ஜின்களை குறிப்பிட்டு குர்ஆன் குறிப்பிடுகையில் இவ்வுலகத்தில் தோன்றி வாழ்ந்து மடித்த மனித சமூகத்தை போலவே இந்த ஜின் இனத்திற்கும் தலைமுறைகள் நடந்துள்ளது என்ற குறிப்பையே எடுத்து இயம்புகிறது.
வாழையடி வாழையாக மனிதன் பிறந்து எப்படி வாழ்கிறானோ அதன் பின் மரணத்தை தழுவி வேறொரு சமூகத்திற்கு தன் சந்ததிகள் மூலம் வித்திட்டுவிட்டு செல்கின்றான்.இது போலவே ஜின் இனம் என்று அல்லாஹ் குறிப்பிடும் இந்த சமூகமும் வாழையடி வாழையாக வாழ்ந்து இறப்பையும் தழுவுகிறார்கள் என்ற ஒரு நுண்ணிய செய்தியை அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகின்றான் என்பதை நினைவுருத்துவதர்க்காகவே இந்த கட்டுரை வரையப்படுகிறது. அந்த வசனத்தை பார்க்கலாம்
46:18 أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
46:18. இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
பிறிதொரு சந்ததிகள் ஜின் இனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக வேறு இறைத் தூதர் (ஸல் ) அவர்களின் ஹதீத்களின் மூலம் நமக்கு மேலதிகமான விளக்கங்கள் கிடைக்கின்றன.
"இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேரு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கப்ரில் ஒருவனை அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். என்ற நீண்ட ஹதீதின் கருவாவது நல்லவராக இருந்தால் ஒரே நேரத்தில் சொர்கத்தையும்,நரகத்தையும் காண்பார் நிராகரிப்பவராகவோ அல்லது நயவஞ்சகரகோவோ இருந்திருந்தால் வானவர்கள் அவனுக்கு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்." என்று கூறுகிறது
இதில் உலகம் அழியும் வரை ஜின் இனம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற ஒரு தகவல் நமக்கு கிடைக்கிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்:
(இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.
மனித இனத்திற்கு உள்ள இறப்பையே ஜின் இனத்திற்கும் அல்லாஹ் ஏற்படுத்தி அதன் பரம்பரையையும் அல்லாஹ் தோற்றுவிக்கிறான் என்ற விசயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News