திங்கள், 14 மே, 2012

ஜின்களின் பரம்பரை


ஜின்களை குறிப்பிட்டு குர்ஆன் குறிப்பிடுகையில் இவ்வுலகத்தில் தோன்றி வாழ்ந்து மடித்த மனித சமூகத்தை போலவே இந்த ஜின் இனத்திற்கும் தலைமுறைகள் நடந்துள்ளது என்ற குறிப்பையே எடுத்து இயம்புகிறது. 

வாழையடி வாழையாக மனிதன் பிறந்து எப்படி வாழ்கிறானோ அதன் பின் மரணத்தை தழுவி வேறொரு சமூகத்திற்கு தன் சந்ததிகள் மூலம் வித்திட்டுவிட்டு செல்கின்றான்.இது போலவே ஜின் இனம்  என்று அல்லாஹ் குறிப்பிடும் இந்த சமூகமும் வாழையடி வாழையாக வாழ்ந்து இறப்பையும் தழுவுகிறார்கள் என்ற ஒரு நுண்ணிய செய்தியை அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகின்றான் என்பதை நினைவுருத்துவதர்க்காகவே இந்த கட்டுரை வரையப்படுகிறது. அந்த வசனத்தை பார்க்கலாம் 

 46:18   أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
46:18. இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
 பிறிதொரு சந்ததிகள் ஜின் இனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக வேறு இறைத் தூதர் (ஸல் ) அவர்களின் ஹதீத்களின் மூலம் நமக்கு மேலதிகமான விளக்கங்கள் கிடைக்கின்றன.


1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 461. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
"இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேரு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

கப்ரில் ஒருவனை அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். என்ற நீண்ட ஹதீதின் கருவாவது நல்லவராக இருந்தால் ஒரே நேரத்தில் சொர்கத்தையும்,நரகத்தையும் காண்பார் நிராகரிப்பவராகவோ அல்லது நயவஞ்சகரகோவோ இருந்திருந்தால் வானவர்கள் அவனுக்கு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்." என்று கூறுகிறது 

இதில் உலகம் அழியும் வரை ஜின் இனம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற ஒரு தகவல் நமக்கு கிடைக்கிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்:
(இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய். 

மனித இனத்திற்கு உள்ள இறப்பையே ஜின் இனத்திற்கும் அல்லாஹ் ஏற்படுத்தி அதன் பரம்பரையையும் அல்லாஹ் தோற்றுவிக்கிறான் என்ற விசயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.









செவ்வாய், 13 செப்டம்பர், 2011

உங்கள் கரங்களால் தீங்கு நேருதல்

உலக மக்கள் நெறி தவறி சென்று விடாமல் ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்காக தான் நபிமார்கள்,இறைத்தூதர்கள் என்று பல வாராக இப்பூவுலக மக்களுக்கு வல்ல அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.எந்த இறைத்தூதருக்கும் பூமியில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததில்லை.

கொலை செய்யப்பட்ட நபிமார்கள் பலர் என்று அல்லாஹ்வின் இறுதி வேதமான திருக் குர் ஆன் நமக்கு விவரிக்கின்றது. அல்லாஹ் விதித்த விதியின் அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் அமைந்தாலும் இந்த இரு சாராருக்கும் ஒரு சுய அறிவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமைத்திருக்கின்றான் ஒருவன் அவனுடைய்ய விதியின் அடிப்படையில் தீயவனாக இருந்தாலும் அந்த மனிதன் திருடும் போதோ, கொலை செய்யும் போதோ அவனுக்கு ஒரு உதிப்பு தோன்றுகிறது.

