சனி, 7 பிப்ரவரி, 2009

ஹதீத் அறிவிப்பாளர்கள் குறை நிறை

அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும். ஹதீத் அறிவிப்பாளர் குறைகள் விபறமாக கூற வேண்டும் என்று அறிஞர்கள் தீர்மானித்துள்ளார்கள்.


உதாரணம்: ஊரிலிருந்து உங்கள் தந்தை வந்து விட்டாரா ? என்று நம்மிடம் கேட்க்கப்பட்டதாக வைத்து கொள்வோம். அவர் வந்து விட்ட செய்தி நமக்கு தெரியாததால் வரவில்லை என்று கூறுவோம். நமது தந்தை வந்து விட்டதை வேறு வகையில் அறிந்து கொண்டவர் நம்மை பொய்யர் என கருதக்கூடும். இது போல் ஒருவர் தவறாக தெரிவிக்கும் தகவல் காரணமாக பொய்ய்யராகக்கருதப்படக்கூடும். ஹதீத் அறிவிப்பாளர்களில் சிலரும் இவ்வாறு தவறாக விமர்சிக்கப்படக்கூடும்.


தகுந்த சான்றுகளுடன் கூறப்படும் குறைகள் காரணமாகத்தான் ஒரு அறிவிப்பாலரை பலவீனர் என்று முடிவு செய்யவேண்டும்.இன்னொன்று ஒரு அறிவிப்பாளர் மனநோயாளியாக இருந்தால் அது அவரை நிராகரிப்பதற்கு போதிய காரணம் என்பதை நாம் அறிவோம். பின்னர் விலகியும் இருக்கலாம். அவர் சுய நினைவுடன் இருந்ததற்கு போதுமான ஆதாரம் கிடைத்து அந்த கால கட்டத்தில் அவர் அறிவித்த ஹதீத்கள் தெளிவாக இருந்தால் அத்தகைய ஹதீத்களை மட்டும் ஏற்க்கலாம்.


இது போன்ற காரணங்களால்தான் குறைகள் விபறமாக கூறப்படவேண்டும் என்று அறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.அறிவிப்பாளர்களின் குறைநிரவுகளை ஆராயும் நூல்களில் பெரும்பாலும் தக்க காரணங்களுடன் அறிவிப்பாளர்களின் குறைகள் கூறப்படுவதில்லை .` இவர் பலவீனமானவர், இவரை ஏற்க்கக்கூடாது, இவரது ஹதீத்கள் பதிவுசெய்யக்கூடாது, இவரை இன்னார் ஏற்க்கவில்லை '' என்று பொதுவாகத்தான் கூறப்படுகின்றது.
இதை அடிப்படையாக வைத்து ஒருவரை பலவீனமானவர் என்று கூறமுடியுமா? கூரமுடியாவிட்டால் இந்த நூல்களால் என்ன பயன்? என்பது தான் அந்த ஐயம்.இதற்க்கு இமாம் நவவி அவர்கள் தமது தத்ரீபில், '' காரணங்களை கூறாமல் குறை நிறைகளை கூறும் நூல்களால் ஏற்படும் பயன் என்னவென்றால் இத்தகைய அறிவிப்பாளர்கள் விசயத்தில் தீர்மானமான முடிவுக்கு வராமல் இவர்களின் ஹதீத்களை ஏற்க்கவோ மறுக்கவோ செய்யாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.


இவர்களின் நிலையை மேலும் பரிசீலிக்கும் போது இவர்களைப்பற்றிய ஐயம் விலகி நம்பகத்தன்மை உறுதியானால் இவர்களின் ஹதீகளை ஏற்க வேண்டும். மற்றவர்களால் குறை கூறப்பட்ட பல அறிவிப்பாளர்களின் ஹதீத்கள் புகாரி, முஸ்லீம் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளதற்கு இதுவே காரணம் '' என்று கூறுகிறார்கள்.


அறிவிப்பாளர்களை விமர்சிக்கும் அறிஞர் எந்த காரணங்களால் ஒருவரது ஹதீகளை ஏற்க்கக்கூடாதோ அந்தக்காரனங்களுக்காக மட்டும் ஒருவரை குறை கூறுபவர் என்று உறுதியானால் காரணங்களின்றி யாரையுமே அவர் குறை கூறியதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்தால் அவர்களின் விமர்சனங்களில் காரணங்கள் கூறப்படாவிட்டாலும் அந்த விமர்சனத்தை ஏற்க்கலாம் என்று காளி அபூபக்ர், இமாமுள் ஹரமைன், கஸ்ஸாலி, ராஸி, கதீப், ஹாபீழ் இராக்கி,புல்கினி ஆகியோர் கூறகின்றனர்

பெரும்பாலானவர்களின் முடிவு இதுதான் என்று காளி அபூபக்ர் கூறுகிறார்.
இதுவும் கூட பொதுவானதன்று யாரைப்பற்றி நம்பகமானவர் என்ற சான்று ஏதும் இல்லை என்றால் தான் இத்தகைய விமர்சகர்களின் காரணம் கூறப்படாத விமர்சனத்தை ஏற்க்கலாம். ஒரு அறிவிப்பாலரை பற்றி மிகவும் நம்பகமானவர். பலவீனமானவர் என்று சிறந்த விமர்சகர்கள் விமர்சித்திருந்தால் அவரை குறை கூறும் போது கட்டாயம் காரணம் கூறப்பட்டாகவேண்டும். எத்தகைய சிறந்த விமர்சகர் இதற்க்கு மாற்றமாக விமர்சனம் செய்தாலும் காரணங்கள் கூறப்படாவிட்டால் அதை கவனத்தில் கொள்ளக்கூடாது.


ஏனெனில் அவரது நம்பகத்தன்மைக்கு நற்சார்ன்று வழங்கிய விமர்சகர்கள் அவரது வரலாறு, அவரது மார்க்கப்பற்று, அவரது ஹதீத் ஈடுபாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் பரிசீளித்தே அவரை நம்பகமானவர் என முடிவு செய்கிறார். இந்த முடிவை மாற்றுவதற்கு தக்க காரங்களுடன் குறை கூறப்படவேண்டும் என்று செய்குல் இஸ்லாம் கூறுகிறார்கள்.


இத்துறையில் நல்ல ஈடுபாடு உள்ள இரண்டு அறிஞர்கள் சேர்ந்தாற்போல் எந்த நம்பகமானவரையும் பலவீனமாக்கியதில்லை. எந்த பலவீனமானவரையும் நம்பகமானவராக்கியதில்லை. என்ற ஹாபிழ் தஹபி கூறுவதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.


உதாரணம்:


ஒருவர் ரமலானில் நோன்பு நோற்று பின்பு சவ்வால் மாதம் ஆறு நோன்புகளை தொடர்ந்து நோற்றால் அவர் காலம் முழுவதும் நோம்பு நோற்றவர் போல் ஆவார் என நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அபு அய்யுபில் அன்சாரி [ரலி] அறிவிக்கிறார்கள்.இதை சக்து பின் சயீத் [ரலி] வழியாக இமாம் முஸ்லீம் [ரஹ்] அறிவிக்கிறார்கள் இந்த ஹதீதை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் [ரஹ்] பலவீனமானது எனக்கூரினாலும் அந்த அறிவிப்பாலரை இமாம்களில் பலர் நம்பகமானவர் எனக்கூரியுள்ளனர். எனவே இது தள்ளப்பட வேண்டிய குறையல்ல முஸ்லீம் [ரஹ்] அவர்கள் ஹதீத்களை கடுமையான பல நிபந்தனைகளுக்குப்பின்பே ஏற்றுக்கொள்வார்கள். எனவே அவர்கள் அறிவித்திருப்பதே இது சஹீஹ் தான் என்பதற்கு ஆதாரமாகும்.


அறிவிப்பாலர்களிடம் குறைகள் இருப்பதை போலவே அவர்களைப்பற்றி விமர்சிப்பவர்களிடமும் குறைகளும் தவறுகளும் இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டால் எளிதில் விளங்கும்.


`சாதான்` என்ற அறிவிப்பாளர் வழியாக ஹகம் பின் உதைபா அவர்கள் எதையும் அறிவிப்பதில்லை. அவரை பலவீனமானவராக கருதினார். அவர் வழியாக ஏன் நீங்கள் அறிவிப்பதில்லை என்று நான் கேட்டேன். அதற்கவர், ''அவர் அதிகமாக பேசுகிறார்'' என்று விடையளித்தார் ஏன் சூக்பா கூறுகிறார்.[தத்ரீப்]


ஒருவர் அதிகமாக பேசுவது நல்ல பண்பு இல்லை என்று கூறலாம். ஆனால் அவரது அறிவிப்புகளை நிராகரிக்க அது காரணமாகாது என்பதை நாம் மறுக்கமுடியாது.குறிப்பிட்ட ஒரு அறிவிப்பாளரின் ஹதீத்களை ஏன் நீங்கள் விட்டு விடுகிறீர்கள்? என்று சுக்பாவிடம் நான் கேட்டேன்.அதற்க்கவர்கள் ''படுத்துக்கிடக்கும் குதிரையை காலால் மிதித்து எழுப்பி அவர் சவாரி செய்வார்'' என்று விடையளித்தார்கள் ஏன் முஹம்மது பின் ஜபார் அறிவிக்கிறார் [தத்ரீப்]


படுத்துக்கிடக்கும் குதிரையை காலால் மிதித்து எழுப்புவதற்கும் அவ்வாறு செய்பவரின் ஹதீதை நிராகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இது போன்ற காரணங்களுக்காக ஒருவரை பலவீனமானவர் என்று தீர்மாநித்தவர்களும் இருந்துள்ளனர்.


நன்றி: அல் ஜன்னத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக