வெள்ளி, 30 அக்டோபர், 2009

இயற்க்கை உறவுமுறைகளை மாற்றுவது பெரும்பாவம்

மனிதர்களில் பலர் மனைவிகளைப் பார்த்து தாய்க்கு ஒப்பாக நினைத்து அழைப்பது. அல்லது தாயை போல் மனைவி இருக்கின்றார் என்று சொல்வது கூட இறைவனிடம் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் பாவம் ஆகும்.

அதே போல் வளர்ப்பு பிள்ளையையும் பெற்ற மகனுக்கு ஒப்பிட்டு மகனே ! என்று அழைப்பதும் தவறாகிவிடுகிறது. காரணம் எது எந்த அடிப்படையில் இருக்கின்றதோ ! அதை தழுவி தான் நாம் அழைத்துக் கொள்ளவேண்டும் அல்லாமல் நாமலாக உறவு முறைகளை உருவாக்கி கொள்ளக் கூடாது என்பது தான் இறைவனின் கட்டளை.

உதாரணத்திற்கு பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சின்னப்பா, இப்படி இயற்கையாக உள்ள உறவு முறைகள் நாம் ஏற்படுத்திக் கொண்டது கிடையாது. நமக்கு இறைவனால் கிடைக்கப் பெற்றவை அது போலவே சகோதரி கணவன் மச்சான் என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு. தம் சகோதரிக்கு கணவனை நாம் தேர்ந்தெடுக்கின்ற காரணத்தால் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு என்கிறோம். இதில் மச்சான் உறவு முறை அற்றுப் போய்விடவும் சாத்தியக் கூறு உள்ளது. அல்லது வேறொரு மச்சான் உறவை கூட நாம் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

ஆனால் பெரியம்மா பெரியப்பா முறைகளை நாம் நிர்ணயிக்கமுடியாது. இதை போலவே மகன், அல்லது, மகள் உறவையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டது இல்லை. இறைவனால் நமக்கு கிடைக்கப் பெற்றவை. இந்த இயற்க்கை முறையை தான் அல்லாஹ் நமக்கு கீழ் கானும் அழகான வசனத்தின் மூலம் தெரியப் படுத்தும் செய்தி

33:4 எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான் இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

மற்றொன்று முக்கியமான விஷயமும் இதில் அடங்கியுள்ளது. யாரை தன் பிள்ளை என்கின்றோமோ ! அன்றிலிருந்தே அந்த வளர்ப்பு மகனின் உண்மையான தாயின் கற்புக்கு அவதூறாக அமைந்துவிடுகின்றது வளர்ப்பவரின் வார்த்தை. இன்னும் அவரே வளர்ப்பு மகனின் தாயிடம் உறவு கொண்டதாக அபாண்ட வார்த்தையை தனக்குள்ளேயே பழி போட்டுக் கொண்டுவிடுகிறார்.

அதனால் வளர்ப்பு மகனை தன் பிள்ளை என்று அழைக்காமல். நண்பர்களாக அல்லது சகோதரர்களாக அழைக்கலாம். அதுவே அழகானது.
33:5 (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

புதன், 14 அக்டோபர், 2009

இரண்டு தடவை பூமியில் இருந்து வெளிப்படும் ஆதமின் சந்ததி

அல்லாஹுத் தஆலா முதல் மனிதர் ஆதாம் ( அலை ) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்ததை முன்னிறுத்தி. அந்தக் களிமன்னானது பூமியிலிருந்து எடுத்து படைக்கப் பட்டவர்தான் ஆதாம்.

அதனால் தான் பூமியில் விளையும் விளைச்சல்களையும், அதிலிருந்து பெறப் படும் நீரையும் நாம் உட்கொள்ளவேண்டியிருக்கின்றது.

பூமியில் கிடைக்கும் தாதுப் பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு இன்றியமையாதது.உதாரணத்திற்கு ஜின்க்- துத்தநாகம்,காப்பர்- தாமிரம், அயன்- இரும்பு, பைபெர்- இழை,நார் சத்து இன்னும் கால்சியம்- என்ற சுண்ணாம்பு சத்து இன்னும் அதிகதிமான மனிதர்களின் உடலுக்கு இவைகளின் அளவுகள் குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் மூலம் எடுத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாதுப் பொருட்கள் சிறுகச் சிறுக நம் உடலுக்கு மாத்திரைகளின் வழியாகவும் காப்சூல்களில் நிரப்பப் பட்டுள்ள சத்துகளின் உதவிக் கொண்டு நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

ஆகையால் மனிதர்களும் மற்றும் இதரப் படைப்புகளும் பூமியின் ஒரு பங்கு அல்லாமல் வேறில்லை.

20:55 இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம் அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

புதன், 7 அக்டோபர், 2009

நரகத்தில் இறை மறுப்பாளர்களும், இணை வைப்பாளர்களும்.

இறை மறுப்பாளர்கள் மரணத்திற்கு பின் தண்டிக்கப் படுவார்கள். என்பது திண்ணம் அவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் நிராகரிக்கப் படும். எந்த நர்ச் செயல்கள் இவ்வுலகத்தில் செய்து வைத்திருந்தாலும். அது கண்டுக் கொள்ளப்படமாட்டாது. தானமாக இருக்கட்டும், உயிர்த் தியாகமாக இருக்கட்டும், எதுவும் பலனளிக்காது. ஏன் ? இறைவன் இப்படி ஒரு புறக்கணிப்பை கொடுக்கின்றான்.

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

இப்படி எச்சரித்ததோடு அல்லாமல் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்திருக்கின்றான். அந்த அறிவு விலங்கினத்திற்கு இருப்பது போல் அல்ல.

தனி விசேஷ தன்மைகள் கொண்டது. அழைக்காத விருந்துபசரிப்புக்கு போக மாட்டார். கவ்ரவமான வாழ்க்கை வாழ்வார். காரணம் பகுத்தறிவு ஆடு,மாடுகள் போல் கண்ட மேனிக்கு உலாவமாட்டார். வரைமுறைகள் நிர்ணயித்துக் கொள்வார்.

தன் மனைவியை தனக்கு வேண்டியே ! திருமணம் செய்திருப்பார். தன் மனைவி தன்னை மட்டும் கணவன் என்று சொல்லணும் என்று எதிர் பார்பார்.அன்றியும் தனக்கு மட்டுமே அவள் மனைவியாக இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பு மாற்றமாக வேற யாரையாவது தன்னுடைய கணவன் என்று சொன்னால் ! எப்படி நமக்கு கோபம் வருமோ ! அந்த அளவுக்கு நம்மை கற்பிலிருந்து பரிபாலித்து வளர்த்து இன்றைக்கு வரை நம்மை பாது காத்து வைத்து இருக்கும் ஏக இறைவனுக்கு வேற ஒருவரை இணை கற்பிப்பது. கோபமூட்டக் கூடிய செயலாகும் அது மன்னிக்க முடியாத மா பாதக குற்றமாகும்.

இப்படி சிந்திக்கும் பகுத்தறிவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கொடுத்த பின்பே ,நல்லது மற்றும் தீயதை இனங்காட்டி அறியக்கூடிய சக்தி அனைவருக்கும் இருப்பதாலேயே ! மனிதர்களுக்கு மட்டும் நரகம் என்றும் சுவனம் என்றும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.

35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்).

சனி, 18 ஜூலை, 2009

வஹி அறிவிக்கப்பட்ட தாய் !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அன்பிர்க் குரிய சகோதரர்களே ! நாம் பலவாறாக இறைச் செய்தியை வல்ல ரஹ்மான் ஜிப்ரீல் ( அலை ) மூலம் மாந்தர்களுக்கு நேர்வழி காட்டும் முகமாக ஆதாம் நபி முதற்கொண்டு இறுதி நபியாகிய முஹம்மது ( ஸல் ) அவர்கள் வரை ஆண் பாலரிலிருந்தே நபியை அனுப்பியுள்ளான்.

திருக் குர்ஆனின் போதனையும் இந்த வரைமுறைக்கு உட்பட்டதே ! அதாவது நபியோ அல்லது. ரசூலோ அனைவரும் ஆண் இனமே அல்லாமல் பெண் இனத்தில் எந்த தூதரும் கிடையாது. அது. அல்லாஹ்வின் நியதி. அது மனிதர்களுக்குண்டான நியதி.

ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். தனக்கென்று எந்த நியதியும் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுளோம். ( வஹி ) என்ற இறைச்செய்தியை ஜிப்ரீல் ( அலை ) மூலமும் நபி மூஸா ( அலை ) இடம் அருளியுள்ளான். வானவர் ஜிப்ரீல் அல்லாமலும் திரைக்கு அப்பாளிலிருந்தும் மூசாவிடம் பேசியுள்ளான் என்பதும் யாவரும் அறிந்ததே !

அந்த வஹி என்ற இறைச்செய்தியை தனிப்பட்ட முறையில் வேத வெளிப்பாடு அல்லாமல் நம்பிக்கையாளர் ஒழுக்கச் சீலர் என்ற முறைப்படி மற்ற பாலருடனும் அல்லாஹ் பேசியுள்ளான். என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அது தான் உலகத்தின் உயர்ந்தப் பெண்மணி மரியம் ( அலை ) அவர்கள். அனைவரும் அறிந்ததே.

மற்றொரு தாய். அவர் தான் நபி மூஸா ( அலை ) அவர்களின் தாய் அவரிடமும் ஏக இறைவன் வஹி மூலம் பேசியுள்ளான். அதைப் பாருங்கள்

28:7 நாம் மூஸாவின் தாயாருக்கு: 'அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம் நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்' என்று வஹீ அறிவித்தோம்.

ஞாயிறு, 24 மே, 2009

மரித்தோர் செவியேற்க மாட்டார்

இறந்து போனவர்களால் மற்றவர்களின் உரையாடலை கேட்க்க முடியுமா ? என்றால் அது முடியாது. உயிரோடு உள்ளவர்கள் பல கலந்துரையாடல்கள் மூலம் இன்னொருவரின் பேச்சுக்கு மருப்புரைப்பது. அல்லது ஆமோதிப்பது.

மற்றவை நண்பர்களுடன் நேரங்காலம் தெரியாமல் பல வகையான பேச்சுக்கள் பேசுவது. வினாக்கள் சார்ந்த வார்த்தைகள் வலம் விட்டு. பதில் பெற்றுக்கொவது. கிரிக்கெட் ஸ்கோர் என்ன ? என்றெல்லாம் கேட்டு அந்த கணமே நண்பர்களிடம் விடையையும் பெற்றுக்கொள்ளும் வார்த்தைகள் ஏராளம். கருத்துக்கள் பலவகைகள் பரிமாறிக்கொள்வது. ஏராளம். மனதில் ஆழமாக ஏற்றிக்கொள்ளும் புதிய சிந்ந்தனை கருத்துக்கள் ஏராளம். யாராவது. குற்றம் சுமத்தினால் அவதூறு சுமத்தினால் எதார்த்த நிலையிலிருந்து மாறி சினங்கொண்டு. ஆவேசப்பட்டு வாயில் வந்தவையெல்லாம் வீசியிடும். மறு வார்த்தைகள் ஏராளம்

அதற்க்கு அதாரத்தோடு மறுப்பு தெரிவிக்கும் தன்னை குற்றமற்றவர் என்று வாதாடும் வாசகங்கள் ஏராளம். தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசும் மனிதர்கள் ஏராளம் எங்கிருந்தோ பேசும் இன்னொருவரின் பேச்சுக்கு பதில் கொடுப்பது. புரியவில்ல மறுபடி சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுவது.

இவை எல்லாம் நாம் உயிரோடு இருப்பதால் இயல்பாக நடக்கும் சம்பவங்களுக்கு பதிலளிக்கிறோம்.
இது மாதிரி இறந்தவர்களால் செவிஏற்க முடியுமா ? உடனுக்குடன் மறுப்பு சொல்ல முடியுமா ? முடியாது. நாம் பகலில் உறங்கும் பொழுது யாராவது பேசினால் எப்படி அறையும் குறையுமாக விளங்குகிறது. அதே நேரத்தில் நமக்கு எதிராக யாராவது பேசினாலும் சட்டென்று பதிலளிக்க முடியாது.

இந்த நிலைப் பாட்டைவிட இன்னும் கீழானவைதான் இறப்பு. இன்னும் தூக்கமும் ஒரு இறப்பாக இறைவன் நமக்கு அறிவிக்கின்றான். தூக்க நிலைப்பாட்டில் உள்ள இறப்பை நாம் அளவுகோலாக எடுத்து. அந்த நேரத்தில் நடக்கும் பேச்சுக்களுக்கே பதில் கொடுக்க முடியாத நம்மை தெளிவாக கேட்க்க முடியாத மனிதர்கள்.

இறந்தவர்களாக மகான் என்ற பெயரிலும் சூபிய் என்ற பெயரிலும் கேட்க்க முடியும் என்பது. அறிவை வட்டிக் கடையில் அடகு வைத்து மீட்க்கமுடியாமல் மூழ்கவைப்பதற்கு சமமாகும். இறைவாக்கான குர்ஆனை பற்றிப் பிடிப்போமாக.

35:14 நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார் செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள் கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள் யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.

திங்கள், 13 ஏப்ரல், 2009

இல்லறத்தில் பேனக்கூடியவை

இஸ்லாம் கூறும் இந்த நடைமுறைகளை நம் வாழ்வில் அன்றாடம் நடைமுறை படுத்திக் கொள்ளவேண்டும். தொழுகை, இன்ன பிற வணக்கவழிபாடுகளை நாம் செய்து வந்தால் அதுவே ! போதும் எல்லாம் முடிந்துவிட்டது. என்று இருந்து விடக்கூடாது. அது மட்டும் அல்ல நம் வாழ்க்கை. இதில் நாம் தவறிழைத்தால் மிகப்பெரிய ஒரு இழப்பை நம் சந்ததிகள். பெற நேரிடும்.

இவன் நம் பிள்ளைதானே அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நாமளாகவே ஒரு தப்பான என்னத்தை நம் மனதிற்குள் போட்டுக்கொண்டு அஜாக்கிரதையாக இருந்து வரும் மக்களும் நம்மில் உண்டு.

கணவன்,மனைவிக்குள் உண்டாகும் ஊடல் சரசங்கள் முதல் எல்லாவற்றிலும் மறைமுகம் இருந்தாகனும் பிள்ளைகள் முதற்க் கொண்டு தெரியவரக்கூடாது. என்று. ஓர் உன்னதப் பண்பாட்டை இந்த உலகிற்கு எடுத்து இயம்பும் அல்லாஹ்வின் திரு வசனம் நமக்கு நல்ல எடுத்துக் காட்டு.

நான்கு வயதாகும் சிறுவன் அவனுக்கு கீழே உள்ள தன் சகோதரியிடம் விளையாட்டு போக்கில் செய்யும் காரியம் அது. என்ன என்று தெரியாத வயதில் அப்படி அவனை செய்ய தூண்டிய செயல் எது ? என்று. கேட்டால்.

தன் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மிருகங்களைப் போல் உடர்த் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் காரியம் தான். முக்கியக் காரணம். மனிதர்களாக வாழத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம் கூறும் கண்ணிய வாழ்க்கையை பேணி நல்ல சந்ததியை உருவாக்கி வைக்க கடமைப் பட்டுள்ளோம்.

24:58 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்¢ ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை¢ இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்¢ இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.

24:59 இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்¢ இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்¢ அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்¢ ஞானம் மிக்கவன்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

காய்கறிகள் பழங்களில் கொடுத்துதவு

6:141 பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

அறுவடைக் காலங்களில் நாம் என்ன செய்கிறோம். என்று கொஞ்சம் என்னிப்பார்கக் கடமைபட்டுளோம். இலாபம் வந்தால் ஒரே குஷி தான் போங்க அப்படியே நம் அண்டை வீட்டார்களுக்கும் நம் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளலாமே !

இறைவன் நமக்கு மேற்கண்ட வசனத்தின் படி வீண் விரயம் செய்யாமல் ஏழைகளை அரவணைத்து. அவர்களுக்கும் அன்டைவீட்டார்களுக்கும் உதவினால் பாகத்தை கொடுத்துவிடுங்கள் என்ற கட்டளையை செய்தோராகவும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றோராகவும் ஆகிவிடுகிறோம்

இதை செய்த பிறகு அதில் உள்ள சந்தோஷத்தை பாருங்கள். அது போல் வேறு எங்கேயும் உங்களுக்கு திருப்தி இருக்காது.

செவ்வாய், 24 மார்ச், 2009

மறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.

நாம் முஸ்லிம்கள் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று. கடமைக்கு தொழுதுக் கொண்டு பிற மத சகோதரர்கள் போலவே உலக வாழ்க்கையில் லயித்துக் கொண்டு. சின்னஞ்சிறு விஷயத்திர்க்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டும் மரத்தின் சிறு கிளை தன் வீட்டின் முகப்பில் பட்டாலும். தன் அண்டை வீட்டாரிடம்

வம்புக்கு நின்றுக்கொண்டு. மல்லுக்கட்டும் முஸ்லீம் சகோதரர்களே ! நாம் என்றும் நிலைத்து வாழ்ந்திடுவோமா ? எதற்காக இந்த உலக வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். அதோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டீர்களா ? இல்லையே !

மறுமை இருக்கின்றதே. எதை நாம் செய்து வைத்திருக்கின்றோம். இந்த அண்டை வீட்டாரின் மரம் விஷயத்தையோ அல்லது ஒரு சாண் நிலத்தில் ஏற்படும் பிரச்சனையையோ நாம் விட்டுக் கொடுத்தாலும் அது தர்மமாகிவிடும். அல்லவா ?

இந்த தர்மத்தில் உழைப்போ, அல்லது மெனக்கீடோ எதுவும் கிடையாது.

79:37எனவே, எவன் வரம்பை மீறினானோ-

79:38இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

79:39அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

ஆக விட்டுக் கொடுக்கும் தன்மை கூட இல்லாமல். நாம் மருமைக்காகப் பாடு பட்டவர்களா ? அல்லது மறுமையில் எமாற்றதிர்க்காக பாடு பட்டவர்களா ?


வெள்ளி, 20 மார்ச், 2009

வாழ்விலும், இறப்பிலும், சோதனை நமக்கு

67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

சகோதர சகோதரிகளே ! அல்லாஹ்வின் இந்த தூய வார்த்தையை கருத்தில் கொண்டு. நம்முடைய செயல்கள் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அடிப்படை கடமைகளிலிருந்து விலகிடாமல் இன்னும் ஏக இறைவனாம் அல்லாஹ் ( ஜல் ) தஆலாவுக்கு எந்த வகையிலும். இணை கர்ப்பிக்காமல்

நமக்கு வரும் சில துன்பங்களை சகித்தும், வீண் விரயம் செய்யாமல். நம் குழந்தைகளையும் தீன் அடிப்படையில் வளர்த்து வந்தால் நமக்கு வெற்றி நிச்சயம்.
அல்லாமல் எப்பொழுதும், சினிமா சீரியல் என்று நம் சிந்தனையை மழுங்கடித்து. எப்பொழுதும். கண்ணீர் சீரியல் பார்த்து நம் பொன்னான நேரங்களை வீணடித்தால். நிச்சயமாக இதற்க்கு இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவேண்டும். அதே கண்ணீரோடு.

சீரியலும் கண்ணீர் அதனை பார்ப்போரும் கண்ணீர் விடவேண்டியுள்ளது. பிறகு மறுமையிலும் தொடர்ந்து கண்ணீரா ?

என்ன ஒரு சூனியமான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட வாழ்வும் அதன் பிறகுள்ள இறப்பும் இறைவனிடத்தில் நாம் சோதனையாக சமர்பித்தால் மறுமையில் அழிவு நிச்சயம்.

மாறாக நல்ல விதமான செயல்பாடுகளை செய்து. இறைவனிடத்தில் வெற்றியை பெற்றுக் கொள்வோமாக.

புதன், 18 மார்ச், 2009

சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக

சகோதரர்களே ! நம்மில் நயீம் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும். பிர்தவ்ஸ் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வோம். ஆனால் இத்தகைய காரியங்களிலிருந்தும். விலகிக் கொண்டால் தான் அது நமக்கு நிச்சயம். அதோடு மட்டும் அல்லாமல் தொழுகையை கடைபிடித்துக்கொண்டும் இருக்கவேண்டும்.

அது எந்த ? வகையான காரியங்களிலிருந்து விலகிக் கொல்லனும்.

விபசாரம் செய்யக்கூடாது.

அமானிதப் பொருளிலும், மற்றும் வாக்குறுதியிலும் ஒழுங்காக இருக்கக் கற்றுக்கொல்லனும் .

ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு. அவர் உங்களை நம்பி இருக்க கடைசியில் வந்து இல்ல இப்ப சிரமமாக உள்ளது. அதனால் வேற யாரிடமாவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது.வாக்கு மீறுதல்.

அடுத்து. சாட்சி சொல்வதில் ஏமாற்றுவது. அல்லது பின்வாங்குவது. அதில் நாம் உறுதியாக இருக்கணும்.

70:23 (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.


70:24 அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.


70:25 யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

70:26 அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.


70:27 இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.


70:28 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.


70:29 அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-


70:30 தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.


70:31 எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.


70:32 இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.


70:33 இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.


70:34 எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.


70:35 (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.

செவ்வாய், 17 மார்ச், 2009

உன்னிப்பான சட்டங்கள்

இத்தாவை பொறுத்தவரை நான்கு மாதம் பத்து நாள் என்று வெளிப்படையாக நாம் தெரிந்து வைத்திருந்தாலும். திருமணம் ஆன பெண்ணாலானும் கணவன் தொடாத நிலையில் விவாகரத்து பெற்றுவிட்டால்; அந்தப் பெண் இத்தா இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது

33:49 ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து,
பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே ``தலாக்" செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

புதன், 4 மார்ச், 2009

நல்லவர்களுக்கும் தண்டனை வரும்.

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர பெருமக்களே. இன்று நம்மில் பலர் தான் நல்ல காரியம் செய்தால் போதும் நாம் ஏன் ? பிறருக்கு அறிவுரை சொல்லனும். எதற்காக பதிலுக்கு வாங்கிக் கட்டிக்கனும் என்று பயந்து ஒதுங்கி போவதை பார்க்கின்றோம்.

சிலரோ அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார் நோன்பு நோர்ப்பார், ஹஜ் முதற்க் கொண்டு செய்திருப்பார். ஆனால் அவரிடமோ தொழில் வட்டி சம்பந்தப் பட்டதாக இருக்கும் இவர்கள் ஜக்காத் என்னும் கடமையை மறந்துவிடுவார்கள்.மற்றும் தர்மம் என்பது இவர்களின் அகராதியிலேயே இருக்காது.

இன்னும் சிலர் தாய் தந்தையர் வைத்த பெயரைமட்டும் தாங்கிக் கொண்டு. வெறும் கால்நடைகளைப் போல் உண்டுக் கொண்டும், உறங்கிக் கொண்டும், அலைந்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இஸ்லாத்தின் தாக்கம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. இவர்களிடம் எந்த பலனையும் பிற மக்கள் அடைய முடியாது. இவர்களுக்கு நல்லது, தீயது எது ? என்று தெரியாது.

வெகு சிலரே ! தானும் வணக்க வழிப்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு மற்றவர்களையும். ஈடுபட அறிவுறுத்துவார்கள். நல்லதை ஏவுவார்கள் மேலும் தீயதை தடுப்பார்கள். இவர்கள் போல் தான் அணைத்து முஸ்லிம்களும் தங்களை மாற்றிக் கொல்லனும்.

காரணம். வருடா வருடம் புயல் காற்று என்றும். நிலநடுக்கம் என்றும். பெரு வெள்ளம் என்றும் ஏராளமான உயிரிழப்புகளை நம்மில் பார்த்துகொண்டிருக்கிறோம்.இவைகள் எல்லாம் அல்லாஹ்விடத்திலிருந்து நமக்கு வரும் தண்டனையாகும்.

நாம் நினைப்போம் ஏன் ? நான் என்ன பாவம் செய்தேன். நல்லமுறையில் சம்பாரிக்கவில்லையா ? ஐந்து வேலை தொழவில்லையா ? நோன்பு நோர்க்கவில்லையா ? திக்ர் செய்தேனே. பின்ன எதற்காக அல்லாஹ் இப்படியொரு தண்டனை கொடுக்கவேண்டும் சடுதியில் வீடு வாசலை இழந்து நிராயுதபாணியாக ஆகிவிடுகிரோமே

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதற்காக இப்படியொரு தண்டனையை நமக்கு தரனும். என்று கேள்விகள் பலவை கேட்க்க தோன்றும். ஆனால் ஒரு சமுதாயத்தில் நல்லவர்கள் சரிபாதியாக இருந்து தீயவர்கள் பாதியாக இருந்தால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்

ஆனால் நல்லவர்கள் சிறு தொகையாக இருந்து அக்கிரமக்காரர்கள் மிகுதியாக இருந்தால். அவர்களை தாக்கக்கூடிய வேதனை நம்மையும் தாக்கும் குடும்பத்தார்களை இழப்போம், விவசாயத்தில் நஷ்டத்தை பார்போம், ஒரு வினாடியில் நடு வீதிக்கு வந்துவிடுவோம். இது இறைவனின் குற்றம் ஆகாது.

ஏற்க்கனவே ! அல்லாஹ் நமக்கு கொடுத்த வாக்குறுதிப்படி நல்லதை ஏவ தவறிவிடுவதாலும். கெட்டதை பார்த்து கண்டும் காணாமலும் போனதால் தான் இந்த தண்டனை. ஏன் ? இப்படி செய்யக்கூடாது எங்களை மட்டும் தனியாக பொருக்கி எடுத்து அப்புறப்படுத்திய பிறகு அல்லாஹ் தீயவர்களுக்கு தண்டனை கொடுக்கலாமே !

ஆனால் இறைவன் இப்படி நல்லவர்களையும் சேர்த்து பழிவாங்குகிரானே ! இது அநீதி இல்லையா ? என்றும் யோசனை வரும். ஆனால் நமக்கு அல்லாஹ் இறக்கிய குர்ஆன் வசனத்தின் கருத்து மட்டும் யோசனை வராது. அதை அலட்சியமும் செய்துவிடுகிறோம். அந்த வசனம் என்ன என்பதை பாருங்கள்.

8:25 நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

அதனால் நல்லவர்களை அல்லாஹ் தனியாக செலக்ட் செய்து காப்பாற்றியாகவேண்டும். என்ற நிர்ப்பந்தம் அவனுக்கு இல்லை. ஆகையால் நாம் இந்த இறைவசனத்தை மனதில் வைத்துக்கொண்டு.நாம் மட்டும் நல்ல செயலை செய்துக்கொண்டு இருக்காமல் மற்றவர்களையும் அதை செய்யச் சொல்லி தூண்டி தீயவைகளை கடுமையாக எதிர்க்கவேண்டும். அவமானமோ, ரோஷமோ.இதற்க்கு தடைக் கல்லாக இருக்கக் கூடாது. மேலும் இதன் அடிப்படையில் நம்மை இறைவன் ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

அட கடவுளே !

கடவுளை பொறுத்தவரை சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. இதில் நம்பிக்கை உள்ளவர்களே இந்த உலகத்தில் மிகுதியானோர். காரணம் எல்லா மதங்களும் கடவுள் என்ற ஒரு சொல்லை வைத்து தான் இயங்குகின்றன. ஒரு மதம் பல கடவுள் என்று சொல்லும், இன்னொரு மதம் மூன்று என்று சொல்லும், மற்றொரு மதம் ஒன்று என்று சொல்லும் ஆக கடவுள் என்னும் பரம்பொருள் தான் இங்கு அடிப்படை.
இதில் கடவுளை வணங்குபவர் தாம் எதை தேர்வுசெய்து இப்படி தான் இருக்கனும் என்று நிர்ணயித்துக்கொண்டார்களோ ! அதன் பிரகாரம் பாரையினாலோ அல்லது இன்ன பிற உலோகங்கலாலோ வடித்துக்கொண்டு வணங்குவார்கள்.

மற்றொருவர் மனிதரையே ! அவர் இறந்த பிறகு கடவுள் என்று. சிலை வடித்து வணங்கிவிடுவார்கள்.

இன்னொரு சாரார் கடவுளை காண்பதற்கு மனிதனின் கண்கள் சக்தி பெறாது. மகா பிரமாண்டமான ஆகாயத்தையும்,( பூமியொன்று இருந்தும் அதை இருந்த இடத்திலிருந்து முழுவதையும் பார்க்க சக்தியற்ற ) பார்வைகளுக்குள் அடக்கமுடியாத மிகப்பெரிய பூமியையும், இந்த பூமியை விட பன்மடங்கு பெரிதான நெருப்பிலான சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தையுமே ! பார்க்க சக்தி இல்லாத மனிதனின் பலவீனமான கண்கள் இவைகளை எல்லாம் உறுவாக்கிய ஒரு மிகப்பெரிய படைப்பாளன். அந்த கடவுளின் உருவத்தை சிறிய அறிவு கொண்ட மனித கண்களால் பார்க்கவும் கரங்களால் வடிக்கவும் சக்தியற்றவை. ஆனால் கடவுள் உண்டு என்பதை மட்டும் நம்பி வணங்குவார்கள்.

ஆனால் கடவுள் என்ற ஒரு மிகப்பெரிய சக்தி உண்மையில் இருக்கின்றதா ? என்பது பலரின் கேள்வியாகவும். இருக்கும்.

இன்னும் சிலர் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அவரை நாங்கள் பார்க்கனும். கண்களால் பார்த்த பிறகு தான் எங்கள் அறிவு ஏற்றுக்கொள்ளும் இல்லையென்றால் அது மூட நம்பிக்கை என்று சொல்லி ஒரு படி மேலே ! போய் நிராகரிப்பார்கள்.

கடவுளை நம்பி வாழ்வதற்கு ஐம்புலன்கள் அறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்கனும்.

சிந்தனை மற்றும் பகுத்தறிவு ரீதியாக. எதையும் அலசிப்பார்க்கும் மனோபக்குவத்திர்க்கு எந்த ஒரு கொள்கையும் தடையாக இருந்துவிடக்கூடாது. என்பது ஒரு முக்கியமான புள்ளியாகவும் இருக்கனும்.

கண்களால் மட்டும் பார்த்து நம்புவேன் என்று அடித்து சொல்பவர்களுக்கு. அதன் அடிப்படையிலேயே ! உங்களின் இன்ன பிற சம்பவங்களையும் அடித்து நம்ப முடியுமா ?

குறிப்பு:
உங்களை ஈன்றெடுத்த தாய் அந்தப்பெண்ணை எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள். உங்கள் கண்களால் அந்தப்பெண் தான் ஈன்றெடுத்தார் என்று எப்படி நம்புகிறீர்கள் எப்போது பார்த்தீர்கள். ஏன் ? ஒரு சொற்ப விலை கொடுத்து உங்களை மற்றவர்களிடமிருந்து வாங்கியிருக்கக்கூடாதா ? அல்லது ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்திருக்கக்கூடாதா ?

உங்கள் மூத்த சகோதரன் பிறப்பை எப்போது உங்கள் கண்களால் பார்த்து உருதிசெய்துகொன்டீர்கள் . ஆதாரம் ஏதாவது உண்டா ? தன்னுடைய்ய பிறப்பே ! பார்வை எனும் ஆதாரம் இல்லாத நிலை ஆகிவிட்டது பார்த்தீர்களா ?

காற்றை வைத்துக்கொள்ளுங்கள் அது வேகமாக அடித்து மரங்களையும், மின்கம்பங்களையும் சாய்த்துவிடுகிறது. கண்களால் காற்றை பார்க்கமுடியாத காரணத்தால். காற்று இல்லை என்று முடிவுகட்டிவிடுவீர்களா ?

நீங்கள் சுவாசிப்பது என்ன ? அது ஆக்சிஜனா ? அதன் கலரை காட்டு என்று யாரிடமும் கேட்ப்பீர்களா ? அப்படி கேட்டால் உங்கள் நிலை என்ன ?

அதே சுவாசத்தில் கலந்து வரும் நறுமணத்தையும், காற்றையும் உங்கள் இருண்டு கண்களால் பார்க்கமுடிகிறதா ? அல்லது உங்கள் இருகைகளால் பிரிக்கத்தான் முடிகிறதா ? பார்க்கமுடியாத காரணத்தால் வாசனை திரவியம் ஒரு மாயை என்று உங்களால் சொல்லமுடியுமா ?

சமையல் அறையில் வரும் கோழிவறுவல், மீன் பொரியல், கடுகு,மிளகாய்,வெங்காயம்,எண்ணையை கலந்து தாளிக்கும் மனத்தை உங்களால் மறுக்கமுடியுமா ? அந்த மனத்தை கண்ணைக்கொண்டு பார்க்க முடியவில்லை ஆதலால் அது இல்லை என்று நிரூபிக்கமுடியுமா ?

கண்களுக்கு எந்த அளவோடு பார்க்க முடியுமோ அதை மட்டும் தான் பார்க்கமுடியும். குறிப்பாக இதில் தட்டச்சு செய்த எழுத்தை பார்க்கமுடியும். உங்களுக்கு முன் உள்ளவர்களை பார்க்கமுடியும். இதே ! தட்டச்சை பத்து மீட்டெர் தூரம் கொண்டு நீங்கள் படிக்கமுடியுமா ? முடியாது. முடியாததால் அது பொய்யாகுமா ? சமீபமாக வந்தால் தான் எழுத்தை படிக்கமுடியும்.

உதாரணத்திற்கு.நீங்கள் டெலிபோனில் உங்கள் பெற்றோரிடம் நலம் விசாரிக்கிறீர்கள். அவர்கள் தாம் நலம் என்றும் பதில் சொல்லிவிட்டார்கள். பிறகு உங்கள் மனைவியிடம் நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்ததா ? என்றும் கேட்கிறீர்கள். அவரும் ஆம் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு போனை வைத்துவிட்டு. யோசிப்பீர்களா ? இல்லை நான் நேரில் போய் என் இரண்டு கண்களை கொண்டு பார்த்துவிட்டு தான் நம்புவேன். என் பெற்றோர் நலம் என்றும் என் மனைவி கையில் இருக்கும் பணத்தை கண்ட பிறகு தான் முழுமையாக உருதிசெய்துக்கொள்வேன். கிடைத்துவிட்டது என்றும் சொல்வீர்களா ?

மாட்டீர்கள் காரணம் டெலிபோனில் பேசி உருதிசெய்துக்கொன்டீர்கள். இதற்க்கு முக்கிய காரணம் சத்தம் அந்த சத்தம் என்னும் ஓசையை காதால் மட்டும் தான் கேட்க்கமுடியும் கண்களால் பார்க்கவும் முடியாது மற்றும் மூக்கை கொண்டு நுகரவும் முடியாது.

பார்க்கமுடியாத காரணத்தினாலும், நுகரமுடியாத காரணத்தினாலும் ஓசை என்னும் சத்தம் இல்லை என்று வாதிடுவீர்களா ? அப்படி வாதாட நீங்கள் முற்ப்பட்டால் உங்களுக்கு இருக்கும் காது என்ற உறுப்பை வெட்டிக்கொள்வீர்களா ?

இன்றைக்கு விஞ்ஞானம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன. கணினி, ஊர்தி ஆயிரக்கணக்கான டெக்க்னாலஜி முறைகள் அறுவை சிகிச்சைகள். வந்துவிட்டன. இதற்க்கு முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை அந்த சிந்தனையை கண்களாலும் பார்க்கமுடியாது.காதுகள் கொண்டு கேட்க்கவும் முடியாது மூக்கைகொண்டு நுகரவும் முடியாது.

பார்க்கமுடியவில்லை, நுகரமுடியவில்லை கேட்க்கமுடியவில்லை ஆகையால் சிந்தனை என்ற ஒரு பிரமாதமான முக்கியமான தன்மையை இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கமுடியுமா ?

ஆக எல்லாவற்றையுமே ! கண்களால் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொள்ள முடியாத மனிதன் தன் பிறப்பு முதற்கொண்டு. கடவுளை மட்டும் எப்படி கண்களால் பார்த்த பிறகு தான் நம்புவேன் என்று சொல்வது எந்த விதத்தில்

நியாயம்
மனிதன் உண்மையில் நன்றி கெட்டவனாகவும் நம்பிக்கை விஷயத்தில் பாரபட்சம் காட்டுபவனாகவும் இருக்கின்றான்

புதன், 18 பிப்ரவரி, 2009

எவன் தருவான் உங்களுக்கு ?

அன்பார்ந்த சகோதர மக்களே ! நாம் பல வகையில் உழைத்தாலும் பொருள் ஈட்டினாலும்.அல்லது நாடு விட்டு நாடு சென்று குடும்பம் தாய் தந்தையர் மனைவி அன்பு பிள்ளைகள் எல்லாவற்றையும் பிரிந்து பலவருடம் தியாகம் செய்து. பொருள் ஈட்டினாலும். இறைவன் நமக்கு கொடுத்த கால அவகாசமும். நமக்கென்று விதித்த செல்வம் இவைகளை மட்டும் தான் நம்மால் தேட முடியும். இதற்க்கு மேல் கொஞ்சம் கூட பெற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒரு தொழிலின் மூலமும். மற்றும் அலுவலக சம்பாத்தியத்தின் வாயிலாகவும். தேடிய செல்வம் அனைத்தும் முடிவு பெரகூடியவைதான். ஒரு குறிப்பிட்ட கால கெடுவோடும் அல்லது நமக்கு பின் தலைமுறை மக்களோடும் முடிவு பெரும்

உதாரணம்: நாம் அணியும் ஆடை அது கிழிந்து போகும் வரைக்கும்.

உதாரணம்: நாம் அணியும் செருப்பு அது அறுந்து போகும் வரைக்கும்.

உதாரணம்: நாம் கட்டும் வீடு அல்லது மாளிகை அது ஒரு ஐம்பது வருட கால கெடுவோடு இடிக்க வேண்டிய தருவாய் ஏற்படும்.

உதாரணம்: நாம் வைத்திருக்கும் நிலமும், தோட்ட துரவுகள். நாம் இருக்கும் வரைக்கும் இலாபமும் கொடுக்கும், நஷ்டமும் கொடுக்கும். உறுதி சொல்லமுடியாது.முதிய வயதில் அது இலாபம் ஈட்டினாலும் அதை அனுபவிக்க முடியாத நிலையில் நாம் இருப்போம் வெறும் கஞ்சியும் மருந்துமாக வாழ்க்கை ஓடும்.

இப்படி அடுக்கிகொண்டே போனால் நிறைய சொல்லலாம். ஆனால் என்றைக்குமே அழியாத வியாபாரம் ஒன்று இருக்கிறது.அந்த வியாபாரத்தினால் ஈட்டியவைக்கு கால கெடு கிடையாது. அதற்க்கு முடிவுரை என்பது இல்லை.நஷ்டம் மற்றும் லாபம் கலந்து அளிக்காமல் இலாபம் மட்டுமே கொடுக்கக்கூடியது.

அது என்ன ? தெரியுமா லைசென்ஸ் எடுக்க தேவையில்லை. முதலீடு செய்ய அவசியமில்லை. இடம் பார்த்து கூட்டம் அதிகம் உள்ள இடமா? இல்லையா? என்று பார்க்க தேவையுமில்லைl நெற்றி வியர்வை சிந்தனும் என்ற தலைஎழுத்துமில்லை. எட்டு மணிநேரம் செய்யனுமா ? அல்லது கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளனுமா ? என்று யோசிக்கவேண்டியதுமில்லை. திருட்டு போய் விடுமோ ! என்று பயந்து பூட்டிவிட்டு தான் வரனும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.

வருவாய் துறை அதிகாரிக்கு கணக்கு காட்டவேண்டிய அவசியமில்லை. ஆனால் உறுதியான இலாபம். நிச்சயம்.

நேரம்:

ரொம்ப சுலபம் எப்படி உங்களுக்கு டி.வி. பார்க்கும் பழக்கம் இருந்தால் அதில் உள்ள நேரத்தை உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலீடு:

நீங்கள் சிகரட் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? அல்லது வெற்றிலை,சீவல்,சுண்ணாம்பு போடுகிரவர்களா.? அதை முற்றாக தவிர்த்தால் அதுவே! முதலீடு.

அல்லது பல பொருட்கள் வாங்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால். கொஞ்சம் அதில் ஒன்று இரண்டு குறைத்து சில்லறை காசுகளாக சேமித்து.வைத்தால் அதுவும் முதலீடு.

மற்றபடி உங்களுக்கு அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை ஒதத்தெரிந்தாகனும். அது உங்களுக்கு பள்ளிவாசலில் சும்மாவே இருக்கும். இன்னொன்று உங்கள் தொழுகையை நேரம் தவறாமல் தொழுதாகனும். மற்றது உங்கள் மனம் வந்து உங்கள் முதலீடால் போட்ட பணத்தை உங்களுக்கு தெரிந்தவர்கள் ஏழை, நலிந்தவர்களுக்கு செலவு செய்யுங்கள். இதோ இந்த குர்ஆன் வசனத்தை பாருங்கள். அதன் படி வியாபாரம் செய்யுங்கள்.

35:29 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாக கடைபிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.

சனி, 7 பிப்ரவரி, 2009

ஹதீத் அறிவிப்பாளர்கள் குறை நிறை

அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும். ஹதீத் அறிவிப்பாளர் குறைகள் விபறமாக கூற வேண்டும் என்று அறிஞர்கள் தீர்மானித்துள்ளார்கள்.


உதாரணம்: ஊரிலிருந்து உங்கள் தந்தை வந்து விட்டாரா ? என்று நம்மிடம் கேட்க்கப்பட்டதாக வைத்து கொள்வோம். அவர் வந்து விட்ட செய்தி நமக்கு தெரியாததால் வரவில்லை என்று கூறுவோம். நமது தந்தை வந்து விட்டதை வேறு வகையில் அறிந்து கொண்டவர் நம்மை பொய்யர் என கருதக்கூடும். இது போல் ஒருவர் தவறாக தெரிவிக்கும் தகவல் காரணமாக பொய்ய்யராகக்கருதப்படக்கூடும். ஹதீத் அறிவிப்பாளர்களில் சிலரும் இவ்வாறு தவறாக விமர்சிக்கப்படக்கூடும்.


தகுந்த சான்றுகளுடன் கூறப்படும் குறைகள் காரணமாகத்தான் ஒரு அறிவிப்பாலரை பலவீனர் என்று முடிவு செய்யவேண்டும்.இன்னொன்று ஒரு அறிவிப்பாளர் மனநோயாளியாக இருந்தால் அது அவரை நிராகரிப்பதற்கு போதிய காரணம் என்பதை நாம் அறிவோம். பின்னர் விலகியும் இருக்கலாம். அவர் சுய நினைவுடன் இருந்ததற்கு போதுமான ஆதாரம் கிடைத்து அந்த கால கட்டத்தில் அவர் அறிவித்த ஹதீத்கள் தெளிவாக இருந்தால் அத்தகைய ஹதீத்களை மட்டும் ஏற்க்கலாம்.


இது போன்ற காரணங்களால்தான் குறைகள் விபறமாக கூறப்படவேண்டும் என்று அறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.அறிவிப்பாளர்களின் குறைநிரவுகளை ஆராயும் நூல்களில் பெரும்பாலும் தக்க காரணங்களுடன் அறிவிப்பாளர்களின் குறைகள் கூறப்படுவதில்லை .` இவர் பலவீனமானவர், இவரை ஏற்க்கக்கூடாது, இவரது ஹதீத்கள் பதிவுசெய்யக்கூடாது, இவரை இன்னார் ஏற்க்கவில்லை '' என்று பொதுவாகத்தான் கூறப்படுகின்றது.
இதை அடிப்படையாக வைத்து ஒருவரை பலவீனமானவர் என்று கூறமுடியுமா? கூரமுடியாவிட்டால் இந்த நூல்களால் என்ன பயன்? என்பது தான் அந்த ஐயம்.இதற்க்கு இமாம் நவவி அவர்கள் தமது தத்ரீபில், '' காரணங்களை கூறாமல் குறை நிறைகளை கூறும் நூல்களால் ஏற்படும் பயன் என்னவென்றால் இத்தகைய அறிவிப்பாளர்கள் விசயத்தில் தீர்மானமான முடிவுக்கு வராமல் இவர்களின் ஹதீத்களை ஏற்க்கவோ மறுக்கவோ செய்யாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.


இவர்களின் நிலையை மேலும் பரிசீலிக்கும் போது இவர்களைப்பற்றிய ஐயம் விலகி நம்பகத்தன்மை உறுதியானால் இவர்களின் ஹதீகளை ஏற்க வேண்டும். மற்றவர்களால் குறை கூறப்பட்ட பல அறிவிப்பாளர்களின் ஹதீத்கள் புகாரி, முஸ்லீம் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளதற்கு இதுவே காரணம் '' என்று கூறுகிறார்கள்.


அறிவிப்பாளர்களை விமர்சிக்கும் அறிஞர் எந்த காரணங்களால் ஒருவரது ஹதீகளை ஏற்க்கக்கூடாதோ அந்தக்காரனங்களுக்காக மட்டும் ஒருவரை குறை கூறுபவர் என்று உறுதியானால் காரணங்களின்றி யாரையுமே அவர் குறை கூறியதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்தால் அவர்களின் விமர்சனங்களில் காரணங்கள் கூறப்படாவிட்டாலும் அந்த விமர்சனத்தை ஏற்க்கலாம் என்று காளி அபூபக்ர், இமாமுள் ஹரமைன், கஸ்ஸாலி, ராஸி, கதீப், ஹாபீழ் இராக்கி,புல்கினி ஆகியோர் கூறகின்றனர்

பெரும்பாலானவர்களின் முடிவு இதுதான் என்று காளி அபூபக்ர் கூறுகிறார்.
இதுவும் கூட பொதுவானதன்று யாரைப்பற்றி நம்பகமானவர் என்ற சான்று ஏதும் இல்லை என்றால் தான் இத்தகைய விமர்சகர்களின் காரணம் கூறப்படாத விமர்சனத்தை ஏற்க்கலாம். ஒரு அறிவிப்பாலரை பற்றி மிகவும் நம்பகமானவர். பலவீனமானவர் என்று சிறந்த விமர்சகர்கள் விமர்சித்திருந்தால் அவரை குறை கூறும் போது கட்டாயம் காரணம் கூறப்பட்டாகவேண்டும். எத்தகைய சிறந்த விமர்சகர் இதற்க்கு மாற்றமாக விமர்சனம் செய்தாலும் காரணங்கள் கூறப்படாவிட்டால் அதை கவனத்தில் கொள்ளக்கூடாது.


