்கு அடிப்படை.
இதில் கடவுளை வணங்குபவர் தாம் எதை தேர்வுசெய்து இப்படி தான் இருக்கனும் என்று நிர்ணயித்துக்கொண்டார்களோ ! அதன் பிரகாரம் பாரையினாலோ அல்லது இன்ன பிற உலோகங்கலாலோ வடித்துக்கொண்டு வணங்குவார்கள்.

மற்றொருவர் மனிதரையே ! அவர் இறந்த பிறகு கடவுள் என்று. சிலை வடித்து வணங்கிவிடுவார்கள்.

இன்னொரு சாரார் கடவுளை காண்பதற்கு மனிதனின் கண்கள் சக்தி பெறாது. மகா பிரமாண்டமான ஆகாயத்தையும்,( பூமியொன்று இருந்தும் அதை இருந்த இடத்திலிருந்து முழுவதையும் பார்க்க சக்தியற்ற ) பார்வைகளுக்குள் அடக்கமுடியாத மிகப்பெரிய பூமியையும், இந்த பூமியை விட பன்மடங்கு பெரிதான நெருப்பிலான சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தையுமே ! பார்க்க சக்தி இல்லாத மனிதனின் பலவீனமான கண்கள் இவைகளை எல்லாம் உறுவாக்கிய ஒரு மிகப்பெரிய படைப்பாளன். அந்த கடவுளின் உருவத்தை சிறிய அறிவு கொண்ட மனித கண்களால் பார்க்கவும் கரங்களால் வடிக்கவும் சக்தியற்றவை. ஆனால் கடவுள் உண்டு என்பதை மட்டும் நம்பி வணங்குவார்கள்.

ஆனால் கடவுள் என்ற ஒரு மிகப்பெரிய சக்தி உண்மையில் இருக்கின்றதா ? என்பது பலரின் கேள்வியாகவும். இருக்கும்.

இன்னும் சிலர் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அவரை நாங்கள் பார்க்கனும். கண்களால் பார்த்த பிறகு தான் எங்கள் அறிவு ஏற்றுக்கொள்ளும் இல்லையென்றால் அது மூட நம்பிக்கை என்று சொல்லி ஒரு படி மேலே ! போய் நிராகரிப்பார்கள்.

கடவுளை நம்பி வாழ்வதற்கு ஐம்புலன்கள் அறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்கனும்.

சிந்தனை மற்றும் பகுத்தறிவு ரீதியாக. எதையும் அலசிப்பார்க்கும் மனோபக்குவத்திர்க்கு எந்த ஒரு கொள்கையும் தடையாக இருந்துவிடக்கூடாது. என்பது ஒரு முக்கியமான புள்ளியாகவும் இருக்கனும்.

கண்களால் மட்டும் பார்த்து நம்புவேன் என்று அடித்து சொல்பவர்களுக்கு. அதன் அடிப்படையிலேயே ! உங்களின் இன்ன பிற சம்பவங்களையும் அடித்து நம்ப முடியுமா ?

குறிப்பு:
உங்களை ஈன்றெடுத்த தாய் அந்தப்பெண்ணை எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள். உங்கள் கண்களால் அந்தப்பெண் தான் ஈன்றெடுத்தார் என்று எப்படி நம்புகிறீர்கள் எப்போது பார்த்தீர்கள். ஏன் ? ஒரு சொற்ப விலை கொடுத்து உங்களை மற்றவர்களிடமிருந்து வாங்கியிருக்கக்கூடாதா ? அல்லது ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்திருக்கக்கூடாதா ?

உங்கள் மூத்த சகோதரன் பிறப்பை எப்போது உங்கள் கண்களால் பார்த்து உருதிசெய்துகொன்டீர்கள் . ஆதாரம் ஏதாவது உண்டா ? தன்னுடைய்ய பிறப்பே ! பார்வை எனும் ஆதாரம் இல்லாத நிலை ஆகிவிட்டது பார்த்தீர்களா ?

காற்றை வைத்துக்கொள்ளுங்கள் அது வேகமாக அடித்து மரங்களையும், மின்கம்பங்களையும் சாய்த்துவிடுகிறது. கண்களால் காற்றை பார்க்கமுடியாத காரணத்தால். காற்று இல்லை என்று முடிவுகட்டிவிடுவீர்களா ?

நீங்கள் சுவாசிப்பது என்ன ? அது ஆக்சிஜனா ? அதன் கலரை காட்டு என்று யாரிடமும் கேட்ப்பீர்களா ? அப்படி கேட்டால் உங்கள் நிலை என்ன ?

அதே சுவாசத்தில் கலந்து வரும் நறுமணத்தையும், காற்றையும் உங்கள் இருண்டு கண்களால் பார்க்கமுடிகிறதா ? அல்லது உங்கள் இருகைகளால் பிரிக்கத்தான் முடிகிறதா ? பார்க்கமுடியாத காரணத்தால் வாசனை திரவியம் ஒரு மாயை என்று உங்களால் சொல்லமுடியுமா ?

சமையல் அறையில் வரும் கோழிவறுவல், மீன் பொரியல், கடுகு,மிளகாய்,வெங்காயம்,எண்ணையை கலந்து தாளிக்கும் மனத்தை உங்களால் மறுக்கமுடியுமா ? அந்த மனத்தை கண்ணைக்கொண்டு பார்க்க முடியவில்லை ஆதலால் அது இல்லை என்று நிரூபிக்கமுடியுமா ?

கண்களுக்கு எந்த அளவோடு பார்க்க முடியுமோ அதை மட்டும் தான் பார்க்கமுடியும். குறிப்பாக இதில் தட்டச்சு செய்த எழுத்தை பார்க்கமுடியும். உங்களுக்கு முன் உள்ளவர்களை பார்க்கமுடியும். இதே ! தட்டச்சை பத்து மீட்டெர் தூரம் கொண்டு நீங்கள் படிக்கமுடியுமா ? முடியாது. முடியாததால் அது பொய்யாகுமா ? சமீபமாக வந்தால் தான் எழுத்தை படிக்கமுடியும்.

உதாரணத்திற்கு.நீங்கள் டெலிபோனில் உங்கள் பெற்றோரிடம் நலம் விசாரிக்கிறீர்கள். அவர்கள் தாம் நலம் என்றும் பதில் சொல்லிவிட்டார்கள். பிறகு உங்கள் மனைவியிடம் நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்ததா ? என்றும் கேட்கிறீர்கள். அவரும் ஆம் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு போனை வைத்துவிட்டு. யோசிப்பீர்களா ? இல்லை நான் நேரில் போய் என் இரண்டு கண்களை கொண்டு பார்த்துவிட்டு தான் நம்புவேன். என் பெற்றோர் நலம் என்றும் என் மனைவி கையில் இருக்கும் பணத்தை கண்ட பிறகு தான் முழுமையாக உருதிசெய்துக்கொள்வேன். கிடைத்துவிட்டது என்றும் சொல்வீர்களா ?

மாட்டீர்கள் காரணம் டெலிபோனில் பேசி உருதிசெய்துக்கொன்டீர்கள். இதற்க்கு முக்கிய காரணம் சத்தம் அந்த சத்தம் என்னும் ஓசையை காதால் மட்டும் தான் கேட்க்கமுடியும் கண்களால் பார்க்கவும் முடியாது மற்றும் மூக்கை கொண்டு நுகரவும் முடியாது.

பார்க்கமுடியாத காரணத்தினாலும், நுகரமுடியாத காரணத்தினாலும் ஓசை என்னும் சத்தம் இல்லை என்று வாதிடுவீர்களா ? அப்படி வாதாட நீங்கள் முற்ப்பட்டால் உங்களுக்கு இருக்கும் காது என்ற உறுப்பை வெட்டிக்கொள்வீர்களா ?

இன்றைக்கு விஞ்ஞானம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன. கணினி, ஊர்தி ஆயிரக்கணக்கான டெக்க்னாலஜி முறைகள் அறுவை சிகிச்சைகள். வந்துவிட்டன. இதற்க்கு முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை அந்த சிந்தனையை கண்களாலும் பார்க்கமுடியாது.காதுகள் கொண்டு கேட்க்கவும் முடியாது மூக்கைகொண்டு நுகரவும் முடியாது.

பார்க்கமுடியவில்லை, நுகரமுடியவில்லை கேட்க்கமுடியவில்லை ஆகையால் சிந்தனை என்ற ஒரு பிரமாதமான முக்கியமான தன்மையை இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கமுடியுமா ?

ஆக எல்லாவற்றையுமே ! கண்களால் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொள்ள முடியாத மனிதன் தன் பிறப்பு முதற்கொண்டு. கடவுளை மட்டும் எப்படி கண்களால் பார்த்த பிறகு தான் நம்புவேன் என்று சொல்வது எந்த விதத்தில்

நியாயம்
மனிதன் உண்மையில் நன்றி கெட்டவனாகவும் நம்பிக்கை விஷயத்தில் பாரபட்சம் காட்டுபவனாகவும் இருக்கின்றான்

புதன், 18 பிப்ரவரி, 2009

எவன் தருவான் உங்களுக்கு ?

அன்பார்ந்த சகோதர மக்களே ! நாம் பல வகையில் உழைத்தாலும் பொருள் ஈட்டினாலும்.அல்லது நாடு விட்டு நாடு சென்று குடும்பம் தாய் தந்தையர் மனைவி அன்பு பிள்ளைகள் எல்லாவற்றையும் பிரிந்து பலவருடம் தியாகம் செய்து. பொருள் ஈட்டினாலும். இறைவன் நமக்கு கொடுத்த கால அவகாசமும். நமக்கென்று விதித்த செல்வம் இவைகளை மட்டும் தான் நம்மால் தேட முடியும். இதற்க்கு மேல் கொஞ்சம் கூட பெற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒரு தொழிலின் மூலமும். மற்றும் அலுவலக சம்பாத்தியத்தின் வாயிலாகவும். தேடிய செல்வம் அனைத்தும் முடிவு பெரகூடியவைதான். ஒரு குறிப்பிட்ட கால கெடுவோடும் அல்லது நமக்கு பின் தலைமுறை மக்களோடும் முடிவு பெரும்

உதாரணம்: நாம் அணியும் ஆடை அது கிழிந்து போகும் வரைக்கும்.

உதாரணம்: நாம் அணியும் செருப்பு அது அறுந்து போகும் வரைக்கும்.

உதாரணம்: நாம் கட்டும் வீடு அல்லது மாளிகை அது ஒரு ஐம்பது வருட கால கெடுவோடு இடிக்க வேண்டிய தருவாய் ஏற்படும்.

உதாரணம்: நாம் வைத்திருக்கும் நிலமும், தோட்ட துரவுகள். நாம் இருக்கும் வரைக்கும் இலாபமும் கொடுக்கும், நஷ்டமும் கொடுக்கும். உறுதி சொல்லமுடியாது.முதிய வயதில் அது இலாபம் ஈட்டினாலும் அதை அனுபவிக்க முடியாத நிலையில் நாம் இருப்போம் வெறும் கஞ்சியும் மருந்துமாக வாழ்க்கை ஓடும்.

இப்படி அடுக்கிகொண்டே போனால் நிறைய சொல்லலாம். ஆனால் என்றைக்குமே அழியாத வியாபாரம் ஒன்று இருக்கிறது.அந்த வியாபாரத்தினால் ஈட்டியவைக்கு கால கெடு கிடையாது. அதற்க்கு முடிவுரை என்பது இல்லை.நஷ்டம் மற்றும் லாபம் கலந்து அளிக்காமல் இலாபம் மட்டுமே கொடுக்கக்கூடியது.

அது என்ன ? தெரியுமா லைசென்ஸ் எடுக்க தேவையில்லை. முதலீடு செய்ய அவசியமில்லை. இடம் பார்த்து கூட்டம் அதிகம் உள்ள இடமா? இல்லையா? என்று பார்க்க தேவையுமில்லைl நெற்றி வியர்வை சிந்தனும் என்ற தலைஎழுத்துமில்லை. எட்டு மணிநேரம் செய்யனுமா ? அல்லது கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளனுமா ? என்று யோசிக்கவேண்டியதுமில்லை. திருட்டு போய் விடுமோ ! என்று பயந்து பூட்டிவிட்டு தான் வரனும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.

வருவாய் துறை அதிகாரிக்கு கணக்கு காட்டவேண்டிய அவசியமில்லை. ஆனால் உறுதியான இலாபம். நிச்சயம்.

நேரம்:

ரொம்ப சுலபம் எப்படி உங்களுக்கு டி.வி. பார்க்கும் பழக்கம் இருந்தால் அதில் உள்ள நேரத்தை உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலீடு:

நீங்கள் சிகரட் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? அல்லது வெற்றிலை,சீவல்,சுண்ணாம்பு போடுகிரவர்களா.? அதை முற்றாக தவிர்த்தால் அதுவே! முதலீடு.

அல்லது பல பொருட்கள் வாங்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால். கொஞ்சம் அதில் ஒன்று இரண்டு குறைத்து சில்லறை காசுகளாக சேமித்து.வைத்தால் அதுவும் முதலீடு.

மற்றபடி உங்களுக்கு அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை ஒதத்தெரிந்தாகனும். அது உங்களுக்கு பள்ளிவாசலில் சும்மாவே இருக்கும். இன்னொன்று உங்கள் தொழுகையை நேரம் தவறாமல் தொழுதாகனும். மற்றது உங்கள் மனம் வந்து உங்கள் முதலீடால் போட்ட பணத்தை உங்களுக்கு தெரிந்தவர்கள் ஏழை, நலிந்தவர்களுக்கு செலவு செய்யுங்கள். இதோ இந்த குர்ஆன் வசனத்தை பாருங்கள். அதன் படி வியாபாரம் செய்யுங்கள்.

35:29 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாக கடைபிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.

சனி, 7 பிப்ரவரி, 2009

ஹதீத் அறிவிப்பாளர்கள் குறை நிறை

அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும். ஹதீத் அறிவிப்பாளர் குறைகள் விபறமாக கூற வேண்டும் என்று அறிஞர்கள் தீர்மானித்துள்ளார்கள்.


உதாரணம்: ஊரிலிருந்து உங்கள் தந்தை வந்து விட்டாரா ? என்று நம்மிடம் கேட்க்கப்பட்டதாக வைத்து கொள்வோம். அவர் வந்து விட்ட செய்தி நமக்கு தெரியாததால் வரவில்லை என்று கூறுவோம். நமது தந்தை வந்து விட்டதை வேறு வகையில் அறிந்து கொண்டவர் நம்மை பொய்யர் என கருதக்கூடும். இது போல் ஒருவர் தவறாக தெரிவிக்கும் தகவல் காரணமாக பொய்ய்யராகக்கருதப்படக்கூடும். ஹதீத் அறிவிப்பாளர்களில் சிலரும் இவ்வாறு தவறாக விமர்சிக்கப்படக்கூடும்.


தகுந்த சான்றுகளுடன் கூறப்படும் குறைகள் காரணமாகத்தான் ஒரு அறிவிப்பாலரை பலவீனர் என்று முடிவு செய்யவேண்டும்.இன்னொன்று ஒரு அறிவிப்பாளர் மனநோயாளியாக இருந்தால் அது அவரை நிராகரிப்பதற்கு போதிய காரணம் என்பதை நாம் அறிவோம். பின்னர் விலகியும் இருக்கலாம். அவர் சுய நினைவுடன் இருந்ததற்கு போதுமான ஆதாரம் கிடைத்து அந்த கால கட்டத்தில் அவர் அறிவித்த ஹதீத்கள் தெளிவாக இருந்தால் அத்தகைய ஹதீத்களை மட்டும் ஏற்க்கலாம்.


இது போன்ற காரணங்களால்தான் குறைகள் விபறமாக கூறப்படவேண்டும் என்று அறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.அறிவிப்பாளர்களின் குறைநிரவுகளை ஆராயும் நூல்களில் பெரும்பாலும் தக்க காரணங்களுடன் அறிவிப்பாளர்களின் குறைகள் கூறப்படுவதில்லை .` இவர் பலவீனமானவர், இவரை ஏற்க்கக்கூடாது, இவரது ஹதீத்கள் பதிவுசெய்யக்கூடாது, இவரை இன்னார் ஏற்க்கவில்லை '' என்று பொதுவாகத்தான் கூறப்படுகின்றது.
இதை அடிப்படையாக வைத்து ஒருவரை பலவீனமானவர் என்று கூறமுடியுமா? கூரமுடியாவிட்டால் இந்த நூல்களால் என்ன பயன்? என்பது தான் அந்த ஐயம்.இதற்க்கு இமாம் நவவி அவர்கள் தமது தத்ரீபில், '' காரணங்களை கூறாமல் குறை நிறைகளை கூறும் நூல்களால் ஏற்படும் பயன் என்னவென்றால் இத்தகைய அறிவிப்பாளர்கள் விசயத்தில் தீர்மானமான முடிவுக்கு வராமல் இவர்களின் ஹதீத்களை ஏற்க்கவோ மறுக்கவோ செய்யாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.