அடடா இது சரியில்லாத செயலாச்சே பாவமாச்சே இதை செய்யக்கூடாது என்று அவனுடைய மனம் அவனுக்கு கட்டளை இடுகிறது. ஆனால் அந்த கட்டளை என்னும் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு சைத்தானின் பக்கமே சாய்ந்து அந்த மாபாதக செயலை செய்து விடுகின்றான். அல்லாஹ்வின் கட்டளை என்னும் சிந்தனை இல்லாமல் சைத்தானின் தூண்டுதல் மட்டும் ஒருவனுக்கு இருந்து அந்த காரியத்தில் ஈடுபட்டு தவறுகளை செய்திருந்தால் மறுமையில் நரக வேதனை என்ற தண்டனை பெற்றிருக்கமாட்டான்.

காரணம் சுய சிந்தனையாக ஒரு உதிப்பு பகுத்தறிவு ஒன்றை உனக்கு அமைத்தேனே தெரியுமா? அதை எப்படி மறந்துவிட்டு அந்த தகாத காரியத்தில் ஈடுபட்டாய் என்று கேட்பான் ஆனால் அவனுக்கு பதிலேதும் இருக்காது.இந்த இறக்கம் என்ற சிந்தனை அவனுக்குள் இருந்தும் தொடர்ந்து மனித சமூகம் மிகப் பெரிய குற்றங்கள் இன்னும் சிறிய குற்றங்கள் என பல தரப்பட்ட வகையில் செய்கின்றனர். இப்படி தவறு செய்பவர்களை குறிப்பிட்டு தான் அல்லாஹு தா ஆலா குர் ஆனில் கூறுகின்றான்.அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம் அது உங்கள் கரங்கள் சம்பாதித்ததால் தான், எனினும் பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான் ( குர் ஆன்:42:30 )

இதனால் தான் இந்த பூமியில் எங்காவது எப்பொழுதாவது பெரும் சீற்றங்கள் மூலம் அல்லாஹ்வின் தண்டனை இந்த உலக மக்களுக்கு கொடுக்கின்றான். ஆனால் பெரும்பாலானவற்றை அவன் மன்னிக்கவில்லை என்றால் இந்த உலக மக்கள் என்றோ எப்பொழுதோ அழிக்கப்பட்டிருப்பார்கள். அல்லாஹ் மகத்தானவன்.


வெள்ளி, 30 அக்டோபர், 2009

இயற்க்கை உறவுமுறைகளை மாற்றுவது பெரும்பாவம்

மனிதர்களில் பலர் மனைவிகளைப் பார்த்து தாய்க்கு ஒப்பாக நினைத்து அழைப்பது. அல்லது தாயை போல் மனைவி இருக்கின்றார் என்று சொல்வது கூட இறைவனிடம் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் பாவம் ஆகும்.

அதே போல் வளர்ப்பு பிள்ளையையும் பெற்ற மகனுக்கு ஒப்பிட்டு மகனே ! என்று அழைப்பதும் தவறாகிவிடுகிறது. காரணம் எது எந்த அடிப்படையில் இருக்கின்றதோ ! அதை தழுவி தான் நாம் அழைத்துக் கொள்ளவேண்டும் அல்லாமல் நாமலாக உறவு முறைகளை உருவாக்கி கொள்ளக் கூடாது என்பது தான் இறைவனின் கட்டளை.

உதாரணத்திற்கு பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சின்னப்பா, இப்படி இயற்கையாக உள்ள உறவு முறைகள் நாம் ஏற்படுத்திக் கொண்டது கிடையாது. நமக்கு இறைவனால் கிடைக்கப் பெற்றவை அது போலவே சகோதரி கணவன் மச்சான் என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு. தம் சகோதரிக்கு கணவனை நாம் தேர்ந்தெடுக்கின்ற காரணத்தால் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவு என்கிறோம். இதில் மச்சான் உறவு முறை அற்றுப் போய்விடவும் சாத்தியக் கூறு உள்ளது. அல்லது வேறொரு மச்சான் உறவை கூட நாம் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

ஆனால் பெரியம்மா பெரியப்பா முறைகளை நாம் நிர்ணயிக்கமுடியாது. இதை போலவே மகன், அல்லது, மகள் உறவையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டது இல்லை. இறைவனால் நமக்கு கிடைக்கப் பெற்றவை. இந்த இயற்க்கை முறையை தான் அல்லாஹ் நமக்கு கீழ் கானும் அழகான வசனத்தின் மூலம் தெரியப் படுத்தும் செய்தி

33:4 எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான் இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

மற்றொன்று முக்கியமான விஷயமும் இதில் அடங்கியுள்ளது. யாரை தன் பிள்ளை என்கின்றோமோ ! அன்றிலிருந்தே அந்த வளர்ப்பு மகனின் உண்மையான தாயின் கற்புக்கு அவதூறாக அமைந்துவிடுகின்றது வளர்ப்பவரின் வார்த்தை. இன்னும் அவரே வளர்ப்பு மகனின் தாயிடம் உறவு கொண்டதாக அபாண்ட வார்த்தையை தனக்குள்ளேயே பழி போட்டுக் கொண்டுவிடுகிறார்.

அதனால் வளர்ப்பு மகனை தன் பிள்ளை என்று அழைக்காமல். நண்பர்களாக அல்லது சகோதரர்களாக அழைக்கலாம். அதுவே அழகானது.
33:5 (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

புதன், 14 அக்டோபர், 2009

இரண்டு தடவை பூமியில் இருந்து வெளிப்படும் ஆதமின் சந்ததி

அல்லாஹுத் தஆலா முதல் மனிதர் ஆதாம் ( அலை ) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்ததை முன்னிறுத்தி. அந்தக் களிமன்னானது பூமியிலிருந்து எடுத்து படைக்கப் பட்டவர்தான் ஆதாம்.

அதனால் தான் பூமியில் விளையும் விளைச்சல்களையும், அதிலிருந்து பெறப் படும் நீரையும் நாம் உட்கொள்ளவேண்டியிருக்கின்றது.

பூமியில் கிடைக்கும் தாதுப் பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு இன்றியமையாதது.உதாரணத்திற்கு ஜின்க்- துத்தநாகம்,காப்பர்- தாமிரம், அயன்- இரும்பு, பைபெர்- இழை,நார் சத்து இன்னும் கால்சியம்- என்ற சுண்ணாம்பு சத்து இன்னும் அதிகதிமான மனிதர்களின் உடலுக்கு இவைகளின் அளவுகள் குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் மூலம் எடுத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாதுப் பொருட்கள் சிறுகச் சிறுக நம் உடலுக்கு மாத்திரைகளின் வழியாகவும் காப்சூல்களில் நிரப்பப் பட்டுள்ள சத்துகளின் உதவிக் கொண்டு நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

ஆகையால் மனிதர்களும் மற்றும் இதரப் படைப்புகளும் பூமியின் ஒரு பங்கு அல்லாமல் வேறில்லை.

20:55 இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம் அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

புதன், 7 அக்டோபர், 2009

நரகத்தில் இறை மறுப்பாளர்களும், இணை வைப்பாளர்களும்.

இறை மறுப்பாளர்கள் மரணத்திற்கு பின் தண்டிக்கப் படுவார்கள். என்பது திண்ணம் அவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் நிராகரிக்கப் படும். எந்த நர்ச் செயல்கள் இவ்வுலகத்தில் செய்து வைத்திருந்தாலும். அது கண்டுக் கொள்ளப்படமாட்டாது. தானமாக இருக்கட்டும், உயிர்த் தியாகமாக இருக்கட்டும், எதுவும் பலனளிக்காது. ஏன் ? இறைவன் இப்படி ஒரு புறக்கணிப்பை கொடுக்கின்றான்.

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

இப்படி எச்சரித்ததோடு அல்லாமல் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்திருக்கின்றான். அந்த அறிவு விலங்கினத்திற்கு இருப்பது போல் அல்ல.

தனி விசேஷ தன்மைகள் கொண்டது. அழைக்காத விருந்துபசரிப்புக்கு போக மாட்டார். கவ்ரவமான வாழ்க்கை வாழ்வார். காரணம் பகுத்தறிவு ஆடு,மாடுகள் போல் கண்ட மேனிக்கு உலாவமாட்டார். வரைமுறைகள் நிர்ணயித்துக் கொள்வார்.

தன் மனைவியை தனக்கு வேண்டியே ! திருமணம் செய்திருப்பார். தன் மனைவி தன்னை மட்டும் கணவன் என்று சொல்லணும் என்று எதிர் பார்பார்.அன்றியும் தனக்கு மட்டுமே அவள் மனைவியாக இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பு மாற்றமாக வேற யாரையாவது தன்னுடைய கணவன் என்று சொன்னால் ! எப்படி நமக்கு கோபம் வருமோ ! அந்த அளவுக்கு நம்மை கற்பிலிருந்து பரிபாலித்து வளர்த்து இன்றைக்கு வரை நம்மை பாது காத்து வைத்து இருக்கும் ஏக இறைவனுக்கு வேற ஒருவரை இணை கற்பிப்பது. கோபமூட்டக் கூடிய செயலாகும் அது மன்னிக்க முடியாத மா பாதக குற்றமாகும்.

இப்படி சிந்திக்கும் பகுத்தறிவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கொடுத்த பின்பே ,நல்லது மற்றும் தீயதை இனங்காட்டி அறியக்கூடிய சக்தி அனைவருக்கும் இருப்பதாலேயே ! மனிதர்களுக்கு மட்டும் நரகம் என்றும் சுவனம் என்றும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.

35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை' (என்று கூறுவான்).

சனி, 18 ஜூலை, 2009

வஹி அறிவிக்கப்பட்ட தாய் !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அன்பிர்க் குரிய சகோதரர்களே ! நாம் பலவாறாக இறைச் செய்தியை வல்ல ரஹ்மான் ஜிப்ரீல் ( அலை ) மூலம் மாந்தர்களுக்கு நேர்வழி காட்டும் முகமாக ஆதாம் நபி முதற்கொண்டு இறுதி நபியாகிய முஹம்மது ( ஸல் ) அவர்கள் வரை ஆண் பாலரிலிருந்தே நபியை அனுப்பியுள்ளான்.

திருக் குர்ஆனின் போதனையும் இந்த வரைமுறைக்கு உட்பட்டதே ! அதாவது நபியோ அல்லது. ரசூலோ அனைவரும் ஆண் இனமே அல்லாமல் பெண் இனத்தில் எந்த தூதரும் கிடையாது. அது. அல்லாஹ்வின் நியதி. அது மனிதர்களுக்குண்டான நியதி.

ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். தனக்கென்று எந்த நியதியும் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுளோம். ( வஹி ) என்ற இறைச்செய்தியை ஜிப்ரீல் ( அலை ) மூலமும் நபி மூஸா ( அலை ) இடம் அருளியுள்ளான். வானவர் ஜிப்ரீல் அல்லாமலும் திரைக்கு அப்பாளிலிருந்தும் மூசாவிடம் பேசியுள்ளான் என்பதும் யாவரும் அறிந்ததே !

அந்த வஹி என்ற இறைச்செய்தியை தனிப்பட்ட முறையில் வேத வெளிப்பாடு அல்லாமல் நம்பிக்கையாளர் ஒழுக்கச் சீலர் என்ற முறைப்படி மற்ற பாலருடனும் அல்லாஹ் பேசியுள்ளான். என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அது தான் உலகத்தின் உயர்ந்தப் பெண்மணி மரியம் ( அலை ) அவர்கள். அனைவரும் அறிந்ததே.

மற்றொரு தாய். அவர் தான் நபி மூஸா ( அலை ) அவர்களின் தாய் அவரிடமும் ஏக இறைவன் வஹி மூலம் பேசியுள்ளான். அதைப் பாருங்கள்

28:7 நாம் மூஸாவின் தாயாருக்கு: 'அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம் நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்' என்று வஹீ அறிவித்தோம்.

ஞாயிறு, 24 மே, 2009

மரித்தோர் செவியேற்க மாட்டார்

இறந்து போனவர்களால் மற்றவர்களின் உரையாடலை கேட்க்க முடியுமா ? என்றால் அது முடியாது. உயிரோடு உள்ளவர்கள் பல கலந்துரையாடல்கள் மூலம் இன்னொருவரின் பேச்சுக்கு மருப்புரைப்பது. அல்லது ஆமோதிப்பது.

மற்றவை நண்பர்களுடன் நேரங்காலம் தெரியாமல் பல வகையான பேச்சுக்கள் பேசுவது. வினாக்கள் சார்ந்த வார்த்தைகள் வலம் விட்டு. பதில் பெற்றுக்கொவது. கிரிக்கெட் ஸ்கோர் என்ன ? என்றெல்லாம் கேட்டு அந்த கணமே நண்பர்களிடம் விடையையும் பெற்றுக்கொள்ளும் வார்த்தைகள் ஏராளம். கருத்துக்கள் பலவகைகள் பரிமாறிக்கொள்வது. ஏராளம். மனதில் ஆழமாக ஏற்றிக்கொள்ளும் புதிய சிந்ந்தனை கருத்துக்கள் ஏராளம். யாராவது. குற்றம் சுமத்தினால் அவதூறு சுமத்தினால் எதார்த்த நிலையிலிருந்து மாறி சினங்கொண்டு. ஆவேசப்பட்டு வாயில் வந்தவையெல்லாம் வீசியிடும். மறு வார்த்தைகள் ஏராளம்

அதற்க்கு அதாரத்தோடு மறுப்பு தெரிவிக்கும் தன்னை குற்றமற்றவர் என்று வாதாடும் வாசகங்கள் ஏராளம். தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசும் மனிதர்கள் ஏராளம் எங்கிருந்தோ பேசும் இன்னொருவரின் பேச்சுக்கு பதில் கொடுப்பது. புரியவில்ல மறுபடி சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுவது.

இவை எல்லாம் நாம் உயிரோடு இருப்பதால் இயல்பாக நடக்கும் சம்பவங்களுக்கு பதிலளிக்கிறோம்.
இது மாதிரி இறந்தவர்களால் செவிஏற்க முடியுமா ? உடனுக்குடன் மறுப்பு சொல்ல முடியுமா ? முடியாது. நாம் பகலில் உறங்கும் பொழுது யாராவது பேசினால் எப்படி அறையும் குறையுமாக விளங்குகிறது. அதே நேரத்தில் நமக்கு எதிராக யாராவது பேசினாலும் சட்டென்று பதிலளிக்க முடியாது.

இந்த நிலைப் பாட்டைவிட இன்னும் கீழானவைதான் இறப்பு. இன்னும் தூக்கமும் ஒரு இறப்பாக இறைவன் நமக்கு அறிவிக்கின்றான். தூக்க நிலைப்பாட்டில் உள்ள இறப்பை நாம் அளவுகோலாக எடுத்து. அந்த நேரத்தில் நடக்கும் பேச்சுக்களுக்கே பதில் கொடுக்க முடியாத நம்மை தெளிவாக கேட்க்க முடியாத மனிதர்கள்.

இறந்தவர்களாக மகான் என்ற பெயரிலும் சூபிய் என்ற பெயரிலும் கேட்க்க முடியும் என்பது. அறிவை வட்டிக் கடையில் அடகு வைத்து மீட்க்கமுடியாமல் மூழ்கவைப்பதற்கு சமமாகும். இறைவாக்கான குர்ஆனை பற்றிப் பிடிப்போமாக.

35:14 நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார் செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள் கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள் யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.