ஏனெனில் அவரது நம்பகத்தன்மைக்கு நற்சார்ன்று வழங்கிய விமர்சகர்கள் அவரது வரலாறு, அவரது மார்க்கப்பற்று, அவரது ஹதீத் ஈடுபாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் பரிசீளித்தே அவரை நம்பகமானவர் என முடிவு செய்கிறார். இந்த முடிவை மாற்றுவதற்கு தக்க காரங்களுடன் குறை கூறப்படவேண்டும் என்று செய்குல் இஸ்லாம் கூறுகிறார்கள்.


இத்துறையில் நல்ல ஈடுபாடு உள்ள இரண்டு அறிஞர்கள் சேர்ந்தாற்போல் எந்த நம்பகமானவரையும் பலவீனமாக்கியதில்லை. எந்த பலவீனமானவரையும் நம்பகமானவராக்கியதில்லை. என்ற ஹாபிழ் தஹபி கூறுவதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.


உதாரணம்:


ஒருவர் ரமலானில் நோன்பு நோற்று பின்பு சவ்வால் மாதம் ஆறு நோன்புகளை தொடர்ந்து நோற்றால் அவர் காலம் முழுவதும் நோம்பு நோற்றவர் போல் ஆவார் என நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அபு அய்யுபில் அன்சாரி [ரலி] அறிவிக்கிறார்கள்.இதை சக்து பின் சயீத் [ரலி] வழியாக இமாம் முஸ்லீம் [ரஹ்] அறிவிக்கிறார்கள் இந்த ஹதீதை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் [ரஹ்] பலவீனமானது எனக்கூரினாலும் அந்த அறிவிப்பாலரை இமாம்களில் பலர் நம்பகமானவர் எனக்கூரியுள்ளனர். எனவே இது தள்ளப்பட வேண்டிய குறையல்ல முஸ்லீம் [ரஹ்] அவர்கள் ஹதீத்களை கடுமையான பல நிபந்தனைகளுக்குப்பின்பே ஏற்றுக்கொள்வார்கள். எனவே அவர்கள் அறிவித்திருப்பதே இது சஹீஹ் தான் என்பதற்கு ஆதாரமாகும்.


அறிவிப்பாலர்களிடம் குறைகள் இருப்பதை போலவே அவர்களைப்பற்றி விமர்சிப்பவர்களிடமும் குறைகளும் தவறுகளும் இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டால் எளிதில் விளங்கும்.


`சாதான்` என்ற அறிவிப்பாளர் வழியாக ஹகம் பின் உதைபா அவர்கள் எதையும் அறிவிப்பதில்லை. அவரை பலவீனமானவராக கருதினார். அவர் வழியாக ஏன் நீங்கள் அறிவிப்பதில்லை என்று நான் கேட்டேன். அதற்கவர், ''அவர் அதிகமாக பேசுகிறார்'' என்று விடையளித்தார் ஏன் சூக்பா கூறுகிறார்.[தத்ரீப்]


ஒருவர் அதிகமாக பேசுவது நல்ல பண்பு இல்லை என்று கூறலாம். ஆனால் அவரது அறிவிப்புகளை நிராகரிக்க அது காரணமாகாது என்பதை நாம் மறுக்கமுடியாது.குறிப்பிட்ட ஒரு அறிவிப்பாளரின் ஹதீத்களை ஏன் நீங்கள் விட்டு விடுகிறீர்கள்? என்று சுக்பாவிடம் நான் கேட்டேன்.அதற்க்கவர்கள் ''படுத்துக்கிடக்கும் குதிரையை காலால் மிதித்து எழுப்பி அவர் சவாரி செய்வார்'' என்று விடையளித்தார்கள் ஏன் முஹம்மது பின் ஜபார் அறிவிக்கிறார் [தத்ரீப்]


படுத்துக்கிடக்கும் குதிரையை காலால் மிதித்து எழுப்புவதற்கும் அவ்வாறு செய்பவரின் ஹதீதை நிராகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இது போன்ற காரணங்களுக்காக ஒருவரை பலவீனமானவர் என்று தீர்மாநித்தவர்களும் இருந்துள்ளனர்.


நன்றி: அல் ஜன்னத்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

ஈடேற்றத்தின் பால் வாருங்கள்

அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே ! உண்மை மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் தங்களை இணைத்துகொல்லும்படி வேண்டுகிறேன். இந்த மார்க்கத்தில். அல்லாஹ்வின் இருதிவேதத்தில் குறைபாடுகள் இல்லை. முரண்பாடுகள் இல்லை. வேண்டும் என்றே சில ஆசாமிகள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மீது அவதூறையும். திரு குர்ஆன் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு களம் இறங்கி ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அடுக்கிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த குர்ஆன் நீங்கள் வணங்கிகொண்டிருக்கும் இயேசுவை தூய்மையானவராகவும். பரிசுத்தவானாகவும் குறிப்பிடுகிறது. மேலும் அவருக்கு இறைவன் கொடுத்த சில அர்ப்புதங்களையும் குறிப்பிட்டு சொல்கிறது. அவருக்கு
முன்னாள் உள்ள (தவ்ராத்) என்கிற தோரா வேதமான மோசேவுக்கு கொடுத்ததையும் மெய்ப்பிக்கிறது.அந்த தோரா மனித கரங்களால் இடைசொருகளுக்கும், திருத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் இரையாக்கப்பட்டதையும். விவரித்துகூருகிறது. மேலும்( ஈசா ) என்கிற ஏசுவுக்கு இறைவன் அளித்ததும். குறுகிய காலகட்டத்திலேயே ! காணாமல் போய்விட்டதும் உண்மைதான்.அதற்க்கு உங்களுடைய புதிய ஏற்பாடான பைபிளே முக்கிய சான்று.இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)
அப்படி இருக்கும் பொழுது இயேசு வேற என்னவெல்லாம் செய்தார். எதையெல்லாம் போதித்தார்.என்ற செய்தி மறைக்கப்பட்டதாலும்.நீக்கப்பட்டதாலும்.மனிதர்களுக்கு தேவையான முழு உபதேசம்.இல்லாமல் போன காரணத்தால் உலகம் வேற ஒரு தூதரை எதிர்பார்க்கும் கட்டாயத்திற்கு உள்ளானது.அது அவசியமும் கூட.


இன்னும் அந்த புதிய ஏற்பாட்டில் தேவனை தூக்கிப்பிடிப்பதர்க்காக.பொய்யும் பேசலாம். என்று இடைச்சொருகளிட்டு.தேவையான அளவு பொய்களையும், புரட்டுகளையும் சேர்திருப்பதையும் பார்க்கிறோம்.


என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? - ரோமர் 3:4-7மேலும் கர்த்தரிடம் இருந்து வரவில்லை நானே ! எழுதிக்கொண்டது. என்று தானாகவே வாக்குமூலம் கொடுத்திருக்கும். பவுலின் வார்த்தையில் வேத வாக்கல்ல மனிதக்கரங்கள் தான் என்று அவரே ! நிரூபித்துக்கொண்டார்.


மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது - 1 கொரிந்தியர் 7:12

பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். - பிலமோன் - 1:19


அதனால் தூய குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து அதன் போதனைகளை ஏற்று இரண்டு உலகிலும் நன்மை பெறுவீர்களாக.


6:104 நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை ( கவனித்து ) பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றை) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் ``நான் உங்களை காப்பவன் அல்ல'' (என்று நபியே கூறிவீராக)


செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

விதி

விதி என்றால் என்ன ? அதை பற்றி சில ஹதீத்கள் உங்கள் முன் வைக்கிறேன். தெரிந்துகொள்ளுங்களேன்.

விதி

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத்)

அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.

கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி

அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி

பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி
இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

திங்கள், 2 பிப்ரவரி, 2009

ஒத்திக்கு வீடு மார்க்க சட்டப்படி என்ன ?

இப்பொழுதோ ! நாம் அவசர காலத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம் ஆகையால் உன்னிப்பாகவும் ஆழமாகவும். அல்லாஹ் ( ஜல் ) கட்டளைக்கும் அவனது தூதருமான ரசூல் ( ஸல் ) அவர்களின் கட்டளைக்கும் நாம் செயல் பட முடியாது. இவையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று பகல் கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் முஸ்லீம் சகோதரர்கள். அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே ! இந்த பதிவை முன்வைக்கிறேன்.

'அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 2511)

'அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 2512)

இதன்படி அடைமானமாகப் பெற்ற பொருளை உபயோகிக்க நாடுபவர் அதற்கான கூலியை உரியவருக்கு சேர்ப்பிக்க வேண்டும். கால்நடைகளை அடைமானமாகப் பெற்றவர் அவற்றை பராமரித்து வரும் காலம் வரை அவற்றிலிருந்து பால் அருந்தலாம்.

இவ்வகையில் நகைகள் மற்றும் வீடு போன்றவற்றை அடைமானமாகப் பெறுபவர் அவற்றை
உபயோகப்படுத்தினால் அவற்றுக்கான கூலியை (வாடகையை) உரியருக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட வில்லையாயின் நாம் அனுபவிப்பது வட்டியாகும் என் ரஸுல் (ஸல்) அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.

துன்பத்தில் பொறுமை மேற்கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர சகோதரிகளே ! நாம் எதற்கெடுத்தாலும். சட்டென்று கோபம் கொள்கிறோம். அல்லது. அல்லாஹ் நமக்கு என்னத்தை செய்துவிட்டான். என்று அங்கலாய்த்து கொள்கிறோம். அல்லது இறைவன் முன்னோர்களுக்கு. மலக்குகளை அனுப்பி காப்பாற்றினான். அபாபீல் பறவை வழியாகவும் வெற்றியை நல்கினான் என்றெல்லாம். இறைவன் அளித்த சில உண்மை சம்பவங்களை எடுத்து சொல்லி அரற்றிக்கொண்டிருப்பதை. பலவாறும் பார்க்கிறோம். ஆனால் இறை வேதமான திருக் குர்ஆனை நாம் ஊன்றி படித்து பார்த்தால். அதில் நமக்கு பதில் கிடைத்தாகிவிடுகிறது. இதோ

இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.(அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை.(அல்குர்ஆன் 54:11)

ஆகையால் துன்பத்திலும் பொறுமை காத்து மேலும் அதை சகித்து. இறைவனின் திருப்தியை ஈருலகிலும் பெற்றுகொவோமாக.

சனி, 31 ஜனவரி, 2009

கிறிஸ்தவ பைபிளில் முஹம்மத் (ஸல்)

நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது...? அறிஞர் அஹமத் தீதாத் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த... கணனியாக்கம் முஹை

அன்பின் சகோதரர்களே! சகோதரிகளே!!

இன்று மாலை நான் உங்களிடயே சொற்பொழிவாற்ற எடுத்துக் கொண்ட தலைப்பு 'முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது..? என்பதாகும். நான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் இந்தத் தலைப்பு உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். யூத, கிறிஸ்தவ வேத நூல்களிலிருந்து இறைவனின் முன்னறிவிப்புகளை ஒரு முஸ்லிம் எவ்வாறு எடுத்துக் காட்ட இயலும் என்று கேள்வியும் உங்கள் மனதில் எழலாம்.

1. கிறிஸ்தவ அறிஞர் உரை.

எனது இளவயதில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் (தென் ஆப்பிரிக்காவின்) டர்பன் நகரில் 'தியேட்ட ராயல்' என்ற இடத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு, ரெவரெண்ட ஹைடென் (ர்வைநn) என்ற கிறிஸ்தவ அறிஞரின் உரையைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.
அவர் தனது உரையில் பைபிளில் கூறப்படும் பல முன்னறிவிப்புகளை விவரித்தார். மறுவுலக வாழ்க்கை, பிற்காலத்தில் உலகில் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகள், சோவியத் ரஷியாவின் உதயம் போன்ற அனைத்துச் செய்திகளையும் பைபிள் முன் கூட்டியே இவ்வுலகிற்கு அறிவித்துள்ளது என்று நிரூபித்தார். மேலும் இவரது சொற்பொழிவின் ஒரு கட்டத்தில், போப் பற்றிய செய்தியைக்கூட விட்டு விடாது பைபிள் முன் கூட்டியே விவரித்துள்ளது எனத் திட்டவட்டமாகக் கூறினார். அதற்கு ஆதாரமாக புதிய ஏற்பாட்டிலிருந்து..

'இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக் கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதனுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (வெளிப்பாடு அத்தியாயம் 13, வசனம் 18) என்கிற வசனத்தைக் குறிப்பிட்டார்.

இவ்வசனம் இப்பூமியில் கிறிஸ்துவின் ஏகப் பிரதிநிதியான போப்பைக் குறித்துத்தான் செய்தி அறிவிக்கிறது என்றார். ரோமன் கத்தோலிக் மற்றும் புரோடெஸ்டண்ட் கிறிஸ்தவப் பிரிவுகளுக்கு இடையேயுள்ள கருத்து வேற்றுமைகளில் உட்புகுவது முஸ்லிம்களுக்கு பொருத்தமற்றதாகும். (இந்த வசனம் யாரைக் குறிக்கிறது என்பதில் கிறிஸ்தவ மதத்தின் இருபெரும் அங்கங்களான கத்தோலிக்கர்களுக்கும், புரோடெஸ்டண்ட்டுகளுக்குமிடையே கருத்து வேறுபாடுள்ளது)

கிறிஸ்தவ அறிஞர்கள் தாங்களாகவே சில கொள்கைகளைக் கற்பித்து அவர்களது வாதங்களை நிரூபிக்க முயல்கிறார்கள்.

2. இள நெஞ்சில் எழுந்த வினா?

ஹைடென் அவர்களின் சொற்பொழிவு என்னுள் ஒரு வினாவை எழுப்பியது. போப், இஸ்ரேல், பிற்கால நிகழ்ச்சிகள் பற்றி பைபிள் முன்னரே தெரிவித்துள்ளது என்றால் இறைவனின் இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்கள் குறித்து அது நிச்சயமாக ஏதேனும் கூறியிருக்க வேண்டும்.

எனது இளவயதில் இவ்வினாவிற்கான விடையைத் தேடி அநேக கிறிஸ்தவ அறிஞர்களுடன் விவாதித்தேன். பல கிஸ்தவ சொற்பொழிவுகளில் கலந்து கொண்டேன் பைபிளில் கூறப்படும் முன்னறிவிப்பகள் குறித்து எனது கைக்குக் கிடைத்த செய்திகள், புத்தகங்கள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன்.

3. வராமல் வந்த வான்ஹீர்டென்.

இன்று இரவு உங்களுக்கு டச் ரிஃபார்ம்ட் சர்ச் (னுரவஉh சுநகழஅநன ஊhரசஉh) உடைய கிறிஸ்தவ மத போதகர் ஒருவருடன் நான் நடத்திய பேட்டியினை விவரிக்க விரும்புகிறேன்.
நான் பங்கேற்று உரையாற்ற வேண்டுமென ட்ரான்ஸ்வால் நகரிலிருந்து ஒரு தடவை அழைப்பு வந்தது. தென் ஆப்பிரிக்காவின் இப்பகுதியில் 'ஆப்பிரிக்கன்' மொழியே அனைத்து மக்களாலும் பேசப்படும் பொது மொழி. இம்மொழியில் சிறிது தேர்ச்சி பெற்றால் அங்கு செல்லும் போது இம்மக்களுடன் உடையாடுவதற்கும் பழகுவதற்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணினேன்.
எனவே ஆப்பிக்கன் மொழி பேசும் கிறிஸ்தவ மத போதகர்கள் பலருடனும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்த விரும்புவதாகத் தெரிவித்தேன். ஒவ்வொருவரும் பல காரணங்களைக் கூறி எனது வேண்டுகோளை மறுத்து விட்டனர். மேலும் தொடர்ந்து முயற்சி செய்தபோது தொடர்பு கொண்ட பதிமூன்றாவது இடத்திலிருந்து எனக்கு சம்மதம் கிடைத்தது. எனது விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தவர் மரியாதைக்குரிய 'வான் ஹெர்டீன்' ஏயn ர்நசனநநn என்ற கிறிஸ்தவ போதகர்.
நான் ட்ரான்ஸ்வால் நகருக்குப் புறப்பட இருந்த சனிக்கிழமை பிற்பகல் அவரது வீட்டில் எங்கள் உரையாடலை நடத்தலாம் என்று 'வான்' தெரிவித்தார் அவரது வீட்டிற்குச் சென்ற என்னை நட்புடன் வரவேற்று உபசரித்தார். நான் தவறாக நினைக்கவில்லை என்றால் ஃபிரீ ஸ்டேட்டிலிருந்து வந்திருந்த 70 வயதான தனது மாமனாரையும் எங்கள் உரையாடலில் அனுமதிக்க விரும்பினார். இதற்கு மகிழ்வுடன் என் சம்மதத்தைத் தெரிவித்தேன். நாங்கள் மூவரும் போதகர் வானின் நூல் நிலையத்தில் அமர்ந்து எங்கள் உரையாடலைத் தொடங்கினோம்.

4. விவாதம் தொடங்கியது முஹம்மதை மட்டும் மறக்குமா பைபிள்..?
'இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது? வினாவை எழுப்பி விவாதத்தைத் தொடங்கினேன்.
''ஒன்றும் கூறவில்லை'' சிறிதும் தயக்கமில்லாமல் விடையை உதிர்த்தார் வான்.

'உங்களுடைய விளக்கங்களின்படி உலக இறுதி நாட்கள், சோவியத் ரஷ்யாவின் உதயம், ரோமன் கத்தோலிக்கர்களுடைய போப் போன்ற அனைத்துச் செய்திகளையும் முன்னதாகவே இவ்வுலகிற்கு அறிவித்துள்ள பைபிள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி மட்டும் ஏன் ஒன்றும் அறிவிக்கவில்லை?' கேட்டேன் நான்.

'' அனைத்து செய்திகளையும் முன் கூட்டியே பைபிள் அறிவித்துள்ளது உண்மைதான், ஆனால் அதில் முஹம்மது (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு ஏதுமில்லை'' பதிலளித்தார் வான்.

'ஏன் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி அதில் முன்னறிவிப்பு ஏதுமில்லை? நிச்சயமாக அம்மனிதர் உலக சமுதாயத்தின் கோடிக் கணக்கான இறைநம்பிக்கையாளர்களை உருவாக்கவதற்குக் காரணமாக இருந்தார்கள். மேலும் அம்மனிதரின் கட்டளைப்படி இறை நம்பிக்கையாளர்கள் ஏசு பிறப்பு அதிசயமானதே என்றும் - ஏசு மஸீஹ் இறைவனின் தூதரே என்றும் - ஏசு இறைவனின் அனுமதியின் பேரில் இறந்தவர்களை உயிர்ப்பித்தார், பிறவிக் குருடர்களையும் குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார் என்றும் முழு நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஏசுவைக் குறித்தும் அவரது தாயார் மரியாளைக் குறித்தும் மிக உயர்வாகக் கூறியுள்ள தலைசிறந்த இத்தலைவரைப் பற்றி பைபிள் ஏதேனும் கூறியிருக்க வேண்டுமே?' என்று மீண்டும் வினவினேன்.

ஃபிரீ ஸ்டேட்டிலிருந்து வந்திருந்த பெரியவர் என்னிடம் ''மகனே கடந்த 50 ஆண்டுகளாக பைபிளைப் படித்து வருகின்றேன், முஹம்மது குறித்து பைபிள் ஏதேனும் தெரிவித்திருந்தால் நான் அதனை அறிந்திருப்பேன்'' என்றார்
'கிறிஸ்தவ அறிஞர்களின் விளக்கத்தின்படி பழைய ஏற்பாட்டில் ஏசு கிறிஸ்துவின் வருகை பற்றிய முன்னறிவிப்புகள் நூற்றுக்கணக்கில் காணப்படுவதாகக் கூறுகிறார்களே' என்றேன்.

எனது கேள்வியை இடைமறித்து ''நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் முன்னறிவிப்புகள் வந்திருக்கின்றன'' என்று போதகர் வான் கூறினார்.
நான் கூறினேன் ' பழைய ஏற்பாட்டில் உள்ளதாகக் தாங்கள் கூறும் முன்னறிவிப்புகள் ஆயிரத்து ஒன்று குறித்து நான் ஏதும் முரண்பாடு கொள்ளவில்லை ஏனெனில்.. முஸ்லிம் சமுதாயம் பைபிளின் அத்தாட்சிகள் ஏதும் இல்லாமலேயே ஏசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்டு விட்டது - கிறிஸ்தவர்கள் பைபிளின் முன்னறிவிப்புகளைக் கூறி ஏசுவைப் பற்றி முஸ்லிம்களுக்கு விளக்கம் கூறுவதற்கு முன்னரே முஹம்மது (ஸல்) அவர்கள் ஏசுவைச் சிறப்பித்துக் கூறினார்கள் - அந்த வழி முறையைப் பின்பற்றி இவ்வுலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஏசுவின் மீது அன்பும், மரியாதையும், கண்ணியமும் கொண்டு, அவர்கள் இறைவனின் சிறந்த தூதர் என்று முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் கேட்பதெல்லாம் இதுதான்...

தாங்கள் கூறிய ஆயிரம் முன்னறிவிப்புகளிலிருந்து ஏதேனும் ஒன்றில் ஏசுவின் பெயருடன் கூடிய அறிவிப்பை எனக்குக் காட்ட முடியுமா?
மஸீஹ் என்பவர் ஏசு என்றோ...

மரியாள் ஏசுவினுடைய தாயாராக இருப்பார் என்றோ...
அவரது தந்தையாகக் கருதப்பட்டவர் யோசேப்பு என்ற தச்சராக இருப்பார் என்றோ காணப்படவில்லையே - இவ்வாறிருக்க ஏசு பற்றிய முன்னறிவிப்புகள் ஆயிரக்கணக்கில் காணப்படுவதாக எவ்வாறு உறுதியாகக் கூறுகிறீர்கள்..?

போதகர் வான் பதிலளித்தார் 'பைபிளின் முன்னறிவிப்புகள் என்பது நிகழப்போகும் விஷயங்கள் குறித்து வார்த்தைகளால் வரையப்படும் ஒரு படம் ஆகும், அந்நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்ட பின்னர் இதற்குண்டான பைபிளின் முன்னறிவிப்ப இதுதான் என்று நிர்ணயம் செய்து கொள்கிறோம்''
நான் வாதிட்டேன் 'பைபிள் ஆயிரம் முன்னறிவிப்புகளை இவ்வாறு நிர்ணயம் செய்து ஏசுவைப்பற்றி இம்முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன என்று கூறுவதானால் முஹம்மது (ஸல்) அவர்கள் விஷயத்திலும் ஏன் தங்களுடைய இந்த நிர்ணயக் கொள்கையை நாம் பின்பற்றக் கூடாது?'
எனது வாதத்தை கிறிஸ்தவ போதகர் ஏற்றுக்கொண்டார்.

5. உபாகமம் உரைப்பது என்ன..?

பழைய ஏற்பாட்டிலிருந்து...
''உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்களின் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், (அவர்) நான் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்'' (உபாகமம் அதிகாரம் 18, வசனம்18)
என்ற பைபிளின் வசனத்தை எனது நினைவிலிருந்து ஆப்பிரிக்கான் மொழியில் கூறினேன் 'எனது உச்சரிப்பில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா?' என்று கேட்டேன். நான் நல்ல முறையில் அம்மொழியில் உரையாடுவதாக போதகர் பாராட்டினார்.
'பைபிளின் இவ்வசனம் யாரைக் குறித்து முன்னறிவிப்புக் கூறியுள்ளது?' என்று நான் கேட்டேன்.
போதகர் உடனே ''ஏசுவைப்பற்றி அறிவிக்கின்றது'' என்றார்.
ஏன் ஏசுவைப்பற்றி அறிவிக்கின்றது என்கிறீர்கள் அவரது பெயர் இங்கு காணப்படவில்லையே?' என்று நான் கேட்டேன்.
''பைபிளின் முன்னறிவிப்புகள் என்பது பின்னர் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளைக் குறித்து வார்த்தைகளால் படம் போல் தெரிவிப்பதாகும். என்றும் இவ்வசனம் ஏசுவிற்கு முற்றிலும் பொருந்தியுள்ளது என்றும் மேலும் உன்னைப் போல் (மோசேவை - நபி மூஸா (அலை) போல்) என்னும் பதம் நிச்சயமாக (ஏசு என்பவர் மோசேவைப் போல என்று) ஏசுவைத்தான் குறிக்கின்றது'' என்றும் போதகர் பதில் சொன்னார்.
'எந்த விதத்தில் ஏசு மோசையைப் போன்றவர் என்று கூறுகிறீர்கள்?' என்றேன்
முதலாவதாக ''மோசே ஒரு யூதர், அதுபோல் ஏசுவும் ஒரு யூதர். அடுத்து மோசே இறைவனின் தீர்க்கதரிசி, அதுபோல் ஏசுவும் தீர்க்கதரிசி எனவே உன்னைப் போல் என்ற பதம் ஏசுவிற்கு முற்றிலும் பொருந்தியுள்ளது, இறைவன் மோசேயிடம் முன்னறிவிப்பாகக் கூறியதும் ஏசுவைப் பற்றியே என்பதால் இம்முன்னறிவிப்பும் ஏசுவைக் குறித்தே கூறுகிறது'' என்றார்.
'வேறு ஏதேனும் ஒற்றுமைகள் மோசேவிற்கும் ஏசுவிற்குமிடையே உள்ளதாகத் தங்களுக்கு நினைவுள்ளதா?' என்று நான் கேட்டேன்.
''இவ்விரண்டைத் தவிர ஒற்றுமைகள் ஏதும் இல்லை'' என்று தெரிவித்தார் போதகர்.
(வளரும் இறைவன் நாடட்டும்)

தமிழ் மின் ஊடகத்தின்
றறற.iனாரவாயnளைடயஅ.உழஅ
part 2

நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது...? அறிஞர் அஹமத் தீதாத் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த... கணனியாக்கம் முஹை
(முந்தைய பக்கம்) தொடர் ௨

6 உபாகமம் குறிப்பது ஏசுவையல்ல.!

இரண்டு ஒற்றுமைகளை மட்டுமே அளவுகோலாகக்கொண்டு இவ்வசனத்திற்குப் பொருத்தமானவர் ஏசுதான் என்று நீங்கள் முடிவு செய்தால் மோசேவிற்குப் பின்னால் தோன்றிய, சாலமோன், ஏசாயா எசக்கியேல், தானியேல், லுசியா, யோவல், மல்கியா, யோவான் ஸ்நானன் போன்ற...
பைபிளில் கூறப்படும் பிரமுகர்கள் அனைவரும் யூதர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் உள்ளனரே! எனவே இவ்வசனத்தில் கூறப்படுபவர், இப்பிரமுகர்களில் எவரேனும் ஒருவராக இருக்கக்கூடுமே!
ஏன் ஏசுவை மட்டும் இவ்வசனத்திற்கு ஒப்பிடுகிறீர்கள்..? என்று நான் வினா எழுப்பினேன். போதகர் எனக்கு பதில் ஏதும் கூறவில்லை.
7 மோசேவைப் போன்றவர் முஹம்மதே, ஏசு அல்ல.!
எனது விளக்கத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டும்படி அவரிடம் வேண்டிக்கொண்டு, ஏசு மோசேவிடம் இருந்து பலவிதங்களில் மாறுபடுகிறார் என்கிற எனது முடிவைக் கூறத் தொடங்கினேன். அதற்கான அறிவுப்பூர்வமான காரணங்களை பின் வருமாறு வரிசைப் படுத்திக் கூறலானேன்.
கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி.
ஏசு கடவுள் - ஆனால் மோசே கடவுள் அல்ல.
ஏசு உலகத்தாரின் பாவங்களுக்காக, தன் உயிரை நீத்தார் - ஆனால் மோசே உலகத்தாரின் பாவங்களுக்காக உயிர் துறக்கவில்லை.
ஏசு மூன்று நாட்கள் நரகத்திற்குச் சென்றிருந்தார் - மோசே நரகத்திற்குச் செல்லவில்லை.
எனவே ஏசு மோசேவைப் போன்றவர் என்று ஒப்பீடு செய்வது பொருத்தமானதல்ல, என்ற விளக்கத்தைக் கூறினேன். மேற்கூறிய வேற்றுமைகளைக் கொண்டு மட்டும் எனது வாதத்தை உண்மை என்று தாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்னும் அநேக அம்சங்களில் ஏசுவும் மோசேயும் தங்களுக்குள் வேற்றுமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவை என்னென்ன..?

அ. பெற்றோர் விஷயத்தில்.

1. மோசேயும், முஹம்மதும் தாய் தந்தை உடையவர்களாக இருந்தார்கள், ஆனால் ஏசு தாய் மட்டுமே உடையவராக இருந்தார், எனவே ஏசு மோசேயைப் போன்றவரல்ல, ஆனால் முஹம்மது மோசேயைப் போன்றவர்.

ஆ. பிறப்பு முறையில்.

2. மோசே, முஹம்மத் இவ்விருவரின் பிறப்பும் இயற்கையாகவும்,
சாதாரணமாகவும் இருந்தது ஏசுவின் பிறப்பு அதிசயமானதாக இருந்தது. ஏசுவின் பிறப்பு குறித்து பைபிளின் புதிய ஏற்பாட்டில்...
'ஏசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விபரமாவது, அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.' (மத்தேயு அதிகாரம்-1 வசனம்-18) என்றும்.
மரியாளுக்கு பிறக்க இருந்த குழந்தை புனிதமானதாக இருக்கும் என்பதை பைபிள் கூறும் சமயம்..

'தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக, பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்'. (லூக்கா அதிகாரம்-1 வசனம்-35)

என்றும் புதிய ஏற்பாட்டில் ஏசுவின் அதிசயப் பிறப்பு குறித்து உறுதி கூறுகிறது. இன்னும் திருக்குர்ஆன்...
(அதற்கு மரியம் தன் இறைவனை நோக்கி) 'என் இறைவனே எந்தவொரு மனிதரும் என்னைத் தீண்டாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்'? என்று கூறினாள். (அதற்கு இறைவன்) 'இவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை (ப்படைக்க) நாடினால் அதனை 'ஆகுக' என்றுதான் கூறுவான் உடனே அது ஆகிவிடும்' என்று கூறினான். (திருக்குர்ஆன் - 3:47)

என்று ஏசுவின் பிறப்பின் அதிசயத்தை சிறப்பித்துக் கூறுகிறது, இறைவன் ஒரு மனிதனையோ ஒரு பொருளையோ படைக்க நாடினால், அப்பொழுதே அது உருவாகிவிடுகிறது என்பதுதான் ஏசுவின் பிறப்பைக் குறித்து முஸ்லிம்களுடைய கருத்து. இதன் மூலம் ஏசுவினுடைய பிறப்பு அதிசயமானது என்றும் மோசே, முஹம்மத் இவ்விருவரின் பிறப்பும் இயற்கையானது என்றும் விளங்கும்.
எனவே 'உன்னைப்போல்' என்ற வசனம் (ஏசுவின் பிறப்பு மோசேயின் பிறப்பிலிருந்து மாறுபடுவதால்) முஹம்மத் (ஸல்) அவர்களையே குறிக்கின்றது.
இ. வாழ்க்கை நிலையில்.

3.மோசேயும், முஹம்மதும் திருமணம் செய்து கொண்டவர்களாகவும், சந்ததியுடையவர்களாகவும் இருந்தனர். ஆனால் ஏசு வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்தார். எனவே மோசேயும், முஹம்மதும் தமக்கிடையே ஒற்றுமை உள்ளவர்களாகவும் இருந்தனர்.

ஈ. மக்களின் நம்பிக்கையை பெற்றதில்.

4. மோசே, முஹம்மத் இவ்விருவரும் அவர்களின் ஆயுட்காலத்திலேயே அவர்களது மக்களால் 'இறைவனின் தீர்க்கதரிசிகள் இவர்கள்' என்று ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
மோசேவுக்கு அநேக தொல்லைகளையும் துன்பங்களையும் யூதர்கள் (இஸ்ரவேலர்கள்) இழைத்தார்கள். இருந்தபோதிலும் 'இறைவனால் தங்களுக்கு அனுப்பப் பட்ட தீர்க்கதரிசிதான் இவர்' என்று மோசேயின் ஆயுட்காலத்திலேயே அவரை ஏற்றுக்கொண்டனர்.
இடைவிடாது 13 ஆண்டுகள் உபதேசங்கள் செய்து மக்களை நல்வழிப் படுத்திட முயன்றார் முஹம்மத், அரபியர்கள் அவருக்குப் பல இன்னல்களை இழைத்தனர், இடைஞ்சல்களை ஏற்படுத்தினர், மக்கா நகரைவிட்டு வெளியேற்றவும் செய்தனர். ஆனால் முஹம்மதின் ஆயுட்காலத்திலேயே அவரை 'இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் இவர்' என்று முற்றிலுமாக ஏற்றுக் கொண்டனர்.
இன்று 2000 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இஸரவேலர்கள் (யூதர்கள்) ஏசுவை இறைவனின் தீர்க்கதரிசி என ஏற்றுக் கொள்ளவில்லை. இதை பைபிளின் புதிய ஏற்பாடு தெளிவு படுத்துகின்றது.

அவர் தமக்குச் சொந்தமானதிலேயே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. (யோவான் அதிகாரம்-1 வசனம்-11

உ. ஆட்சியதிகாரம் செலுத்தியதில்.

5. மோசேயும், முஹம்மதும் இறைவனின் தீர்க்கதரிசிகள் மட்டுமல்லாது அவர்களது மக்களுக்கு தலைமையேற்ற அரசர்களாகவும் இருந்தனர். தீர்க்கதரிசி என்பவர் மனிதர்களை நேர்வழியில் நடாத்திட இறைவன் அருளும் புனிதக் கட்டளைகளைப் பெற்று அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் மக்களுக்கு அறிவிப்பவர் ஆவார்.

ஒருமனிதன் அரசன் என மகுடம் சூட்டிக் கொள்ளாவிட்டாலும், அவனது மக்களிடையே சட்டத்தை நிலை நாட்டுபவனாகவும், தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் (மரண தண்டனை விதிக்கும்) அதிகாரம் உடையவனாகவும் இருந்தால் அவன் அரசனாகவே கருதப்படுவான்.
தனது மக்களிடம் மோசே மரண தண்டனை வழங்கும் அதிகாரம் உடையவராக இருந்தார். அவரது தண்டனை விதிக்கும் அதிகாரத்தினால் ஓய்வு நாளில் விறகு சேகரித்த யூதனைக் கல்லெறிந்து கொன்றார்கள் என்பதை பைபிளின் பழைய ஏற்பாடு விவரிக்கிறது.

'அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே அவனைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய்க் கல்லெறிந்தார்கள் அவன் செத்தான்' (எண்ணாகமம் அதிகாரம்-15 வசனம்-36)

இது மட்டுமல்லாது இஸ்ரவேலர்கள் இழைத்த தவறுகளுக்காக, பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மோசேயினால் மரண தண்டனை அளிக்கப்பட்டதை பைபிள் எடுத்துரைக்கிறது.
முஹம்மதும் மோசேயைப் போன்று இறைவன் விதித்த சட்டங்களை நிலை நாட்டவும், மரண தண்டனை வழங்கிடவும் தனது மக்கள் மத்தியில் அதிகாரம் உடையவராக இருந்தார்.

தீர்க்கதரிசிகள் சிலர், இறைவனின் புனிதக் கட்டளை அருளப் பெற்றவர்களாக இருந்தும், மக்களிடையே இக்கட்டளைகளை செயல்படுத்திடவும், அதிகாரம் செய்ய இயலாதிருந்தனர், என்பதை பைபிளில் பல இடங்களில் காணலாம்.
லோத் (லூத்நபி), யோனா (யூனுஸ்நபி), எஸ்றா யோவான் ஸ்நானன் (யஹ்யாநபி) போன்ற தீர்க்கதரிசிகள் அறிவித்த புனிதச் செய்திகள் அவர்களுடைய மக்களால் முழுமையாக மறுக்கப்பட்டு விட்டன. துரதிஷ்ட வசமாக ஏசுவும் மேற்கூறிய பட்டியலில்தான் இடம்பெறுகிறார் என்பதையும் பைபிள் உறுதி செய்கிறது.
ஊ. பைபிளின் சாட்சியம்.

ஏசுவை ராஜா துரோகக் குற்றம் சாட்டி ரோமன் தேசாதிபதி பொந்தியு பிலாத்து (pழவெரைள Pடையவந) முன்பாக விசாரணைக்கு கொண்டு சென்றிருந்தார்கள். இச்சமயம் ஏசு குற்றத்தை மறுத்து, தனது இராஜ்யம் இவ்வுலகுக்குரியதல்ல என்றும், தனது இராஜ்யம் இறைவனது இராஜ்யத்தைக் குறிப்பதாகும் என்றும் தெரிவித்தார்.

'ஏசு பிரதியுத்தரமாக, என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக் கொடுக்காதபடிக்கு என் ஊழியக்காரர்கள் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றார்'. (புதிய ஏற்பாடு: யோவான் அதிகாரம்-18 வசனம்-36)
இந்த பதிலால் முழுத் திருப்தியடைந்த பிலாத்து ஏசுவினால் தனது ராஜ்யத்திற்கு தீங்குகள் ஏதுமில்லை என்றும். இவர் கூறும் ராஜ்யம் இறைவனது ராஜ்யத்தைப் பற்றியது என்றும் சமாதானம் அடைந்தான்.
எனவே ஏசு தம்மக்களிடம் இறைவனால் அருளப்பெற்ற புனிதக் கட்டளைகளை அறிவிக்க மட்டுமே முடிந்தது, அதிகாரம் செய்ய இயலவில்லை என்பதை அறியலாம் ஆகையால் ஏசு மோசேயைப் போல் அல்ல, ஆனால் முஹம்மது மோசேயை ஒத்திருக்கிறார்.
எ. புதிய சட்ட அமைப்புக் கொண்டு வந்ததில் மறு சீரமைப்புப் பணியில்.
6. முஹம்மது அரேபிய மக்களிடையே நிலவி வந்த அறியாமையையும், மூட பழக்க வழக்கங்களையும் அகற்றி அவர்களை நல்வழிப்படுத்தினார். முஹம்மது தனது மக்களின் (அரேபியர்களின்) நடைமுறையாக இருந்து வந்த வழக்கங்களான..
வளர்ப்புத் தாயை திருமணம் செய்து கொள்ளுதல்.
பெண் மகவுகளை உயிருடன் புதைத்தல்.
மது அருந்துதல்.
பிறர் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல்.
சிலை வணக்கம் செய்தல், சூதாடுதல், போன்ற கொடிய செயல்களை விட்டுத் தடுத்து அவர்களை நேர்வழிப்படுத்தினார்.
ஏ. வரலாற்று அறிஞர்களின் மனமார்ந்த சான்றுகள்.
பேராசிரியர் கிப்பன் (புiடிடிழn) என்ற வரலாற்று ஆசிரியர் தனது ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும், (னுநஉடiநெ யனெ குயடட ழக சுழஅயn நுஅpசைந) என்கிற நூலில் முஹம்மதுக்கு முன் உள்ள காலத்தில் வாழ்ந்து வந்த அரேபிய மக்களைப் பற்றித் தெரிவிக்கும்போது பின் வருமாறு கூறுகிறார்...
'இவர்கள் அறிவற்ற காட்டுமிராண்டிகளாக, மனிதர்கள் எனக் கருதக்கூடிய (ஒழுக்க ரீதியான) அடையாளம் ஏதுமில்லாது விலங்குகளாகக் காணப்பட்டனர். மிருகங்களுக்கும் இம்மனிதர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்பது இவர்களது மனித உருவம் மட்டும்தான் என்றிருந்தது'.
இவ்வாறு அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த மக்களை முஹம்மது நேர்வழிப் படுத்திய செய்தியை தாமஸ் கார்லைல் (வுhழஅழள ஊயசடலடந) தனது நூலில் தனது நூலில் (in வழ வுழசஉh டீநயசநசள ழக டுiபாவ யனெ டுநயசniபெ) பின் வருமாறு வர்ணிக்கிறார்...
'அரேபியா தனது இருளில் இருந்து புதிய வெளிச்சத்தைப் பெற்று அறியாமைக் களைந்தது. இவ்வுலகின் ஆரம்ப காலந்தொட்டே பாலைவனங்களில் ஆடு மேய்த்துக் கொண்டு ஒருவராலும் அறியப்படாமலிருந்து வந்த இம்மக்கள் உலக சமுதாயத்தில் தலை சிறந்தவர்களாக ஒளிரத் தொடங்கினர், முஹம்மதின் இந் நல்லொழுக்கம் கிரனாடாவிலிருந்து டெல்லி வரை பரவி, நூறு ஆண்டுகளுக்குள் அரேபியாவை புகழ் பெற்ற நாடாக மாற்றியது'.
இந்த சான்றுகள் பறைசாற்றும் உண்மை என்ன?, இவையெல்லாம் நமக்கு எதைக் காட்டுகின்றன? முஹம்மது (ஸல்) அவர்கள், தனது மக்களுக்கு முன்பு எப்போதுமில்லாத புதிய சட்டங்களையும், சீர் திருத்தங்களையும் கொண்டு வந்தார் என்பதையே இவையனைத்தும் நமக்குக் காட்டுகின்றன.
ஐ. ஏசுவின் அந்தஸ்து - பைபிளின் சான்றுகள்.
ஏசு தங்களது பழைய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் பழக்க நெறிகளைபும் மாற்றுகிறாரோ, என்று சந்தேகம் கொண்ட இஸ்ரவேலர்கள், இது பற்றி வினவியபோது அவர் புதிய வழிமுறைகளையோ, சட்டங்களையோ தாம் நடைமுறைப்படுத்தவில்லை - என்பதைத் தெளிவாகக் கூறுகிறார்.
'நியாயப் பிரமாணத்தையானாலும் அழிக்கிறதுக்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள், அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்' (புதிய ஏற்பாடு மத்தேயு அதிகாரம்-5 வசனம்-17)
'வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்., நியாயப் பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உருப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (புதிய ஏற்பாடு மத்தேயு அதிகாரம்-5 வசனம்-18)
ஆகையால் ஏசு புதிய சட்ட திட்டங்கள் எதையும் தனது மக்களிடம் நடைமுறைப் படுத்தவில்லை, என்றும் பழைய சட்டங்களையே பின்பற்ற வந்தார் என்றும் உணர்ந்து கொள்ளலாம். இவர் மோசேவினுடைய (நபி மூஸா (அலை) அவர்களுடைய) கட்டனைகளைப் பின்பற்றியும் ஓய்வு நாளை (சப்த் - சனிக்கிழமையை) கண்ணியப்படுத்தியும் வந்தார்.
எந்தவொரு யூதரும் ஏசுவிடத்தில் 'தாங்கள் செய்வது புதிய செயல் முறையாக இருக்கின்றனவே?' என்று ஏசுவிடம் வினவியதாகக் காணப்படவில்லை. எனவே ஏசு, மோசேவிடமிருந்து மாறுபடுகிறார், முஹம்மதை ஒத்திருக்கிறார்.
('உன்னைப் போல்' என்பது மோசேயைப் போல், முஹம்மதுதான், என்ற சான்றுகள் இன்னும் வரும்)
நன்றி.
தமிழ் இஸ்லாமிய ஆராய்ச்சி ஊடகம்

முஸ்லிம்கள் ஒன்றாக இருப்போமாக

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)

இப்னுமாஜா 11
11 حَدَّثَنَا أَبُو سَعِيْدٍ عَبْدُ اللهِ بْنُ سَعِيْدٍ ثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ قَالَ سَمِعْتُ مُجَالِدًا يَذْكُرُ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِيْنِهِ وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الأَوْسَطِ فَقَالَ هٰذَا سَبِيْلُ اللهِ ثُمَّ تَلاَ هٰذِهِ الآيَةَ ﴿ وَأَنَّ هٰذَا صِرَاطِي مُسْتَقِيْمًا فَاتَّبِعُوهُ وَلاَ تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهِ ﴾ الآية (الاَنْعَام : ۱۵۳)

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு, 'இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!' (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்' என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.(குறிப்பு: அஹ்மத் 4142,4437,15312 தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
விளக்கம்:

அஹ்மத் என்ற ஹதீஸ் நூலில் கீழ்கண்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நேர்கோடு வரைந்தார்கள். 'இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும்' என்றார்கள். அதன் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் கோடுகளை வரைந்தார்கள். 'இவைகள் தான் மற்ற வழிகளாகும், இந்த ஒவ்வொரு வழிகளிலும் சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு இந்த குர்ஆன் வசனத்தை ஓதினார்கள், 'இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!' (அல்குர்ஆன் 6:153) (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: அஹ்மத்)
இந்த ஹதீஸில் 'இவைகள் தான் மற்ற வழிகளாகும், இந்த ஒவ்வொரு வழிகளிலும் சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைக்கிறான்' என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
'இறைவனின் நேரான வழி' என்பது குர்ஆனும் சுன்னாவும் தான் என்பது மிகச் சுருக்கமான விளக்கமாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கீழ்காணும் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் சொல்லும் போது,'இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம், அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்' (அல்குர்ஆன் 6:153)'நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' (அல்குர்ஆன் 42:13)ஜமாத்தில் இணைந்திருக்குமாறு ஈமான் கொண்டவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான், மேலும் ஜமாத்தை விட்டு பிரிவதையும் சண்டையிட்டுக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் மார்க்கத்தில் பிரிவினையை உண்டாக்கியதாலும் சண்டையிட்டுக் கொண்டதாலும் அவர்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் அழிக்கப்பட்டார்கள்' என்றார்கள்.