அன்பார்ந்த சகோதர மக்களே ! நாம் பல வகையில் உழைத்தாலும் பொருள் ஈட்டினாலும்.அல்லது நாடு விட்டு நாடு சென்று குடும்பம் தாய் தந்தையர் மனைவி அன்பு பிள்ளைகள் எல்லாவற்றையும் பிரிந்து பலவருடம் தியாகம் செய்து. பொருள் ஈட்டினாலும். இறைவன் நமக்கு கொடுத்த கால அவகாசமும். நமக்கென்று விதித்த செல்வம் இவைகளை மட்டும் தான் நம்மால் தேட முடியும். இதற்க்கு மேல் கொஞ்சம் கூட பெற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒரு தொழிலின் மூலமும். மற்றும் அலுவலக சம்பாத்தியத்தின் வாயிலாகவும். தேடிய செல்வம் அனைத்தும் முடிவு பெரகூடியவைதான். ஒரு குறிப்பிட்ட கால கெடுவோடும் அல்லது நமக்கு பின் தலைமுறை மக்களோடும் முடிவு பெரும்
உதாரணம்: நாம் அணியும் ஆடை அது கிழிந்து போகும் வரைக்கும்.
உதாரணம்: நாம் அணியும் செருப்பு அது அறுந்து போகும் வரைக்கும்.
உதாரணம்: நாம் கட்டும் வீடு அல்லது மாளிகை அது ஒரு ஐம்பது வருட கால கெடுவோடு இடிக்க வேண்டிய தருவாய் ஏற்படும்.
உதாரணம்: நாம் வைத்திருக்கும் நிலமும், தோட்ட துரவுகள். நாம் இருக்கும் வரைக்கும் இலாபமும் கொடுக்கும், நஷ்டமும் கொடுக்கும். உறுதி சொல்லமுடியாது.முதிய வயதில் அது இலாபம் ஈட்டினாலும் அதை அனுபவிக்க முடியாத நிலையில் நாம் இருப்போம் வெறும் கஞ்சியும் மருந்துமாக வாழ்க்கை ஓடும்.
இப்படி அடுக்கிகொண்டே போனால் நிறைய சொல்லலாம். ஆனால் என்றைக்குமே அழியாத வியாபாரம் ஒன்று இருக்கிறது.அந்த வியாபாரத்தினால் ஈட்டியவைக்கு கால கெடு கிடையாது. அதற்க்கு முடிவுரை என்பது இல்லை.நஷ்டம் மற்றும் லாபம் கலந்து அளிக்காமல் இலாபம் மட்டுமே கொடுக்கக்கூடியது.
அது என்ன ? தெரியுமா லைசென்ஸ் எடுக்க தேவையில்லை. முதலீடு செய்ய அவசியமில்லை. இடம் பார்த்து கூட்டம் அதிகம் உள்ள இடமா? இல்லையா? என்று பார்க்க தேவையுமில்லைl நெற்றி வியர்வை சிந்தனும் என்ற தலைஎழுத்துமில்லை. எட்டு மணிநேரம் செய்யனுமா ? அல்லது கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளனுமா ? என்று யோசிக்கவேண்டியதுமில்லை. திருட்டு போய் விடுமோ ! என்று பயந்து பூட்டிவிட்டு தான் வரனும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.
வருவாய் துறை அதிகாரிக்கு கணக்கு காட்டவேண்டிய அவசியமில்லை. ஆனால் உறுதியான இலாபம். நிச்சயம்.
நேரம்:
ரொம்ப சுலபம் எப்படி உங்களுக்கு டி.வி. பார்க்கும் பழக்கம் இருந்தால் அதில் உள்ள நேரத்தை உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
முதலீடு:
நீங்கள் சிகரட் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? அல்லது வெற்றிலை,சீவல்,சுண்ணாம்பு போடுகிரவர்களா.? அதை முற்றாக தவிர்த்தால் அதுவே! முதலீடு.
அல்லது பல பொருட்கள் வாங்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால். கொஞ்சம் அதில் ஒன்று இரண்டு குறைத்து சில்லறை காசுகளாக சேமித்து.வைத்தால் அதுவும் முதலீடு.
மற்றபடி உங்களுக்கு அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை ஒதத்தெரிந்தாகனும். அது உங்களுக்கு பள்ளிவாசலில் சும்மாவே இருக்கும். இன்னொன்று உங்கள் தொழுகையை நேரம் தவறாமல் தொழுதாகனும். மற்றது உங்கள் மனம் வந்து உங்கள் முதலீடால் போட்ட பணத்தை உங்களுக்கு தெரிந்தவர்கள் ஏழை, நலிந்தவர்களுக்கு செலவு செய்யுங்கள். இதோ இந்த குர்ஆன் வசனத்தை பாருங்கள். அதன் படி வியாபாரம் செய்யுங்கள்.
35:29 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாக கடைபிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
புதன், 18 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக