கடவுளை பொறுத்தவரை சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. இதில் நம்பிக்கை உள்ளவர்களே இந்த உலகத்தில் மிகுதியானோர். காரணம் எல்லா மதங்களும் கடவுள் என்ற ஒரு சொல்லை வைத்து தான் இயங்குகின்றன. ஒரு மதம் பல கடவுள் என்று சொல்லும், இன்னொரு மதம் மூன்று என்று சொல்லும், மற்றொரு மதம் ஒன்று என்று சொல்லும் ஆக கடவுள் என்னும் பரம்பொருள் தான் இங்கு அடிப்படை.
இதில் கடவுளை வணங்குபவர் தாம் எதை தேர்வுசெய்து இப்படி தான் இருக்கனும் என்று நிர்ணயித்துக்கொண்டார்களோ ! அதன் பிரகாரம் பாரையினாலோ அல்லது இன்ன பிற உலோகங்கலாலோ வடித்துக்கொண்டு வணங்குவார்கள்.
மற்றொருவர் மனிதரையே ! அவர் இறந்த பிறகு கடவுள் என்று. சிலை வடித்து வணங்கிவிடுவார்கள்.
இன்னொரு சாரார் கடவுளை காண்பதற்கு மனிதனின் கண்கள் சக்தி பெறாது. மகா பிரமாண்டமான ஆகாயத்தையும்,( பூமியொன்று இருந்தும் அதை இருந்த இடத்திலிருந்து முழுவதையும் பார்க்க சக்தியற்ற ) பார்வைகளுக்குள் அடக்கமுடியாத மிகப்பெரிய பூமியையும், இந்த பூமியை விட பன்மடங்கு பெரிதான நெருப்பிலான சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தையுமே ! பார்க்க சக்தி இல்லாத மனிதனின் பலவீனமான கண்கள் இவைகளை எல்லாம் உறுவாக்கிய ஒரு மிகப்பெரிய படைப்பாளன். அந்த கடவுளின் உருவத்தை சிறிய அறிவு கொண்ட மனித கண்களால் பார்க்கவும் கரங்களால் வடிக்கவும் சக்தியற்றவை. ஆனால் கடவுள் உண்டு என்பதை மட்டும் நம்பி வணங்குவார்கள்.
ஆனால் கடவுள் என்ற ஒரு மிகப்பெரிய சக்தி உண்மையில் இருக்கின்றதா ? என்பது பலரின் கேள்வியாகவும். இருக்கும்.
இன்னும் சிலர் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அவரை நாங்கள் பார்க்கனும். கண்களால் பார்த்த பிறகு தான் எங்கள் அறிவு ஏற்றுக்கொள்ளும் இல்லையென்றால் அது மூட நம்பிக்கை என்று சொல்லி ஒரு படி மேலே ! போய் நிராகரிப்பார்கள்.
கடவுளை நம்பி வாழ்வதற்கு ஐம்புலன்கள் அறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்கனும்.
சிந்தனை மற்றும் பகுத்தறிவு ரீதியாக. எதையும் அலசிப்பார்க்கும் மனோபக்குவத்திர்க்கு எந்த ஒரு கொள்கையும் தடையாக இருந்துவிடக்கூடாது. என்பது ஒரு முக்கியமான புள்ளியாகவும் இருக்கனும்.
கண்களால் மட்டும் பார்த்து நம்புவேன் என்று அடித்து சொல்பவர்களுக்கு. அதன் அடிப்படையிலேயே ! உங்களின் இன்ன பிற சம்பவங்களையும் அடித்து நம்ப முடியுமா ?
குறிப்பு:
உங்களை ஈன்றெடுத்த தாய் அந்தப்பெண்ணை எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள். உங்கள் கண்களால் அந்தப்பெண் தான் ஈன்றெடுத்தார் என்று எப்படி நம்புகிறீர்கள் எப்போது பார்த்தீர்கள். ஏன் ? ஒரு சொற்ப விலை கொடுத்து உங்களை மற்றவர்களிடமிருந்து வாங்கியிருக்கக்கூடாதா ? அல்லது ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்திருக்கக்கூடாதா ?
உங்கள் மூத்த சகோதரன் பிறப்பை எப்போது உங்கள் கண்களால் பார்த்து உருதிசெய்துகொன்டீர்கள் . ஆதாரம் ஏதாவது உண்டா ? தன்னுடைய்ய பிறப்பே ! பார்வை எனும் ஆதாரம் இல்லாத நிலை ஆகிவிட்டது பார்த்தீர்களா ?
காற்றை வைத்துக்கொள்ளுங்கள் அது வேகமாக அடித்து மரங்களையும், மின்கம்பங்களையும் சாய்த்துவிடுகிறது. கண்களால் காற்றை பார்க்கமுடியாத காரணத்தால். காற்று இல்லை என்று முடிவுகட்டிவிடுவீர்களா ?