இவர்களின் நிலையை மேலும் பரிசீலிக்கும் போது இவர்களைப்பற்றிய ஐயம் விலகி நம்பகத்தன்மை உறுதியானால் இவர்களின் ஹதீகளை ஏற்க வேண்டும். மற்றவர்களால் குறை கூறப்பட்ட பல அறிவிப்பாளர்களின் ஹதீத்கள் புகாரி, முஸ்லீம் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளதற்கு இதுவே காரணம் '' என்று கூறுகிறார்கள்.


அறிவிப்பாளர்களை விமர்சிக்கும் அறிஞர் எந்த காரணங்களால் ஒருவரது ஹதீகளை ஏற்க்கக்கூடாதோ அந்தக்காரனங்களுக்காக மட்டும் ஒருவரை குறை கூறுபவர் என்று உறுதியானால் காரணங்களின்றி யாரையுமே அவர் குறை கூறியதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்தால் அவர்களின் விமர்சனங்களில் காரணங்கள் கூறப்படாவிட்டாலும் அந்த விமர்சனத்தை ஏற்க்கலாம் என்று காளி அபூபக்ர், இமாமுள் ஹரமைன், கஸ்ஸாலி, ராஸி, கதீப், ஹாபீழ் இராக்கி,புல்கினி ஆகியோர் கூறகின்றனர்

பெரும்பாலானவர்களின் முடிவு இதுதான் என்று காளி அபூபக்ர் கூறுகிறார்.
இதுவும் கூட பொதுவானதன்று யாரைப்பற்றி நம்பகமானவர் என்ற சான்று ஏதும் இல்லை என்றால் தான் இத்தகைய விமர்சகர்களின் காரணம் கூறப்படாத விமர்சனத்தை ஏற்க்கலாம். ஒரு அறிவிப்பாலரை பற்றி மிகவும் நம்பகமானவர். பலவீனமானவர் என்று சிறந்த விமர்சகர்கள் விமர்சித்திருந்தால் அவரை குறை கூறும் போது கட்டாயம் காரணம் கூறப்பட்டாகவேண்டும். எத்தகைய சிறந்த விமர்சகர் இதற்க்கு மாற்றமாக விமர்சனம் செய்தாலும் காரணங்கள் கூறப்படாவிட்டால் அதை கவனத்தில் கொள்ளக்கூடாது.


ஏனெனில் அவரது நம்பகத்தன்மைக்கு நற்சார்ன்று வழங்கிய விமர்சகர்கள் அவரது வரலாறு, அவரது மார்க்கப்பற்று, அவரது ஹதீத் ஈடுபாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் பரிசீளித்தே அவரை நம்பகமானவர் என முடிவு செய்கிறார். இந்த முடிவை மாற்றுவதற்கு தக்க காரங்களுடன் குறை கூறப்படவேண்டும் என்று செய்குல் இஸ்லாம் கூறுகிறார்கள்.


இத்துறையில் நல்ல ஈடுபாடு உள்ள இரண்டு அறிஞர்கள் சேர்ந்தாற்போல் எந்த நம்பகமானவரையும் பலவீனமாக்கியதில்லை. எந்த பலவீனமானவரையும் நம்பகமானவராக்கியதில்லை. என்ற ஹாபிழ் தஹபி கூறுவதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.


உதாரணம்:


ஒருவர் ரமலானில் நோன்பு நோற்று பின்பு சவ்வால் மாதம் ஆறு நோன்புகளை தொடர்ந்து நோற்றால் அவர் காலம் முழுவதும் நோம்பு நோற்றவர் போல் ஆவார் என நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அபு அய்யுபில் அன்சாரி [ரலி] அறிவிக்கிறார்கள்.இதை சக்து பின் சயீத் [ரலி] வழியாக இமாம் முஸ்லீம் [ரஹ்] அறிவிக்கிறார்கள் இந்த ஹதீதை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் [ரஹ்] பலவீனமானது எனக்கூரினாலும் அந்த அறிவிப்பாலரை இமாம்களில் பலர் நம்பகமானவர் எனக்கூரியுள்ளனர். எனவே இது தள்ளப்பட வேண்டிய குறையல்ல முஸ்லீம் [ரஹ்] அவர்கள் ஹதீத்களை கடுமையான பல நிபந்தனைகளுக்குப்பின்பே ஏற்றுக்கொள்வார்கள். எனவே அவர்கள் அறிவித்திருப்பதே இது சஹீஹ் தான் என்பதற்கு ஆதாரமாகும்.


அறிவிப்பாலர்களிடம் குறைகள் இருப்பதை போலவே அவர்களைப்பற்றி விமர்சிப்பவர்களிடமும் குறைகளும் தவறுகளும் இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டால் எளிதில் விளங்கும்.


`சாதான்` என்ற அறிவிப்பாளர் வழியாக ஹகம் பின் உதைபா அவர்கள் எதையும் அறிவிப்பதில்லை. அவரை பலவீனமானவராக கருதினார். அவர் வழியாக ஏன் நீங்கள் அறிவிப்பதில்லை என்று நான் கேட்டேன். அதற்கவர், ''அவர் அதிகமாக பேசுகிறார்'' என்று விடையளித்தார் ஏன் சூக்பா கூறுகிறார்.[தத்ரீப்]


ஒருவர் அதிகமாக பேசுவது நல்ல பண்பு இல்லை என்று கூறலாம். ஆனால் அவரது அறிவிப்புகளை நிராகரிக்க அது காரணமாகாது என்பதை நாம் மறுக்கமுடியாது.குறிப்பிட்ட ஒரு அறிவிப்பாளரின் ஹதீத்களை ஏன் நீங்கள் விட்டு விடுகிறீர்கள்? என்று சுக்பாவிடம் நான் கேட்டேன்.அதற்க்கவர்கள் ''படுத்துக்கிடக்கும் குதிரையை காலால் மிதித்து எழுப்பி அவர் சவாரி செய்வார்'' என்று விடையளித்தார்கள் ஏன் முஹம்மது பின் ஜபார் அறிவிக்கிறார் [தத்ரீப்]


படுத்துக்கிடக்கும் குதிரையை காலால் மிதித்து எழுப்புவதற்கும் அவ்வாறு செய்பவரின் ஹதீதை நிராகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இது போன்ற காரணங்களுக்காக ஒருவரை பலவீனமானவர் என்று தீர்மாநித்தவர்களும் இருந்துள்ளனர்.


நன்றி: அல் ஜன்னத்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

ஈடேற்றத்தின் பால் வாருங்கள்

அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே ! உண்மை மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் தங்களை இணைத்துகொல்லும்படி வேண்டுகிறேன். இந்த மார்க்கத்தில். அல்லாஹ்வின் இருதிவேதத்தில் குறைபாடுகள் இல்லை. முரண்பாடுகள் இல்லை. வேண்டும் என்றே சில ஆசாமிகள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மீது அவதூறையும். திரு குர்ஆன் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு களம் இறங்கி ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அடுக்கிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த குர்ஆன் நீங்கள் வணங்கிகொண்டிருக்கும் இயேசுவை தூய்மையானவராகவும். பரிசுத்தவானாகவும் குறிப்பிடுகிறது. மேலும் அவருக்கு இறைவன் கொடுத்த சில அர்ப்புதங்களையும் குறிப்பிட்டு சொல்கிறது. அவருக்கு




முன்னாள் உள்ள (தவ்ராத்) என்கிற தோரா வேதமான மோசேவுக்கு கொடுத்ததையும் மெய்ப்பிக்கிறது.



அந்த தோரா மனித கரங்களால் இடைசொருகளுக்கும், திருத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் இரையாக்கப்பட்டதையும். விவரித்துகூருகிறது. மேலும்( ஈசா ) என்கிற ஏசுவுக்கு இறைவன் அளித்ததும். குறுகிய காலகட்டத்திலேயே ! காணாமல் போய்விட்டதும் உண்மைதான்.அதற்க்கு உங்களுடைய புதிய ஏற்பாடான பைபிளே முக்கிய சான்று.



இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)




அப்படி இருக்கும் பொழுது இயேசு வேற என்னவெல்லாம் செய்தார். எதையெல்லாம் போதித்தார்.என்ற செய்தி மறைக்கப்பட்டதாலும்.நீக்கப்பட்டதாலும்.மனிதர்களுக்கு தேவையான முழு உபதேசம்.இல்லாமல் போன காரணத்தால் உலகம் வேற ஒரு தூதரை எதிர்பார்க்கும் கட்டாயத்திற்கு உள்ளானது.அது அவசியமும் கூட.


இன்னும் அந்த புதிய ஏற்பாட்டில் தேவனை தூக்கிப்பிடிப்பதர்க்காக.பொய்யும் பேசலாம். என்று இடைச்சொருகளிட்டு.தேவையான அளவு பொய்களையும், புரட்டுகளையும் சேர்திருப்பதையும் பார்க்கிறோம்.


என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? - ரோமர் 3:4-7



மேலும் கர்த்தரிடம் இருந்து வரவில்லை நானே ! எழுதிக்கொண்டது. என்று தானாகவே வாக்குமூலம் கொடுத்திருக்கும். பவுலின் வார்த்தையில் வேத வாக்கல்ல மனிதக்கரங்கள் தான் என்று அவரே ! நிரூபித்துக்கொண்டார்.


மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது - 1 கொரிந்தியர் 7:12

பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். - பிலமோன் - 1:19


அதனால் தூய குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து அதன் போதனைகளை ஏற்று இரண்டு உலகிலும் நன்மை பெறுவீர்களாக.


6:104 நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை ( கவனித்து ) பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றை) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் ``நான் உங்களை காப்பவன் அல்ல'' (என்று நபியே கூறிவீராக)


செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

விதி

விதி என்றால் என்ன ? அதை பற்றி சில ஹதீத்கள் உங்கள் முன் வைக்கிறேன். தெரிந்துகொள்ளுங்களேன்.

விதி

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத்)

அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.

கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி

அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி

பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி
இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

திங்கள், 2 பிப்ரவரி, 2009

ஒத்திக்கு வீடு மார்க்க சட்டப்படி என்ன ?

இப்பொழுதோ ! நாம் அவசர காலத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம் ஆகையால் உன்னிப்பாகவும் ஆழமாகவும். அல்லாஹ் ( ஜல் ) கட்டளைக்கும் அவனது தூதருமான ரசூல் ( ஸல் ) அவர்களின் கட்டளைக்கும் நாம் செயல் பட முடியாது. இவையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று பகல் கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் முஸ்லீம் சகோதரர்கள். அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே ! இந்த பதிவை முன்வைக்கிறேன்.

'அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 2511)

'அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 2512)

இதன்படி அடைமானமாகப் பெற்ற பொருளை உபயோகிக்க நாடுபவர் அதற்கான கூலியை உரியவருக்கு சேர்ப்பிக்க வேண்டும். கால்நடைகளை அடைமானமாகப் பெற்றவர் அவற்றை பராமரித்து வரும் காலம் வரை அவற்றிலிருந்து பால் அருந்தலாம்.

இவ்வகையில் நகைகள் மற்றும் வீடு போன்றவற்றை அடைமானமாகப் பெறுபவர் அவற்றை
உபயோகப்படுத்தினால் அவற்றுக்கான கூலியை (வாடகையை) உரியருக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட வில்லையாயின் நாம் அனுபவிப்பது வட்டியாகும் என் ரஸுல் (ஸல்) அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.

துன்பத்தில் பொறுமை மேற்கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர சகோதரிகளே ! நாம் எதற்கெடுத்தாலும். சட்டென்று கோபம் கொள்கிறோம். அல்லது. அல்லாஹ் நமக்கு என்னத்தை செய்துவிட்டான். என்று அங்கலாய்த்து கொள்கிறோம். அல்லது இறைவன் முன்னோர்களுக்கு. மலக்குகளை அனுப்பி காப்பாற்றினான். அபாபீல் பறவை வழியாகவும் வெற்றியை நல்கினான் என்றெல்லாம். இறைவன் அளித்த சில உண்மை சம்பவங்களை எடுத்து சொல்லி அரற்றிக்கொண்டிருப்பதை. பலவாறும் பார்க்கிறோம். ஆனால் இறை வேதமான திருக் குர்ஆனை நாம் ஊன்றி படித்து பார்த்தால். அதில் நமக்கு பதில் கிடைத்தாகிவிடுகிறது. இதோ

இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.(அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை.(அல்குர்ஆன் 54:11)

ஆகையால் துன்பத்திலும் பொறுமை காத்து மேலும் அதை சகித்து. இறைவனின் திருப்தியை ஈருலகிலும் பெற்றுகொவோமாக.