நீங்கள் சுவாசிப்பது என்ன ? அது ஆக்சிஜனா ? அதன் கலரை காட்டு என்று யாரிடமும் கேட்ப்பீர்களா ? அப்படி கேட்டால் உங்கள் நிலை என்ன ?
அதே சுவாசத்தில் கலந்து வரும் நறுமணத்தையும், காற்றையும் உங்கள் இருண்டு கண்களால் பார்க்கமுடிகிறதா ? அல்லது உங்கள் இருகைகளால் பிரிக்கத்தான் முடிகிறதா ? பார்க்கமுடியாத காரணத்தால் வாசனை திரவியம் ஒரு மாயை என்று உங்களால் சொல்லமுடியுமா ?
சமையல் அறையில் வரும் கோழிவறுவல், மீன் பொரியல், கடுகு,மிளகாய்,வெங்காயம்,எண்ணையை கலந்து தாளிக்கும் மனத்தை உங்களால் மறுக்கமுடியுமா ? அந்த மனத்தை கண்ணைக்கொண்டு பார்க்க முடியவில்லை ஆதலால் அது இல்லை என்று நிரூபிக்கமுடியுமா ?
கண்களுக்கு எந்த அளவோடு பார்க்க முடியுமோ அதை மட்டும் தான் பார்க்கமுடியும். குறிப்பாக இதில் தட்டச்சு செய்த எழுத்தை பார்க்கமுடியும். உங்களுக்கு முன் உள்ளவர்களை பார்க்கமுடியும். இதே ! தட்டச்சை பத்து மீட்டெர் தூரம் கொண்டு நீங்கள் படிக்கமுடியுமா ? முடியாது. முடியாததால் அது பொய்யாகுமா ? சமீபமாக வந்தால் தான் எழுத்தை படிக்கமுடியும்.
உதாரணத்திற்கு.நீங்கள் டெலிபோனில் உங்கள் பெற்றோரிடம் நலம் விசாரிக்கிறீர்கள். அவர்கள் தாம் நலம் என்றும் பதில் சொல்லிவிட்டார்கள். பிறகு உங்கள் மனைவியிடம் நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்ததா ? என்றும் கேட்கிறீர்கள். அவரும் ஆம் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகு போனை வைத்துவிட்டு. யோசிப்பீர்களா ? இல்லை நான் நேரில் போய் என் இரண்டு கண்களை கொண்டு பார்த்துவிட்டு தான் நம்புவேன். என் பெற்றோர் நலம் என்றும் என் மனைவி கையில் இருக்கும் பணத்தை கண்ட பிறகு தான் முழுமையாக உருதிசெய்துக்கொள்வேன். கிடைத்துவிட்டது என்றும் சொல்வீர்களா ?
மாட்டீர்கள் காரணம் டெலிபோனில் பேசி உருதிசெய்துக்கொன்டீர்கள். இதற்க்கு முக்கிய காரணம் சத்தம் அந்த சத்தம் என்னும் ஓசையை காதால் மட்டும் தான் கேட்க்கமுடியும் கண்களால் பார்க்கவும் முடியாது மற்றும் மூக்கை கொண்டு நுகரவும் முடியாது.
பார்க்கமுடியாத காரணத்தினாலும், நுகரமுடியாத காரணத்தினாலும் ஓசை என்னும் சத்தம் இல்லை என்று வாதிடுவீர்களா ? அப்படி வாதாட நீங்கள் முற்ப்பட்டால் உங்களுக்கு இருக்கும் காது என்ற உறுப்பை வெட்டிக்கொள்வீர்களா ?
இன்றைக்கு விஞ்ஞானம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன. கணினி, ஊர்தி ஆயிரக்கணக்கான டெக்க்னாலஜி முறைகள் அறுவை சிகிச்சைகள். வந்துவிட்டன. இதற்க்கு முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை அந்த சிந்தனையை கண்களாலும் பார்க்கமுடியாது.காதுகள் கொண்டு கேட்க்கவும் முடியாது மூக்கைகொண்டு நுகரவும் முடியாது.
பார்க்கமுடியவில்லை, நுகரமுடியவில்லை கேட்க்கமுடியவில்லை ஆகையால் சிந்தனை என்ற ஒரு பிரமாதமான முக்கியமான தன்மையை இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கமுடியுமா ?
ஆக எல்லாவற்றையுமே ! கண்களால் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொள்ள முடியாத மனிதன் தன் பிறப்பு முதற்கொண்டு. கடவுளை மட்டும் எப்படி கண்களால் பார்த்த பிறகு தான் நம்புவேன் என்று சொல்வது எந்த விதத்தில்
நியாயம்
மனிதன் உண்மையில் நன்றி கெட்டவனாகவும் நம்பிக்கை விஷயத்தில் பாரபட்சம் காட்டுபவனாகவும் இருக்கின்றான்
வெள்ளி, 20 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக